தல்கீன் என்றால் என்ன ?


தல்கீன் என்றால் என்ன?


الجواب بعون الله الملك الوهاب 


قَالَ رَسُولُ اﷲِ صلی الله علیه وآله وسلم

لَقِّنُوا مَوْتَاکُمْ لَا إِلٰه إِلَّا اﷲُ.


’’اپنے مرنے والوں کو لَا إِلٰهَ إِلَّا اﷲُ کی تلقین کیا کرو۔


உங்களில் மரணிப்பவர் களுக்கு லாயிலாஹ இல்லல்லாஹ் என்று தல்கீன் செய்யுங்கள்


பார்க்க :


(صحيح مسلم، کتاب الجنائز، باب تلقين الموتی لا إله إلا اﷲ، 2 : 631، الرقم : 916)


(جامع الترمذی، کتاب الجنائز، باب ما جاء فی تلقين المريض عن الموت والدعاء له عنده، 3 : 306، الرقم : 976)

(سنن النسائی، کتاب الجنائز، باب تلقين الميت، 4 : 5، الرقم : 1826)

(سنن ابن ماجه، کتاب الجنائز، باب ما جاء في تلقين الميت لا إله إلا اﷲ، 1 : 464، الرقم : 1444)

(سنن أبی داود، کتاب الجنائز، باب فی التلقين، 3 : 190، الرقم : 3117)

(السنن الکبری للنسائی، کتاب الجنائز وتمني الموت، باب تلقين الميت، 1 : 601، الرقم : 1953)

(السنن الکبری للبيهقی، کتاب الجنائز، باب ما يستحب من تلقين الميت إذا حضر، 3 : 383، الرقم : 6390)

(مصنف ابن أبی شيبة، کتاب الجنائز، باب فی تلقين الميت، 2 : 446، الرقم : 10857)


(رياض الصالحين، کتاب عيادة المريض، باب تلقين المختصر لا إله إلا اﷲ، 1 : 184، الرقم : 918)



امام ابن عابدین شامی نے اس پر نہایت جامع تبصرہ کیا ہے:


أما عند أهل السنة فالحديث أی : لَقِّنُوا مَوْتَاکُمْ لَا إِلٰهَ إِلَّا اﷲُ محمول علی حقيقته، 

لأن اﷲ تعالی يحييه علی ما جاء ت به الآثار.

’’اہل سنت و جماعت کے نزدیک حدیث مبارکہ ’’اپنے مرنے والوں کو لَا إِلٰهَ إِلَّا اﷲُ کی تلقین کرو‘‘ کو اس کے حقیقی معنیٰ پر محمول کیا جائے گا 

کیوں کہ اﷲ تعالیٰ تدفین کے بعد مردے میں زندگی لوٹا دیتا ہے اور اس پر واضح آثار موجود ہیں۔‘‘


یعنی لَقِّنُوا مَوْتَاکُمْ لَا إِلٰهَ إِلَّا اﷲُ کی تعمیل میں حالت نزع میں تلقین کی گئی تو 

یہ مجازی معنیٰ میں ہوگی 

اور مرنے کے بعد تلقین کی گئی تو یہ 

اِس حدیث کے حقیقی معنی پر عمل ہوگا۔ 

لہٰذا مجازی اور حقیقی دونوں معانی پر عمل کیا جائے گا 

کیوں کہ اِسی میں میت کا فائدہ ہے


அஹ்லே சுன்னத் வல் ஜமாஅத்தினர் களின் கொள்கையானது 

மேற்கண்ட நபியின் கூற்றுக்கிணங்க 

மரணிக்கும் தருவாயில் உள்ளவர்களுக்கு தல்கீன் சொல்லிக்கொடுப்பது மஜாஸீயாகவும்

மையித்தை அடக்கம் செய்யப்பட்டபின் தல்கீன் சொல்வது ஹகீகீ ரீதியாகவும் இருக்கிறது 

இதுவே தல்கீனால் மையத்திற்கு கிடைக்கப்பெறும் முழுமையான பிரயோஜனமாகும் 

மரணித்தவர்களை மறுபடியும் இறைவன் உயிர்ப்பிக்க செய்வான் என்பதே நமது அசையா நம்பிக்கையாகும்


பார்க்க :


(رد المختار، 2 : 191)



“தல்கீன்” என்ற இச்சொல்லுக்கு சொல்லிக் கொடுத்தல் என்ற பொருள் வரும்.

 “மையித்” தை நல்லடக்கம் செய்தபின் ஒருவர் அதன் தலைப் பக்கம் அமர்ந்து பின்வரும் விடயங்களை அதற்குச் சொல்லிக் கொடுப்பதற்கு “தல்கீன்” ஓதுதல் என்று சொல்லப்படும். 


அந்த விடயங்கள் அடங்கிய அறபு மொழியிலுள்ள ஓதலும், அதன் மொழி பெயர்ப்பும் பின்னால் வரும். 

இவ்வழகிய வழக்கத்தை அவ்வக்காலத்தில் வாழ்ந்த இமாம்கள், மார்க்க அறிஞர்கள் செய்து வந்துள்ளார்கள்.

அவர்களில் எந்த ஓர் இமாம்களும் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் இவ் வழக்கம் இஸ்லாம் மார்க்கத்திற்கு முரணானதென்று சொன்னதுமில்லை, எழுதியதுமில்லை, 

இவ் வழக்கத்தைக் கைவிட்டதுமில்லை. 

சுருங்கச் சொன்னால் இது எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட விருப்பத்திற்குரிய விடயமாகக் கருதப்படுகிறது.


وَّذَكِّرْ فَاِنَّ الذِّكْرٰى تَنْفَعُ الْمُؤْمِنِيْن
َ‏ 

(நபியே!) நீங்கள் நல்லுபதேசம் செய்யுங்கள். நிச்சயமாக நல்லுபதேசம் நம்பிக்கையாளர்களுக்குப் பயனளிக்கும்.

(அல்குர்ஆன் : 51:55)


ما ثبت في الصحيحين أن النبي صلى الله عليه وسلم قال - عن الميت - "إنه ليسمع خفق نعالهم إذا انصرفوا


 ஒரு மனிதன் இறந்ததும் மண்ணறைக்குள் அடக்கம் செய்துவிட்டு திரும்புகின்ற மக்களின் பாதணியின் சப்தத்தை அந்த மைய்யித் கேட்கின்றது'
என நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள் ,

(நூல்: புஹாரி)



فمن أصرحها: ما رواه الإمام الطبراني عن أبي أمامة الباهلي رضي الله عنه قال: 


(إذا أنا مت فاصنعوا بي كما أمرنا رسول الله صلى الله عليه وسلم أن نصنع بموتانا، 

أمرنا رسول الله صلى الله عليه وسلم فقال: 

إذا مات أحد من إخوانكم فسويتم التراب على قبره 

فليقم أحدكم على رأس قبره ثم ليقل: يا فلان ابن فلانة فإنه يسمعه ولا يجيب، ثم يقول: يا فلان ابن فلانة فإنه يستوي قاعداً.

ثم يقول: يا فلان ابن فلانة فإنه يقول أرشدنا يرحمك الله، 

ولكن لا تشعرون، فليقل: اذكر ما خرجت عليه من الدنيا شهادة أن لا إله إلا الله وأن محمداً عبده ورسوله، وأنك رضيت بالله رباً، وبالإسلام ديناً، وبمحمد نبياً، وبالقرآن إماماً، 

فإن منكراً ونكيراً يأخذ كل واحد منهما بيد صاحبه 

ويقول: انطلق بنا ما يقعدنا عند من لُقّن حجته، 

قال (أي أبو أمامة): فقال رجل: يا رسول الله فإن لم يُعرف أمه، 

قال: ينسبه إلى أمه حواء، يا فلان ابن حواء).


قال الحافظ ابن حجر العسقلاني رحمه الله في التلخيص الحبير:

"وإسناده صالح وقد قواه الضياء في أحكامه"ا.هـ. ثم قال: لَهُ شَوَاهِدُ: 

ومِنْهَا:مَا رَوَاهُ سَعِيدُ بْنُ مَنْصُورٍ مِنْ طَرِيقِ رَاشِدِ بْنِ سَعْدٍ، وَضَمْرَةَ بْنِ حَبِيبٍ، وَغَيْرِهِمَا قَالُوا: 

إذَا سُوِّيَ عَلَى الْمَيِّتِ قَبْرُهُ وَانْصَرَفَ النَّاسُ عَنْهُ  كَانُوا يَسْتَحِبُّونَ أَنْ يُقَالَ لِلْمَيِّتِ عِنْدَ قَبْرِهِ: يَا فُلَانُ قُلْ: لَا إلَهَ إلَّا اللَّهُ قُلْ: أَشْهَدُ أَنْ لَا إلَهَ إلَّا اللَّهُ  ثَلَاثَ مَرَّاتٍ قُلْ: رَبِّي اللَّهُ، وَدِينِي الْإِسْلَامُ، وَنَبِيِّ مُحَمَّدٌ، ثُمَّ يَنْصَرِفُ



தல்கீன் வார்த்தைகள்:


يا فلان ابن فلان، 
ويا عبد الله ابن أمة الله، 

اذكر العهد الذي خرجت عليه من الدنيا، 

شهادة أن لا إله إلا الله وحده لا شريك له، 

وأنّ محمدًا عبده ورسوله، 

وأن الجنة حق، 

وأن النار حق، 

وأن البعث حق، 

وأن الساعة آتية لا ريب فيها، 
وأن الله يبعث من في القبور، 

وأنك رضيت بالله ربا، 
وبالإسلام دينا، 
وبمحمدٍ صلى الله عليه وسلم نبيًا، 

وبالقرءان إماما، 

وبالكعبة قبلة، 

وبالمؤمنين إخوانا). 

ذكره النووي في المجموع شرح المهذب


இறந்தவரின் உடலை கப்றில் வைத்து நல்லடக்கம் செய்த பின் ஒருவர் அடக்கப்பட்டவரின் தலைமாட்டில் அமர்ந்து, இன்னார் மகனே! அல்லது இன்னார் மகளே! 

இறைவன் ஒருவன் என்றும் முஹம்மதுர் ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்றும் ஈமான் கொண்டு இவ்வுலகில் வாழ்ந்து மறுஉலகாகிய மறுமைக்கு சென்றுள்ளாய்.

இப்போது உன்னிடம் இரு மலக்குகள் வந்து 
உனது நாயன் யார்?
உனது நபி யார்? 
உனது சகோதரர்கள் யார்? 
உனது கிப்லா எது? 
உனது இமாம் யார்? 
என்று கேட்பர். 


அதற்கு நீர் கொஞ்சமும் தயங்காது தைரியமாக 
எனது றப்பு அல்லாஹ், 
எனது நபி முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ,
 
எனது சகோதரர்கள் முஸ்லிம்கள்,

எனது கிப்லா கஃபா, 

எனது இமாம் குர்ஆன் என்று சொல்வீராக!
 
என்று சொல்லியபின் அவரை விட்டும் விடைபெறுவது என்பதாகும். 

அதனை அவர் கேட்பார்.
 
ஆதாரம் :


(المعجم الکبير للطبرانی، 8 : 249، الرقم : 7979.

مجمع الزوائد للهيثمی، 2 : 324؛ 3 : 45.

کنز العمال فی سنن الأقوال والأفعال، 15 : 256257، الرقم : 42406

ابن عابدين شامی، رد المحتار، 2 : 191)


நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் 
அன்னவர்களின் தோழர்களுள் ஒருவரான அம்ருப்னுல் ஆஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் பின்வருமாறு வஸிய்யத் செய்தார்கள். 

அதாவது ஒரு ஒட்டகத்தை அறுத்து அதன் மாமிசத்தை பங்குவைக்க எந்தளவு நேரம் தேவைப்படுமோ அந்தளவு எனது கப்றுக்குப் பக்கத்தில் தங்கியிருங்கள்.

ஏனெனில், எனது இரட்சகனின் தூதர்கள், அதாவது மலக்குகளிடம் நான் எதனை உரையாட வேண்டும் என்பதை உங்களிடம் கேட்டு அறிந்து கொள்ளவும். உங்களின் மூலம் நான் மறுகுதல் பெறவும் என்றார்கள்.


ஆதாரம் :


(​முஸ்லிம், மிஷ்காத் - 149) 


لَمَّا دُفِنَ سَعْدُ بْنُ مُعَاذٍ وَنَحْنُ مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، 

سَبَّحَ وَسَبَّحَ النَّاسُ مَعَهُ طَوِيلا ، ثُمَّ كَبَّرَ فَكَبَّرَ النَّاسُ مَعَهُ طَوِيلا ، 

قَالُوا : " يَا رَسُولَ اللَّهِ ، لِمَ سَبَّحْتَ ؟ 

قَالَ : لَقَدْ تَضَايَقَ عَلَى هَذَا الْعَبْدِ الصَّالِحِ قَبْرَهُ حَتَّى فَرَّجَهُ اللَّهُ بِرَحْمَتِهِ


ஸஃதுப்னு முஆத் ரலியல்லாஹு அன்ஹு அவர்களை அடக்கம் செய்யப்பட்ட பின் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள், தஸ்பீஹும், தக்பீரும் ஓதினார்கள். 


உடனே ஸஹாபாக்கள் அவைகளை அதிகமாக ஓதினார்கள். 

பின்பு ஸஹாபாக்கள் காரணத்தை வினவிய போது 

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் பின்வருமாறு பதிலளித்தார்கள்.

"ஸாலிஹான இந்த நல்லடியாரை கப்ரு நெருக்கிக்கொண்டே இருந்தது. 

அல்லாஹுதஆலா கப்ருடைய நெருக்கத்தை அகற்றும் வரைக்கும் நான் தஸ்பீஹும், தக்பீரும் ஓதிக்கொண்டே இருந்தேன்" என்றார்கள்.​

(அஹ்மத், மிஷ்காத்



وعلى شرعية التلقين المذاهب الاربعة،

بل جعل بعض ذلك من سيما أهل السنة،فأما قول المذاهب فعلى مايلي:



நான்கு இமாம்களின் பார்வையில் தல்கீன் :


المذهب الحنفي:

الشيخ عبد الغني الغنيمي الدمشقي الحنفي في كتابه اللباب في شرح الكتاب ج1/125 

قال: "وأما تلقينه (أي الميت) في القبر 


فمشروع عند أهل السنة لأن الله تعالى يحييه في قبره". انتهى. 


المذهب المالكي:

 
الإمام القرطبي صاحب التفسير المشهور فقد أفرد للتلقين باباً من كتابه التذكرة بأحوال الموتى والآخرة (ص138-139) أسماه: باب ما جاء في تلقين الإنسان بعد موته شهادة الإخلاص في لحده، 

وقد ذكر أن العمل جرى في قرطبة على تلقين الميت 

واستشهد بنصيحة شيخه أبي العباس القرطبي في جواز التلقين. 


المذهب الشافعي:


قال الإمام النووي في المجموع ج5/303-304: 

"قال جماعات من أصحابنا يستحب تلقين الميت عقب دفنه" .. 

ثم قال: "ممن نص على استحبابه: القاضي حسين والمتولي والشيخ نصر المقدسي" ... 


وقال: "وسئل الشيخ أبو عمرو بن الصلاح رحمه الله عنه فقال: التلقين هو الذي نختاره ونعمل به"، 


ثم قال النووي: "ولم يزل أهل الشام على العمل بهذا في زمن من يُقتدى به وإلى الآن


قال الإمام أبو القاسم الرافعي الشافعي في كتابه فتح العزيز بشرح الوجيز (المطبوع في أسفل كتاب المجموع ج5/242): 


"ويستحب أن يُلقن الميت بعد الدفن فيقال: يا عبد الله بن أمة الله ..." إلى ءاخره .


المذهب الحنبلي: 


الإمام منصور بن يوسف البهوتي الحنبلي في كتابه الروض المربع ص104. 

الإمام المرداوي الحنبلي في كتابه الإنصاف في معرفة الراجح من الخلاف ج2/548-549 قال: 

"فائدة يستحب تلقين الميت بعد دفنه عند أكثر الأصحاب


தல்கீன் பற்றிய இமாம்களின் கருத்துகள்,,,,, 

தல்கீன் ஓதுகின்றவர் மரணித்தவரின் தலைப்பக்கமாக நிற்பதும், மூன்று முறை ஓதுவதும் ஸுன்னத் ஆகும்.

வயது வராத சிறுவனுக்கு தல்கீன் ஓதுவதில் மாத்திரம் இமாம்களுக்கிடையில் கருத்து வேறுபாடு இருந்து வருகின்றது.


சிறுவர்களுக்கு கப்று – மண்ணறையில் கேள்வி உண்டு என்றுகூறுவோர் அவர்களுக்காக தல்கீன் ஓதுவது சுன்னத் என்றும்,

அவர்களுக்கு கேள்வி இல்லை என்போர் அது ஸுன்னத் இல்லை என்றும் கூறுகின்றார்கள். 

தல்கீன் ஓதுவது சுன்னத் என்று உம்தத்துஸ் ஸாலிக், ஃபத்ஹுல் முஈன், மஹல்லி போன்ற நூற்களில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இமாம் அஹ்மது இப்னு ஹன்பல் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களிடம் தல்கீன் ஓதுவது பற்றி கேட்டதற்கு, 'ஆம்! 
அது சுன்னத்தான காரியம்' என்று சொன்னார்கள்.

எல்லாக் காலங்களிலும் அனைத்து நகரங்களிலும் எவ்வித மறுப்பும் இன்றி தல்கீன் ஓதிவரும் நடைமுறை ஒன்றே தல்கீன் ஓதுவதற்கு போதுமான சான்றாகும்

(ஆதாரம்:

றூஹ் பக்கம் 20) 


இமாம் இப்னு ஹஜர் மக்கி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள்  கூறுகின்றார்கள்

புத்தியுள்ள பருவமடைந்த மைய்யித்திற்கு தல்கீன் ஓதுவது சுன்னத்தாகும். 


(ஆதாரம்:

துஹ்ஃபா, பாகம் 3, பக்கம் 207) 


இமாம் ஷிஹாபுத்தீன் ரமலி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களிடம் தல்கீன் ஓதுவது ஸுன்னத்தா, அல்லது மக்ரூஹா?

தல்கீன் சொல்லிக் கொடுப்பது அடக்கம் செய்வதற்கு முன்பா? அல்லது அடக்கம் செய்யப்பட்ட பின்பா?
என்று கேட்டதற்கு

சிறு குழந்தை தவிர்த்து மற்றவர்களுக்கு மைய்யித் அடக்கம் செய்யப்பட்ட பின் தல்கீன் சொல்லிக் கொடுப்பது சுன்னத் ஆகும். 


(ஆதாரம்:

ஃபதாவா றமலி பாகம்2, பக்கம் 38) 


ஹாஃபிழ் இமாம் ஜலாலுத்தீன் சுயூத்தி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் கூறுகின்றார்கள்,

நபிமார்களுக்கும் சிறுவர்களுக்கும் கப்று விசாரணையோ கப்றின் வேதனையோ முன்கர் நகீரின் கேள்வி கணக்கோ கிடையாது.


அதனால், ஷாஃபிஈ மத்ஹபின் அஸ்ஹாபுகள் சிறுவர்கள் (பருவம் எய்வதற்குமுன்) அடக்கம் செய்யப்பட்ட பின் அவர்களுக்கு தல்கீன் கூறப்பட மாட்டாது என்றும் 
தல்கீன் சொல்லிக் கொடுப்பது பருவம் அடைந்தவர்களுக்கு மட்டும் சொந்தமானதாகும். 


இமாம் நவவி அவர்கள் ரௌலா என்ற நூலிலும் ஏனைய அவர்களின் நூற்களிலும் இவ்வாறுதான் கூறியுள்ளார்கள்.

(ஆதாரம்:

 ஷரஹுஸ்ஸுதூர் பக்கம் 152) 


வழிகெட்ட முஃதஸிலா இயக்கத்தினரே 

மரணித்தவர்களுக்கு தல்கீன் ஓதக் கூடாது என்று முதன் முதலில் வாதித்தனர். 

இப்போது ததஜவினர் வாதிடுகின்றனர்... 


முஃதஸிலாக்கள் மரணித்தவர் கப்ரில் மீண்டும் உயிர் பெற்று எழுப்பப்படுவதையும், கப்ரில் விசாரணை செய்யப்படுவதனையும் நிராகரித்தனர். 

ஆனால் அஹ்லுஸ்ஸுன்னத் வல் ஜமாஅத்தினர் மத்தியில் மரணித்தவர்களுக்கு தல்கீன் சொல்லிக் கொடுப்பது சுன்னத்தாகும்.


(ஆதாரம்:

ரத்துல் முக்தார் பாகம் 1, பக்கம் 571) 


தல்கீன் ஓதாதவரும் ஓத மறுப்பவரும் முஃதஸிலா இயக்கத்தைச் சார்ந்தவராகும்.


இவர்கள் மய்யித்தை உணர்வற்ற சடமாகவும் மரணத்தின் பின் கப்ரில் உயிர் கொடுத்து எழுப்பப்படுவதையும் நிராகரிக்கின்ற வழிகெட்ட அமைப்பை சார்ந்தவர்கள் 


எனவே தல்கீன் ஓதுதல் நல்ல காரியம் என்பதற்கு அது தொடர்பான நபி மொழிகளும், இமாம்களின் கூற்றுக்களும் அதிகம் உள்ளன. 


இங்கு கூறப்பட்ட ஆதாரங்கள் மனக்கண் தெளிவான ஒருவருக்கு போதுமானவையாகும்.


والله اعلم بالصواب 

فاسألوا اهل الذكر வாட்ஸ் அப் தளம்


عبد الرحیم انواری 2008
عفا اللہ عنہ

Comments

Post a Comment

Popular posts from this blog

ஸஜ்தா திலாவத் என்றால் என்ன?

ரிஜ்க் எவ்வாறு கிடைக்கும்?