Posts

Showing posts from 2012

பொய் பேசுவதனால் ஏற்படும் தீங்குகள்

                                 அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...  அனைத்து புகழும் அகிலங்களின் இறைவனான அல்லாஹ்வுக்கே. வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை என்று நான் சட்சி கூறுகிரறேன். மேலும் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதரும் உண்மை அடியாரும் ஆவார்கள் எனவும் நான் சாட்சி கூறுகிறேன். பொய் பேசுவது என்பது மனித சமுதாயத்தை சீர்கேட்டிற்கு இட்டுச் செல்லும் ஒரு தீய செயலாகும். உலகில் உள்ள அனைத்து மதங்களும், கொள்கை கோட்பாடுகளும் இதனை குறித்து எச்சரிக்கின்றன. சத்திய இஸ்லாமிய மார்க்கத்திலோ பொய் பேசுவதை தடை செய்திருப்பதோடல்லாமல் இதன் விளைவுகளைப் பற்றி மிக கடுமையாக எச்சரிக்கப் விடப்பட்டுள்ளது. 1) பொய் பேசுவது ஹராமானது ஆகும்! அ) அல்லாஹ்வின் வேதத்தை நம்பாதவர்கள் தான் பொய் பேசுவார்கள்: – அல்லாஹ் கூறுகிறான்: - “நிச்சயமாக பொய்யை இட்டுக் கட்டுவதெல்லாம் அல்லாஹ்வின் வசனங்களை நம்பாதவர்கள் தாம்; இன்னும் அவர்கள் தாம் பொய்யர்கள்” (அல்-குர்ஆன் 16:105) ஆ...

புதுவாழ்வு பிறக்கட்டும்

                         இஸ்லாமிய ஹிஜ்ரி ஆண்டு பிறையை அடிப்படையாகக் கொண்டதாகும். பிறைமாதத்தின் முதல் மாதமாக முஹர்ரம் திகழ்கின்றது. இந்த இதழ் உங்கள் கரங்களை வந்தடையும் போது ஹிஜ்ரி 1432 முடிவுற்று, ஹிஜ்ரி 1433 துவங்கியிருக்கும். இஸ்லாமிய புது வருடம் பிறந்திருக்கும். இஸ்லாத்தில் புது வருடத்திற்கென தனியான எந்தக் கொண்டாட்டங்களும் இல்லை. என்றாலும், இஸ்லாமிய மாதக் கணிப்பீட்டையும், ஒரு வருடம் முடிகின்றது. மறு வருடம் தொடர்கின்றது என்ற உண்மையுமாவது முஸ்லிம்கள் உணர்ந்திருப்பது அவசியமாகும். அல்லாஹ் உங்களை விசாரிப்பதற்கு முன்னர், உங்களை நீங்களே சுயவிசாரனை செய்து கொள்ளுங்கள் என்று கூறுவர். கடந்த வருடம் எம் வாழ்வில் ஏற்பட்ட மாற்றம் என்ன? எமது வாழ்வில் கடந்த வருடங்களில் ஆன்மீக, லௌஹீக முன்னேற்றங்கள் என்ன? என்பது குறித்து சிந்தனை செய்வது அவசியமாகும். குறிப்பாக இஸ்லாமிய அமைப்புக்கள் கடந்த வருடம் நாம் அடைந்த இலக்குகள் எவை? இந்த வருடத்தில் நாம் அடைய இருக்கும் இலக்குகள் எவை? என்பவை குறித்த சிந்தனையோட்டம...