கண் அல்லாஹ் வழங்கிய அருட்கொடை நாம் காண்பதை ரசிப்பதற்கு நமக்கு அளிக்கப்பட்டிருக்கும் அதிசய உறுப்பு கண் ஆகும். நமது கண் ஒரு நிழற்படக் கருவியைப் போன்று இயங்குகிறது . ஒளியின் உதவியுடன் ஒரு நிழற்படக் கருவி பொருட்களைப் படம் பிடிப்பதைப் போல, நமது கண்ணும், ஒளியின் உதவியுடன் பொருட்களின் உருவத்தை கணப்பொழுதில் படம் பிடித்து, மனதில் பதிவு செய்து, பின்பு அதை மூளையில் விருத்திச் செய்கிறது. கண்ணின் அனைத்து பாகங்களும் ஒருங்கிணைந்து, ஒரு குழுவைப் போன்று இயங்கி, நமக்குப் பார்வை அளிக்கிறது. இதில் பிம்பத்தை தேக்கும் வல்லமையுள்ள விழிப்படலம் என்ற பாகம் முக்கிய பங்கு வகிக்கிறது. கருமையான ‘கண்மணி’க்குள் நுழையும் ஒளிக்கதிர்களை, விழிப்படலம் (cornea) திசை திருப்புகிறது. திசை திரும்பிய ஒளிக்கதிர், ‘கண்மணி’க்குப் பின்னால் உள்ள குவிஆடியைச் சென்றடைகிறது. இந்த ஆடி, தனது உருவத்தை மாற்றிக் கொண்டு, தொலைவில் மற்றும் அருகில் உள்ள பொருட்களின் மீது ஒளிக்கதிர்களை ஒருமுனைப்படுத்துகிறது. இச்செயல் ‘அக்காமடேஷன்’எனப்படுகிறது. நிழற்படக்கருவியிலுள்ள பிம்பத்தேக்கியைப் (film) போன்று இயங்கும், விழித்திரை (ஒளி...
Posts
Showing posts from 2014
- Get link
- X
- Other Apps
"உண்பதற்க்கு காத்திருப்போர் சாப்பாட்டுப் பாத்திரத்தை (நோக்கி) பாய்வதைப் போன்று மற்ற சமூகத்தினர் என்னுடைய சமுதாயத்தவர்கள் மீது பாய்ந்து விடும் காலம் வரும்" என்று ஒரு முறை நபி (ஸல்) அவர்கள் கூறியபோது ஒருவர் கேட்டார் : " இறைத்தூதர் அவர்களே ! அந்த காலகட்டதில் மற்ற சமுகத்தினர் ஒன்றுபட்டு நம்மைத்தாக்கி, நம்மை விழுங்கிவிடுவார்களோ, என்று அச்சப்படும் வகையில் நம்முடைய சமுதாயம் எண்ணிகையில் மிகவும் குறைவாக ஆகிவிடுமோ ?" "இல்லை ! அப்போது நீங்கள் எண்ணிக்கையில் குறைந்தவர்களாக இருக்கமாட்டீர் கள். மாறாக வெள்ளத்தில் அடித்து வரும் நுரையைப் போன்று நீங்கள் அப்போது மதிப்பற்றவர்களாக ஆகிவிடுவிர்கள் ! உங்களைக் குறித்து மதிப்பச்சம் (மற்றவர்களிடம் ) இல்லாது போகும். கோழைத்தனமும், தைரியமின்மையும் உங்கள் உள்ளத்தில் குடி கொண்டுவிடும்." அப்போது ஒருவர் கேட்டார் : " இறைத்தூதர் அவர்களே ! இந்த பலகீனம் எங்களிடம் ஏற்படுவதற்க்கு காரணம் என்ன ? " இதற்க்கு காரணம் இதுவே ! நீங்கள் உலகமோகத்தில் முழ்கி விடுவீர்கள். மேலும், மரனத்தை விட்டு ஓடுவீர்கள்.மேலும் அதனை வெறுக்கத் தொடங்குவீர்கள் !...
- Get link
- X
- Other Apps
மூட்டு வலிகளுக்கு நபிமொழி மருத்துவம்... www.abu_mahira@yahoo.com இன்று ஆண்களிலும், பெண்களிலும் அதிகமானவர்கள் இந்த மூட்டு வலியினால் அவதிப்படுகின்றனர். எனவே இந்த நபிமொழியைப் பின்பற்றலாமே ! "அத்திப்பழம் சாப்பிடுங்கள். 'சொர்கத்திலிருந்து இறங்கிய பழம்' ஒன்று உண்டென்றால், அது அத்திப்பழமேயாகும். சொர்கத்துப் பழங்களில் விதை கிடையாது. (அத்திப்பழமும் அப்படியே) எனவே, அதைச் சாப்பிடுங்கள். அது மூலத்தைப் போக்குகிறது; மூட்டு வலிகளை நீக்குகிறது" என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பாளர் : அபூதர் (ரழி) ஆதாரம் : கன்ஜுல் உம்மால் : 28276
- Get link
- X
- Other Apps
நபிவழி மருத்துவம் ஜலதோஷத்திற்கு உடனடி மருத்துவம் செய்யாதீர்கள். எல்லா மனிதரின் தலையிலும், தொழு நோயைத் தோற்றுவிக்கும் ஒரு நரம்பு இருக்கிறது. அது புடைக்கும் போது, அதன் மீது அல்லாஹூ த ஆலா ஜலதோஷத்தைச் சாட்டுகிறான். எனவே ஜலதோஷத்திற்கு உடனடி நிவாரணம் தேடாதீர்கள். அறிவிப்பாளர் : ஆயிஷா (ரழி) : முஸ்தத்ரக் ஹாகிம் : 8262
- Get link
- X
- Other Apps
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்தஹு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வார்த்தை உண்மையானது : சர்வதேச விஞ்ஞானம் அதிர்ச்சி....!! இறைவனின் இறுதி தூதரான நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 1400 ஆண்டுகளுக்கு முன்பு கூறிய வார்த்தை இன்று கண் முன்னால் நடப்பதை கண்ட விஞ்ஞான உலகம் அதிர்ச்சியில் திகைத்து உள்ளது. மேற்கு ஆசியாவிலுள்ள யூப்ரடீஸ் நதி வற்றி, அதில் தங்க புதையல் உண்டாவது மறுமை நாளுக்குறிய அடையாளமாக உலக மக்களுக்கு பிரகடனம் செய்தார்கள். மேலும் தங்க புதையலை காண்பவர்கள் அதிலிருந்து எதையும் எடுக்க கூடாது என்றார்கள். ஆனால் யூப்ரடீஸ் நதியை ஆரம்பத்தில் ஆய்வு செய்து சமர்ப்பித்த விஞ்ஞானிகள் நதி வற்றுவதற்கு வாய்ப்பே இல்லை என்று கூறினார்கள். காலங்கள் கடந்து செல்ல செல்ல இன்றைய விஞ்ஞான உலகம் ஆய்வு மேற்கொண்டு யூப்ரடீஸ் நதி 70 சதவீதம் வற்றி விட்டதாக அறிவித்துள்ளது. நாசாவின் Gravity Recovery and Climate Experiment (GRACE) என்ற அமைப்பு யூப்ரடீஸ் நதி 70 சதவீதம் வற்றி விட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. (அல்லாஹு அக்பர்) நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உலக மக்களுக்கு கொடுத்த எச்சரிக்கை.... (மேற்காசியாவில் ப...
- Get link
- X
- Other Apps
அன்று சொன்னவை என்றும் அர்த்தமுள்ளவை... ﻋﻦ ﺣﻔﺼﺔ، ﺯﻭﺝ اﻟﻨﺒﻲ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ، ﺃﻥ ﺭﺳﻮﻝ اﻟﻠﻪ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻛﺎﻥ ﺇﺫا ﺃﺭاﺩ ﺃﻥ ﻳﺮﻗﺪ ﻭﺿﻊ ﻳﺪﻩ اﻟﻴﻤﻨﻰ ﺗﺤﺖ ﺧﺪﻩ ﺛﻢ ﻳﻘﻮﻝ: «اﻟﻠﻬﻢ ﻗﻨﻲ ﻋﺬاﺑﻚ ﻳﻮﻡ ﺗﺒﻌﺚ، ﻋﺒﺎﺩﻙ ﺛﻼﺙ ﻣﺮاﺭ» ﺻﺤﻴﺢ நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், தமது வலது கையை, வலதுபுறக் கன்னத்தின் கீழ் வைத்துப் படுத்தவர்களாக, இந்த துஆவை மூன்று முறை ஓதுவார்கள். அறிவிப்பாளர் : ஹஃப்ஸா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள். நூல் : அபூதாவூது 5045 இன்று மருத்துவர்கள் வலதுபுறமாக படுத்து தூங்கினால் இதயம் சீராக செயல்படும் என்கிறார்கள். எனவே இனி நம்முடைய உலகவாழ்வில் நம்முடைய மார்க்கம் சொல்கிற முறைப்படி வாழ முயற்சி செய்வோம். அன்று சொன்னவை என்றும் அர்த்தமுள்ளவை தான்! நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தூங்குவதற்கு முன் பல துஆகளை ஓதி இருக்கிறார்கள். அதில் ஒன்று... தூங்கும் முன் اَللّهُمَّ أَسْلَمْتُ وَجْهِيْ إِلَيْكَ وَفَوَّضْتُ أَمْرِيْ إِلَيْكَ وَأَلْجَأْتُ ظَهْرِيْ إِلَيْكَ رَغْبَةً وَرَهْبَةً إِلَيْكَ لاَ مَلْجَأَ وَلاَ مَنْجَا مِنْكَ إِلاَّ إِلَيْكَ اَللّهُمَّ آمَنْتُ بِكِتَابِكَ الَّذِي أَنْزَلْتَ وَبِنَبِي...
- Get link
- X
- Other Apps
அண்ணலாரின் அழகிய அறிவுரை... ﻋﻦ ﺃﺑﻲ ﻫﺮﻳﺮﺓ، ﻗﺎﻝ: ﻗﺎﻝ ﺭﺳﻮﻝ اﻟﻠﻪ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ: «ﺇﺫا ﻣﺮﺭﺗﻢ ﺑﺮﻳﺎﺽ اﻟﺠﻨﺔ ﻓﺎﺭﺗﻌﻮا». ﻗﻠﺖ: ﻳﺎ ﺭﺳﻮﻝ اﻟﻠﻪ ﻭﻣﺎ ﺭﻳﺎﺽ اﻟﺠﻨﺔ؟ ﻗﺎﻝ: «اﻟﻤﺴﺎﺟﺪ»، ﻗﻠﺖ: ﻭﻣﺎ اﻟﺮﺗﻊ ﻳﺎ ﺭﺳﻮﻝ اﻟﻠﻪ؟ ﻗﺎﻝ: «ﺳﺒﺤﺎﻥ اﻟﻠﻪ ﻭاﻟﺤﻤﺪ ﻟﻠﻪ ﻭﻻ ﺇﻟﻪ ﺇﻻ اﻟﻠﻪ ﻭاﻟﻠﻪ ﺃﻛﺒﺮ "நீங்கள் சுவனச் சோலையின் பக்கம் செல்லும் போது நன்கு மேய்ந்து கொள்ளுங்கள்" என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், நபித்தோழர்களிடம் கூறிய போது, 'சுவனச் சோலை என்றால் என்ன?' என்று நபித்தோழர்கள் கேட்டதற்கு, 'பள்ளிவாசல்கள்' எனப் பதில் கூறினார்கள். 'மேய்ந்து கொள்ளுதல் என்றால் என்ன?' என்று மீண்டும் ஸஹாபாக்கள் கேட்க, அதுதான்... ( ஸுப்ஹானல்லாஹி வல்ஹம்துலில்லாஹி வலா இலாஹ இல்லல்லாஹு வல்லாஹு அக்பர்) என்ற திக்ராகும் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் விளக்கமளித்தார்கள். அறிவிப்பாளர் : அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள். நூல் : திர்மிதீ 3509 அன்பானவர்களே! இன்று உலக அளவில் அதிகமானவர்கள் மனநிம்மதி, மனநிறைவு இல்லாமல் இருப்பதாக ஒரு ஆய்வு தகவல் சொல்கிறது. ஆனால் இஸ்லாமிய மார்க்கத்தில் இதற்கு வழி அன்றே சொல்ல...
- Get link
- X
- Other Apps
அன்று சொன்னவை என்றும் அர்த்தமுள்ளவை... ﻋﻦ ﺃﺑﻲ ﻫﺮﻳﺮﺓ، ﺃﻥ ﺭﺳﻮﻝ اﻟﻠﻪ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻗﺎﻝ: «ﺑﺎﺩﺭﻭا ﺑﺎﻷﻋﻤﺎﻝ ﺳﺒﻌﺎ ﻫﻞ ﺗﻨﻈﺮﻭﻥ ﺇﻻ ﺇﻟﻰ ﻓﻘﺮ ﻣﻨﺲ، ﺃﻭ ﻏﻨﻰ ﻣﻄﻎ، ﺃﻭ ﻣﺮﺽ ﻣﻔﺴﺪ، ﺃﻭ ﻫﺮﻡ ﻣﻔﻨﺪ، ﺃﻭ ﻣﻮﺕ ﻣﺠﻬﺰ، ﺃﻭ اﻟﺪﺟﺎﻝ ﻓﺸﺮ ﻏﺎﺋﺐ ﻳﻨﺘﻈﺮ، ﺃﻭ اﻟﺴﺎﻋﺔ ﻓﺎﻟﺴﺎﻋﺔ ﺃﺩﻫﻰ ﻭﺃﻣﺮ "ஏழு விஷயங்கள் ஏற்படும் முன், நற்செயல்களை விரைவாக செய்யுங்கள். 1) மறதியை ஏற்படுத்தும் வறுமை. 2) அநீதம் செய்யத் தூண்டும் செல்வம். 3) மோசமான நோய். 4) பேச்சில் தடுமாற்றம் ஏற்படும் முதுமை. 5) திடீர் மரணம். 6) எதிர்பார்க்கப்படும் தஜ்ஜால், (மறைவானவற்றில் மிகப்பெரும் தீமை இவனே) 7) மறுமை தீர்ப்பு நாள் ஆகிய இந்த ஏழைத் தவிர, வேறொன்றையும் எதிர்பார்த்திருக்காதீர்கள்.(விரைந்து) நற்செயல் செய்யுங்கள்" என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள். நூல் : திர்மிதீ 2306 இந்த ஹதீஸை நன்கு சிந்தித்துப் பாருங்கள். ஒரு உண்மை புரியும்.அதாவது இந்த ஏழு நிலைமைகள் ஏற்பட்டால் மனிதன் நன்மை செய்யவேண்டும், என்று நினைத்தாலும் கூட முடியாது.இன்னும் அதிகமான மன உளைச்சலுக்கு மனிதன் ஆளாகுவான் என்பதையும் இந்த...
- Get link
- X
- Other Apps
விரல்களும் மருத்துவமும் **************************************** 1. சின் முத்திரை அல்லது ஞான முத்திரை: கட்டை விரல் மற்றும் ஆள்காட்டி விரல் நுனிகள் இரண்டும் தொட்டுக்கொண்டு இருக்க வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். இதை செய்வது மனத்தை ஒருநிலைப்படுத்த உதவும். மூளை செல்கள் புத்துணர்ச்சி பெறும். தலைவலி, தூக்கமின்மை, கவலை, கோபம் ஆகியவை விலகும். 2. வாயு முத்திரை: ஆள்காட்டி விரலைக் கட்டை விரலின் அடிப்பகுதியில் வைத்து கட்டை விரலால் சிறிது அழுத்தம் கொடுக்க வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். இதை செய்தால் வாயு தொடர்பான நோய்கள் போகும். ரத்த ஓட்டம் சீராகும். 3. சூன்ய முத்திரை: நடுவிரலை, கட்டை விரலின் அடிப்பகுதியில் வைத்து கட்டை விரலால் அழுத்த வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். இதனால் காதில் நீர் வடிதல், காது வலி, காது அடைப்பு போன்றவை சீராகும். எலும்பு தளர்ச்சி மற்றும் இதய நோய் தவிர்க்கப்படும். தசைகள் வலுவடையும். தைராய்டு நோயிலிருந்து நிவாரணம் கிடைக்கும். 4 .பிருதிவி முத்திரை: பெருவிரல் மற்றும் மோதிர விரலின் நுனிப்பாகம் தொட்டுக் ...
- Get link
- X
- Other Apps
அன்று சொன்னவை என்றும் அர்த்தமுள்ளவை... அன்று சொன்னவை என்றும் அர்த்தமுள்ளவை... عمرو بن شعيب، عن أبيه، عن جدهِ رضي الله عنه قَالَ: قَالَ رَسُول الله صلى الله عليه وسلم: ((مُرُوا أوْلادَكُمْ بِالصَّلاةِ وَهُمْ أبْنَاءُ سَبْعِ سِنينَ، وَاضْرِبُوهُمْ عَلَيْهَا، وَهُمْ أبْنَاءُ عَشْرٍ، وَفَرِّقُوا بَيْنَهُمْ في المضَاجِعِ)). حديث حسن رواه أَبُو داود بإسناد حسن. "உங்களின் குழந்தைகளை, அவர்கள் ஏழு வயதாகும் சமயம் தொழும்படி ஏவுங்கள்.அவர்கள் பத்து வயது ஆகும் போது, இதற்காக அவர்களை (லேசாக) அடியுங்கள். மேலும் அவர்களுக்கிடையே படுக்கைகளைப் பிரித்துப் போடுங்கள்" என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : அம்ர் இப்னு ஷுஐப் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள். நூல் : அபூதாவூது 495 இந்த ஹதீஸில் நமது குழந்தைகளை எப்படி பராமரிக்கவேண்டும் என்கிற அழகிய வழிமுறையை இறைத்தூதர், நமது தலைவர் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியிருக்கிறார்கள். இதில் மூன்றாவது விஷயத்தில் நாம் நமது அறிவைப் பயன்படுத்துகிறோம்.இது தவ...
- Get link
- X
- Other Apps
அன்று சொன்னவை என்றும் அர்த்தமுள்ளவை... அன்று சொன்னவை என்றும் அர்த்தமுள்ளவை... ﻋﻦ ﻣﻘﺪاﻡ ﺑﻦ ﻣﻌﺪﻱ ﻛﺮﺏ، ﻗﺎﻝ: ﺳﻤﻌﺖ ﺭﺳﻮﻝ اﻟﻠﻪ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻳﻘﻮﻝ: «§ﻣﺎ ﻣﻸ ﺁﺩﻣﻲ ﻭﻋﺎء ﺷﺮا ﻣﻦ ﺑﻄﻦ. ﺑﺤﺴﺐ اﺑﻦ ﺁﺩﻡ ﺃﻛﻼﺕ ﻳﻘﻤﻦ ﺻﻠﺒﻪ، ﻓﺈﻥ ﻛﺎﻥ ﻻ ﻣﺤﺎﻟﺔ ﻓﺜﻠﺚ ﻟﻄﻌﺎﻣﻪ ﻭﺛﻠﺚ ﻟﺸﺮاﺑﻪ ﻭﺛﻠﺚ ﻟﻨﻔﺴﻪ "வயிறு ஒரு மோசமான பாத்திரமாகும். சாப்பிடும்போது, வயிற்றின் மூன்றில் ஒரு பங்கில் உணவும், மற்றொரு பங்கில் தண்ணீரும், மற்றொரு பங்கு சுவாசத்திற்காகவும் இருக்க வேண்டுமென" நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : மிக்தாம் இப்னு மஃதீ கரப் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் நூல் : திர்மிதீ 2380 இன்று இந்த விஷயத்தைத்தான் மருத்துவர்கள் சொல்லுகிறார்கள்.இதைத்தான் அன்றே நமது தலைவர் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அன்றே சொல்லிவிட்டார்கள். அன்று சொன்னவை என்றும் அர்த்தமுள்ளவை தான்.
முல்லாவின் புத்திசாலித்தனம்
- Get link
- X
- Other Apps
ஒரு பெரிய செல்வந்தனிடம் கொஞ்ச காலம் முல்லா வேலை பார்த்து வந்தார். ஒரு நாள் முல்லா தொடர்ந்து மூன்று தடவை கடைத் தெருவுக்குச் சென்று வந்ததை அவருடைய முதலாளி கண்டு அவரைக் கூப்பிட்டு விசாரித்தார். நீர் ஏன் மூன்று தடவை கடைக்குச் சென்றீர் ?என்று கேட்டார் அவர். கோதுமை வாங்குவதற்காக ஒரு தடவை கடைக்குப் போனேன். அடுத்த தடவை நான் போனது முட்டை வாங்குவதற்காக மூன்றாவது தடவையாக எண்ணெய் வாங்கச் சென்றேன் என்றார் முல்லா. அதைக் கேட்டு முதலாளி கோபம் அடைந்தார். கடைக்குச் செல்லுவதற்கு முன்னால் என்னென்ன தேவை என்பதைப் பற்றி முன்னதாகவே தீர்மானித்துக் கொள்வது அல்லவா புத்திசாலித்தனம் ? ஒவ்வொரு பொருளையும் வாங்க ஒவ்வொரு தடவை கடைக்குச் செல்வது எவ்வளவு பெரிய மடத்தனம். இனி இந்த மாதிரித் தவறைச் செய்யாதே என்று முல்லாவை எச்சரித்து அனுப்பினார். ஒரு தடவை முல்லாவின் முதலாளியான செல்வந்தருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு விட்டது. அவர் முல்லாவை அழைத்து உடனே சென்று மருத்துவரை அழைத்து வா என்று உத்தரவிட்டார். முல்லா விரைந்து சென்றார். சற்று நேரங்கழித்து முல்லா வீடு திரும்பிய போது அவருடன் மூன்று மனிதர்கள் வந்திர...
யார் யாசிக்கலாம்
- Get link
- X
- Other Apps
யார் யாசிக்கலாம் ? கபீஸா பின் முகாரிக் (ரலி) அவர்கள் கூறியதாவது : நான் (மற்றொருவர் செலுத்த வேண்டிய ) ஓர் இழப்பீட்டுத் தொகைக்குப் பொறுறுப்பேற்றுக்கொண்டு, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஏதேனும் கேட்பதற்காகச் சென்றேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்,"தர்மப்படி பொருட்கள் நம்மிடம் வரும் வரை இங்கேயே இருங்கள். அதில் ஏதேனும் உங்களுக்குத் தரச் சொல்கிறோம்" என்று கூறினார்கள். பிறகு (பின்வருமாறு) கூறினார்கள் : கபீஸா ! மூன்று பேருக்கு மட்டுமே யாசிக்கலாம் அனுமதி உண்டு. 1. ஒருவர் மற்றவரது ஈட்டுத் தொகைக்குப் பொறுப்பேற்றுக்கொண்டவர். அவர் அத்தொகையை (உரியவரிடம் ஒப்படைப்பதற்க்காக அதைப்) பெறுகின்ற வரை யாசிக்கலாம். பிறகு யாசிப்பதை நிறுத்திஇக்கொள்ளை வேண்டும். 2. இரண்டாமவர் (இயற்கைச்) சேதம் ஏற்பட்டு செல்வங்களை இழந்தவர். அவர் வாழ்க்கையின் அவசியத்தை தேவையை அடைந்து கொள்ளும் வரை யாசிக்கலாம். 3.மூன்றாமவர் 'வறுமைக்கு ஆட்பட்டவர். அவருடைய கூட்டத்தாரில் (அவரைப் பற்றி ) விவரம் தெரிந்த மூவர் முன் வந்து, "இன்ன மனிதர் வறுமைக்கு ...