ரிஜ்க் எவ்வாறு கிடைக்கும்?

ரிஜ்க் எவ்வாறு கிடைக்கும்?
---------------------------------------------
ஷைக் இமாம் மாலிக்(ரஹ்)
மாணவர் இமாம் ஷாபிஈ (ரஹ்)
இருவருக்குமிடையே நடைபெற்ற
ருசிகர சம்பவம்.
*************************************
அல்லாஹ் எவ்வித முன் முயற்சியும் காரணமுமின்றி ஒரு அடியானுக்கு அவனுக்குண்டான உணவை-இரணத்தை அளிப்பான் என்பது இமாம் மாலிக் (ரஹ்)அவர்களின் கருத்து.

இல்லை, ஒருவன் சிறிதளவேனும் முயற்சி செய்தாலேயே தவிர
அவனுக்கு அவனின் வாழ்வாதாரங்கள் கிடைக்காது என்பது இமாம் மாலிக்(ரஹ்) அவர்களின் மாணவர் இமாம் ஷாபிஈ (ரஹ்)
அவர்களின் நிலைப்பாடு.
: "لو توكلتم على الله حق توكله، لرزقكم كما يرزق الطير، تغدو خِماصاً وتروح بِطاناً

#நீங்கள் அல்லாஹ்வின் மீது தவக்குல் -நம்பிக்கையை வைக்கவேண்டிய முறையில் வைத்தால் பறவைகளுக்கு அல்லாஹ் உணவு அளிப்பதைப்போல் உங்களுக்கும் அளிப்பான். பறவைகள் காலை கூட்டை விட்டு பசியோடு வெளியே பறக்கின்றன. மாலை வயிறு நிரம்பிய நிலையில் தனது இருப்பிடத்திற்குத் திரும்புகின்றன" எனும் நபிமொழியை அதற்கு ஆதரமாக முன் வைத்தார்கள் இமாம் மாலிக் (ரஹ்) அவர்கள்.

பறவைகள் தனது இருப்பிடத்தை விட்டு வெளியே செல்வதினால் தானே அவைகளுக்கு உணவு கிடைக்கிறது,அதே போல் மனிதன் வெளியே வந்து தேடினால் தான் அவனுக்குக் கிடைக்கவேண்டியது கிடைக்கும்" என அதே நபிமொழியிலிருந்து ஆதாரத்தைக்காட்டினார்கள் இமாம் ஷாபிஈ(ரஹ்) அவர்கள்.
இருப்பினும் இமாம் மாலிக் தனது கருத்தில் உறுதியாக இருந்தார்கள்.

எப்படியாவாது தனது கருத்திற்கு வலுசேர்க்கும் ஆதாரத்தை தனது ஆசிரியப்பெருந்தகைக்கு முன் வைக்கவேண்டும் என எண்ணிய வண்ணம் இமாம் ஷாபிஈ அவர்கள் தெருவழியே சென்று கொண்டிருந்தார்கள்.
அங்கே ஒரு முதியவர் பழக்கூடைஒன்றை சுமக்கமுடியாமல் சுமந்து செல்வதைக் கண்டு அருகே சென்று அந்தக் கூடையை வாங்கி தன் தோளில் சுமந்து கொண்டு அந்த முதியவரின் இருப்பிடத்திற்குச் சென்று இறக்கிவைத்தார்கள்.

இமாம் அவர்களின் பண்பை கண்டு மகிழ்ந்த அம்முதியவர் கை நிறைய பழங்களை அன்பளிப்பாகத் தந்தார்.
தான் அவருக்கு உதவிய காரணத்தினாலேதான் அம்முதியவர் இந்தப் பழங்களைத் தந்தார்.அவருக்கு நாம் உதவவாவிட்டால் இப்பழங்கள் கிடைத்திருக்காதே,இது நம்முடைய கருத்திற்கு சரியான ஆதாரம்
எனக் கருதிய இமாம் அப்பழங்களை எடுத்துக்கொண்டு இமாம் மாலிக்(ரஹ்)அவர்களின் முன் வைத்து,
ஆசிரியப் பெருந்தகையே!! இதோ பாருங்கள் நான் ஒருவருக்கு உதவி செய்தேன் அல்லாஹ் எனக்கு இந்த ரிஜ்கை வழங்கினான்"என்றார்கள் பணிவுடன்.
ஒன்றும் சொல்லாமல் புன்னகை புரிந்த வண்ணம் இமாம் மாலிக்

அப்பழங்களில் ஒன்றை எடுத்து சாப்பிட்டார்கள்
பின் சொன்னார்கள்,
"பார்த்தீரா முஹம்மது பின் இத்ரீஸ்! நான் எந்தவொரு முயற்சியும்செய்யாமல்,சிரமத்தையும் அனுபவிக்கமலேயே என்னைத்
தேடி இந்த ரிஜ்க் வந்திருக்கிறது" என்றார்கள்.

இரண்டு அறிஞர் பெருமக்களும் குர்ஆனின் வசனங்களிலிருந்து தான் தங்களின் ஆய்வின் அடிப்படையில்  கூறுகிறார்கள்

#அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு அவர்கள் எதிர்பார்க்காதவகையில் ரிஜ்க் அளிப்பான் என்று குர்ஆஅன் கூறுகிறது. 5:3   وَّيَرْزُقْهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ‌ ؕ وَمَنْ يَّتَوَكَّلْ عَلَى اللّٰهِ فَهُوَ حَسْبُهٗ ؕ اِنَّ اللّٰهَ بَالِغُ اَمْرِهٖ‌ ؕ قَدْ جَعَلَ اللّٰهُ لِكُلِّ شَىْءٍ قَدْرًا‏
65:3. அவர் எண்ணிப் பார்த்திராத வகையில் அவருக்கு உணவளிப்பான்.463

அல்லாஹ்வையே சார்ந்திருப்போருக்கு அவன் போதுமானவன். அல்லாஹ் தனது காரியத்தை அடைந்து கொள்பவன். ஒவ்வொரு பொருளுக்கும் அல்லாஹ் ஓர் அளவை நிர்ணயம் செய்துள்ளான்.

அதே குர்ஆன் மனிதன் முயற்சித்தளவே தவிர அவனுக்குக்கிடைக்காது என்கிறது. மனிதனுக்கு அவன் முயற்சித்தது தவிர வேறு இல்லை''265 என்று இருப்பது அவனுக்கு அறிவிக்கப்படவில்லையா?
மனிதன் முயற்சிக்காமல் தானாக வரும் என அமர்ந்திருந்தால் இறைவன் நாடினால் கிடைக்கும்,கிடைக்காமலும் போகலாம். ஆனால் ஒருமனிதன் இறைவனின் மீது முழுமையாக நம்பிக்கை வைத்து முயற்சித்தால் நிச்சயமாக அவனுக்குக் கிடைக்ற வேண்டியது கிடைக்கும்.

ஞானி அபுபக்கர் ஷிப்லி(ரஹ்)அவர்கள் காலத்தில் ஒரு வியாபாரி காட்டு வழியாக வந்து கொண்டிருந்தார். அங்கே ஒரு பறவை இரண்டு சிறகுகளும் ஒடிந்த நிலையில் தரையில் கிடப்பதைக் கண்டார்.பறக்க இயலாத நிலையில் இருக்கும் இப் பறவைக்கு இக் காட்டில் யார் உணவு தருவார்? என சிந்தித்த அவ் வியாபாரி அங்கேயே சிறிது நேரம் நின்றிருந்தார்.

அப்பொழுது ஒரு பறவை தனது அலகால் ஒரு தானியத்தை எடுத்து வந்து சிறகொடிந்த பறவையி்ன் வாயில் ஊட்டுவதைக் கண்டு வியந்து போனார்.
   அல்லாஹு அக்பர் சிறகொடிந்த பறவைக்கு அதன் இருப்பிடம் தேடி வந்து  உணவளிக்கும் இறைவன் எனக்கு ஏன் நான் இருக்கும் இடந்தேடி உணவளிக்கமாட்டன் என் எண்ணிய வியாபாரி தனது  வியபாரதைவிட்டு விட்டு வணக்க வழிபாடுகளில் ஈடு பட ஆரம்பித்தார்.
இந்த தகவல் . ஞானி அபுபக்கர் ஷிப்லி(ரஹ்)அவர்களுக்கு எட்டியது அவ்வியாபரிஇடம் வந்த ஷைக் ஷிப்லி அவர்கள் சகோதரே! சிறகொடிந்த நிலையில் உணவிற்காக காத்திருக்கும்பறவையைப் போன்று வாழ விருப்பமா?
அல்லது இறைவன் தனக்களித்த இரு இறக்கையை வைத்துக்கொண்டு பறந்து திரிந்து இரைதேடி தானும் பசியாறி தேவையுள்ளவர்களுக்கு உதவும் மற்றொரு பறவை போன்று வாழ்வது சிறப்பா ?எனக்கேட்டார்கள்
الْمُؤْمِنُ الْقَوِىُّ خَيْرٌ وَأَحَبُّ إِلَى اللَّهِ مِنَ الْمُؤْمِنِ الضَّعِيفِ وَفِى كُلٍّ خَيْرٌ احْرِصْ عَلَى مَا يَنْفَعُكَ وَاسْتَعِنْ بِاللَّهِ وَلاَ تَعْجِزْ
رواه مسلم ( 2664 )
___கணியூர் இஸ்மாயில் நாஜி

Comments

Popular posts from this blog

ஸஜ்தா திலாவத் என்றால் என்ன?

தல்கீன் என்றால் என்ன ?