Posts

நல்லோர்களின் மாண்பு

كان التابعيُّ الجليل إبراهيم النخعيّ - رحمه الله - أعور العين ، وكان تلميذه سليمان بن مهران أعمش العين " أي ضعيف البصر " وقد روى عنهما ابن الجوزي في كتابه ( المنتظم ) : " أنهما سارا ...

ரிஜ்க் எவ்வாறு கிடைக்கும்?

ரிஜ்க் எவ்வாறு கிடைக்கும்? --------------------------------------------- ஷைக் இமாம் மாலிக்(ரஹ்) மாணவர் இமாம் ஷாபிஈ (ரஹ்) இருவருக்குமிடையே நடைபெற்ற ருசிகர சம்பவம். ************************************* அல்லாஹ் எவ்வித முன் முயற்சியும் க...

சிறுமை சிறுமையல்ல!

பெரும்பான்மை எல்லாம் பெருமைக்குறியதல்ல ------------------------------------------------------------- அமீருல்முஃமீனின் ஹஜரத் உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கடைத்தெருவில் ஒருவர், “யா அல்லாஹ்!  உன்னுடைய குறைவான அடி...

குர்ஆனின் மூலமாக உங்கள் (உள) நோயை நீக்குங்கள்!!!

குர்ஆனைக் கொண்டு நம் உள நோயைக் குணப்படுத்துவோம். **************** நபி பேரர் இமாம் ஜஃபர் ஸாதிக் (ரஹ்) சொல்கிறார்கள்:  தனக்கு ஏதேனும் ஆபத்து நிகழ்ந்து விடுமோ என அச்சப்படும் நிலையில்  حَسْبُنَا اللّٰهُ وَنِعْمَ الْوَكِيْلُ‏  ஹஸ்புனல்லாஹ் வநிஃமல் வகீல்   “எங்களுக்கு அல்லாஹ் போதுமானவன். அவனே சிறந்த பாதுகாவலன்”  (அல்குர்ஆன் : 3:173) என சொல்லாத ஒருவனைக் கண்டு நான் வியப்படைகிறேன், ஏனென்றால் அந்த வசனத்தின் தொடர்ச்சியாக அவ்வாறு சொன்னவர்களைப் பற்றி அல்லாஹ் சொல்கிறான், فَانْقَلَبُوْا بِنِعْمَةٍ مِّنَ اللّٰهِ وَفَضْلٍ  இறுதியில் அவர்கள் அல்லாஹ்வின் பெருங் கொடைகளையும் அருளையும் பெற்றுத் திரும்பினார்கள். அவர்களுக்கு எத்தகைய தீங்கும் ஏற்படவில்லை.  (அல்குர்ஆன் : 3:174) கடந்த கால செயல்களினால் துக்கப்படும்  ஒருவன்   لَّاۤ اِلٰهَ اِلَّاۤ اَنْتَ سُبْحٰنَكَ ‌  اِنِّىْ كُنْتُ مِنَ الظّٰلِمِيْنَ‌  ‌‏  லா இலாஹ இல்லா அன்த ஸுப்ஹானக இன்னீ குன்து மினழ் ழாழிமீன் “உன்னைத் தவிர வேறு இறைவன் இல்லை; தூய்மையான...

இந்திய சுதந்திர போரட்டத்தில் முஸ்லிம்கள்!!!

உங்கள் வீட்டு குழந்தைகளை சுதந்திரத்திற்காக போராடிய 5 அல்லது 10 நபர்களை சொல்ல சொல்லுங்கள் நிச்சயம் அதில் முஸ்லிம்களின் பெயர் இருக்காது. சுதந்திரத்திற்காக இஸ்லாமியர்கள் ஒரு துரும்பையும் அசைக்கவில்லை என்ற மாயையை திருத்தி அமைக்கப்பட்ட இந்த இந்திய சுதந்திர போராட்ட வரலாறுகள் பொய்யை திரும்ப திரும்ப கக்குகின்றன. இந்தியாவில் 72, வது சுதந்திர தினத்தை  கொண்டாடவிருக்கும் இவ்வேளையில் இந்திய சுதந்திரத்திற்கு தனது சதவிகிதத்தையும் மிஞ்சும் விதத்தில் உயிர்களையும், உடமைகளையும் தியாகம் செய்த இஸ்லாமிய சமுதாயத்தின் தியாகத்தை மறந்திருந்தாலும் மன்னித்திருக்கலாம்... ஆனால் பாவிகள் திட்டமிட்டே அல்லவா மறைத்திருக்கிறார்கள்! வெள்ளையனுக்கு வெண் சாமரம் வீசியர்கள் சுதந்திரப் போராட்ட தியாகிகளைக் காட்டிக் கொடுத்தவர்கள், அந்நியனுக்கு அடிமைச் சேவகம் செய்தவர்கள் எல்லாம் இன்று ஆட்சிக் கட்டிலும், அதிகார இடங்களிலும் அமர்ந்து கொண்டு சுதந்திரத்திற்கு தங்கள் எதிர்கால சந்ததியினரின் நலன்களுக்கும் தங்கள் உயிரையும், உடமைகளையும் அர்ப்பணித்த சமுதாயத்தை அடக்கியாள்கின்ற அவலம் இங்குமட்டுமே, சுதத்திரத்திற்கு வாளேந்திய சமுதாயம் வ...

வானவர்களின் துஆவை பெற...

*மலக்குகளின் துஆக்களை பெறுபவர்கள் யார்?* *தர்மம் செய்பவர்* அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ஒவ்வொரு நாளும் இரு வானவர்கள் இறங்குகின்றனர்.  அவ் விருவரில் ஒருவர், "அல்லாஹ்வே! தர்மம் செய்பவருக்குப் பிரதி பலனை அளித்திடுவாயாக!''  என்று கூறுவார். மற்றொருவர் அல் லாஹ்வே! (தர்மம் செய்யாமல் பொருளைத்) தடுத்து வைத்துக் கொள்பவர்களுக்கு அழிவை ஏற்படுத்துவாயாக!'' என்று கூறு வார்கள். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (ஆதாரம் : புகாரி 1442) தர்மம் செய்பவர்கூட, தான் தர்மம் செய்த பிறகு இப்படியொரு துஆவை செய்திருக்க மாட்டார். அப்படியொரு கருத்தாழமிக்க துஆவை மலக்குகள் தினம் தினம் செய்கிறார்கள். மலக்குமார்களின் துஆவை பெற வேண்டும் என்ற எண்ணத்தில் தர்மம் செய்பவர் மிகமிக குறைவு என்றே கூற வேண்டும். இக்காலகட்டத்தில் பள்ளி வாசலுக்கு ஒரு மின்விசிறியை அன்பளிப்பு செய்தால்கூட அதில் தனது பெயரை வலுக்கட்டாயமாக பொறித்து விடுகிறார்கள். இன்னார்தான் இதை அன்பளிப்பு செய்தார் என்ற முகஸ்துதிக்காகவே இவ்வாறு செய்கிறார்கள். இதை தவிர்த்து தூய எண்ணத்துட...

ஸஜ்தா திலாவத் என்றால் என்ன?

கேள்வி : ஸஜ்தா திலாவத் பற்றிய குறிப்புகள் கூறுக? தொழுகையிலும் தொழுகைக்கு வெளியிலும் குர்ஆனின் ஒரு சில குறிப்பிட்ட வசனங்களை ஓதும் போது ஸஜ்தா செய்கின்றோம். இதை ஸஜ்தா திலாவத் என்றழைக்கின்றோம். இந்த ஸஜ்தா திலாவத்திற்கான வசனங்கள் எவை? அதாவது எந்தெந்த வசனங்களை ஓதும் போது நாம் ஸஜ்தா செய்ய வேண்டும்? என்று நாம் பார்த்தால் தற்போது 14வசனங்கள் ஸஜ்தா வசனங்களாக நடைமுறையில் உள்ளதைக் கண்டு வருகின்றோம். இந்த 14 வசனங்களும் ஹதீஸ்களின் ஆதாரங்களின் அடிப்படையிலேயே இமாம்கள் வகுத்து தந்திருக்கிறார்கள் அந்த வசனங்கள் பின் வருமாறு آيات السجود👇 1) إِنَّ الَّذِينَ عِندَ رَبِّكَ لاَ يَسْتَكْبِرُونَ عَنْ عِبَادَتِهِ وَيُسَبِّحُونَهُ وَلَهُ يَسْجُدُونَ سورة الأعراف 2)  وَلِلَّهِ يَسْجُدُ مَنْ فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ طَوْعًا وَكَرْهًا وَظِلَالُهُمْ بِالْغُدُوِّ وَالْآَصَالِ  (سورة الرعد ) 3)  وَلِلَّهِ يَسْجُدُ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ مِنْ دَابَّةٍ وَالْمَلَائِكَةُ وَهُمْ لَا يَسْتَكْبِرُونَ  يَخَافُونَ رَبَّهُمْ مِنْ فَوْقِهِمْ وَيَفْعَلُونَ مَا يُؤْم...