ஒழுக்கம் உயர்வைத் தரும்! ஒழுங்கின்மை இழிவு தரும்!!!
ونقل أن جماعة من الصبيان كانوا يلعبون بالأكرة في بعض الطرق كما هو دأبهم على باب مجلس أبي حنيفة رضي الله عنه ، فارتمت الأكرة، ووقعت فى المجلس، وما كان أحد من الصبيان يستجري أن يدخل ويأخذ الأكرة حياء من أبى حنيفة ومصاحبيه. قال لهم صبي منهم : لم تستحيون؟ أنا أدخل وأجيء بالأكرة إليكم فدخل وأخذ الأكرة وتعجب أهل المجلس من جرأته وقلة حيائه فقال أبو حنيفة :لو لم يكن مطعونا فى نسبه لم يكن قليل الحياء سيّيء الأدب قالوا : وبم علمت يا إمام المسلمين ؟ قال : لأنه لو كان صحيح النسب لمنعه الحياء.
(الكتاب : تذكرة الأولياء باب ترجة الإمام ابى حنيفة للشيخ فريد الدين العطار رحمه الله)
அபூ ஹனீஃபா (ரஹிமஹுல்லாஹ்) அவர்களின் பாட அறைக்கு அருகே சில சிறுவர்கள் வழக்கமாக பந்தை வைத்து விளையாடிக் கொண்டிருந்தனர். சிறுவர்களால் எறியப்பட்ட அந்த பந்து அபூ ஹனீஃபா (ரஹிமஹுல்லாஹ்) அவர்களின் பாட அறையில் விழுந்தது. அபூ ஹனீஃபா (ரஹிமஹுல்லாஹ்) மற்றும் அவர்களின் மாணவர்களை கண்டு வெட்கம் கொண்டு பாட அறைக்கு உள்ளே சென்று பந்தை எடுத்து வர எந்த சிறுவனும் துணிவு கொள்ளவில்லை.
அப்போது ஒரு சிறுவன் மட்டும் “ஏன் வெட்கம் கொள்கிறீர்கள்? நான் உள்ளே சென்று பந்தை எடுத்து வருகிறேன்” என்று கூறி உள்ளே சென்று பந்தை எடுத்து வந்தான். அவனின் துணிச்சலையும், வெட்கம் குறைவையும் கண்டு அந்த சபையில் இருந்தவர்கள் ஆச்சரியம் கொண்டனர்.
அப்போது அபூ ஹனீஃபா (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் இந்தச் சிறுவன் குறையுள்ள பரம்பரையைச் சேர்ந்தவனாக இல்லாமல் இருந்திருந்தால் வெட்கம் குறைந்தவனாகவும், ஒழுக்கமில்லாதவனாகவும் இருந்திருக்கமாட்டான்” என்று கூறினார்கள்.
அங்கிருந்தவர்கள் இமாம் அவர்களே! எதனை வைத்து இதை அறிந்தீர்கள்? என்று கேட்டார்கள்.
அதற்கு இமாம் அபூ ஹனீஃபா (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் “இவன் சரியான பரம்பரையைச் சேர்ந்தவனாக இருந்திருந்தால் இவ்வாறு ஒழுங்கினமாக நடந்துக் கொள்வதை விட்டும் வெட்கம் அவனை தடுத்திருக்கும்” என்று கூறினார்கள்.
நன்றி :
✍மௌலவி
மு.அபூ அமீன் ஃபாஜில் பாகவி
Comments
Post a Comment