கரண்டைக்கு கீழ் ஆடை அணிவதின் சட்டம் என்ன? الجواب بعون الله الملك الوهاب இஸ்லாம் ஒரு பரிபூரண மார்க்கமாகும். அதன் பூரணத்தன்மை அனைத்து வகையான மக்களுக்கும் அவர்களது அனைத்து வகையான பிரச்சணைகளுக்கும் தீர்வு சொல்வதிலும் அத்தீர்வுகள் எல்லாக் கால மக்களுக்கும் எல்லா நாட்டு மக்களுக்கும் பொருத்தமாக அமைந்திருப்பதிலும் வெளிப்படையாகத் தென்படுவதை நாம் பார்க்கலாம், எனவே, ஆட்சி செய்வது எப்படி என்பதை இஸ்லாம் நமக்கு சொல்லித்தருவது போல தான் ஆடை அணிவது எப்படி என்பதையும் இஸ்லாத்தின் மூலாதாரங்களான அல்குர்ஆனும், அஸ்ஸுன்னாவும் நமக்கு வலியுருத்துகின்றன. இவ்வாறு இஸ்லாம் ஆடை தொடர்பாக வழங்கியுள்ள போதனைகளில் சிலதாக, ‘ஆடை ஹலாலான சம்பாத்தியத்தின் மூலம் பெறப்பட்டதாக இருக்க வேண்டும்’, அது عورة (அவசியம் மறைக்க வேண்டிய பகுதியை) மறைக்கக்கூடியவாறு இருக்க வேண்டும். ‘அவ்றத்தின் கன பரிமாணங்களைக் காட்டக்கூடியவாறு இறுக்கமானதாக அந்த ஆடைகள் இருக்கக்கூடாது’ போன்றவைகளைக் குறிப்பிடலாம். இவ்வாறே ஆடை தொடர்பாக இஸ்லாம் வழங்கியுள்ள முக்கிய போதனைகளில், வழிகாட்டல்களில் ஒன்றுதான் ஆண்கள் கரண்டைக்காலுக்குக் கீழ் ஆடை அணி...
Comments
Post a Comment