இதுதான் زهد என்கிற தன்மை



அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)


 فقد بعث إليه مروان بن الحكم مائة دينار ذهباً ، فلما كان الغد أرسل إليه يقول:
إن خادمي غلط فأعطاك الدنانير،وأنا لم أردك بها،وإنما أردت غيرك،فسقط في يد أبي هريرة وقال:
أخرجتها في سبيل ولم يبت عندي منها دينار ،فإذا خرج عطائي فخذها منه .
وإنما فعل ذلك مروان ليختبره، فلما تحرى الأمر وجده صحيحاً .
(الكتاب: صور من حياة الصحابة)

மர்வான் இப்னுல் ஹிகம் (அன்றைய ஆட்சியாளர்)அபூ ஹுரைரா(ரலியல்லாஹு அன்ஹு ) அவர்களுக்கு நூறு தீனார் தங்க காசுகளை அனுப்பி வைத்தார்.

(மறுநாள்) காலையில் இவ்வாறு  ஒரு நபரிடம் கூறி அனுப்பிவைத்தார் " என்னுடைய பணியாளர் தவறுதலாக உங்களிடம் தங்கக் காசுகளை கொடுத்துவிட்டார்.உங்களுக்கு அவற்றை (தருவதற்கு) நான் நாடவில்லை.வேறொருவருக்குத்தான் (தருவதற்கு) நாடினேன்.அது அபூ ஹுரைரா(ரலி) வாகிய தங்களின் கையிலே வந்துவிட்டது".

அபூ ஹுரைரா (ரலி) கூறினார்கள் " அவைகளை(தங்க காசுகளை) அல்லாஹ்வின் பாதையிலே செலவழித்துவிட்டேன். அந்த தங்க காசுகளில் ஒரு காசுகூட (நேற்றைய) இரவில் என்னிடம் இருக்கவில்லை. என்னுடைய ஊதியம் வரும்போது அதிலிருந்து அவைகளை (தங்க காசுகளை) நீங்கள் எடுத்துக்கொள்ளவும்.

  அபூ ஹுரைரா (ரலி) அவர்களை சோதித்து பார்க்கத்தான் இப்படி மர்வான் செய்தார்.
அவர் அந்த விஷயத்தை குறித்து  ஆய்வு செய்தபோது (அபூ ஹுரைரா(ரலி) கூறியதை போன்றே) சரியாக இருப்பதை கண்டார்.)

Comments

Popular posts from this blog

ஸஜ்தா திலாவத் என்றால் என்ன?

தல்கீன் என்றால் என்ன ?

ரிஜ்க் எவ்வாறு கிடைக்கும்?