பள்ளிவாசல் மற்றும் அதனுடைய இடத்தில் இருக்கும் மரங்களின் சட்டம் என்ன?

கேள்வி :

பள்ளிவாசல் மற்றும் அதனுடைய இடத்தில் இருக்கும் மரங்களின் சட்டம் என்ன ?

மேலும் அம்மரத்தில் காய்க்கும் பழங்களை பொதுமக்கள் சாப்பிடுவதற்கு அனுமதி உண்டா?


الجواب بعون الله الملك الوهاب 


في زرع الاشجار داخل المساجد

ذهب جمهور الفقهاء من الحنفية والمالكية والحنابلة: 
وبعض الشافعية الى حرمة ذلك 

وللامام قلعها، 

صرح بذلك الكمال ابن الهمام في الفتح، 

ونص عليه فقهاء المذهب المالكي في شرحهم لمختصر خليل، 

وقال به أحمد، 

وجزم به البغوي الشافعي في الفتاوى. 

பொதுவாக பள்ளிவாசலுக்குள் மரம் நடும் விஷயத்தில் அனேக அறிஞர் பெருமக்கள் அதனை மார்க்கத்தில் அனுமதிக்கப்படாத ஹராமான காரியமாக சட்டம் தீட்டுகிறார்கள் 

அவ்வாறு பள்ளிக்குள் இருக்கும் மரத்தை அங்குள்ள இமாம் வேரோடு பிடுங்கி எறிவதற்கு அனுமதி உண்டு என்கின்றனர்


لأن المسجد لم يبن لهذا، 

وإنما بني للصلاة والذكر وتلاوة القرآن، 

وزراعة الأشجار بداخله يؤذي، لسقوط ورقها وثمرها فيه، 

كما يجتمع عليها الطيور والصبيان، فينتفىي الخشوع في العبادة، 


ஏனெனில் பள்ளிவாசல் மரம் வளர்ப்பதற்காக கட்டப்படவில்லை 

அது தொழுகை திக்ரு குர்ஆன் ஓதுதல் போன்ற வணக்க வழிபாட்டிற்காக உருவாக்கப்பட்டவை 

எனவே மரத்தின் காரணமாக சிறு பிள்ளைகளும் பறவைகளும் அங்கு ஒன்றுகூட கூடும் 

அதனால் வணக்க வழிபாட்டில் ஏற்படும் பயபக்தியில் இழப்பு ஏற்படலாம் 

மேலும் மரத்திலுள்ள இலைகள் மற்றும் பழங்கள் கீழே விழுவதினால் பள்ளிக்கு வருபவர்களுக்கு இடர் ஏற்படலாம் என்பன போன்ற காரணங்களுக்காக 

பள்ளிக்குள் மரம் நடுவதை ஹராம் என்று தீர்மானிக்கின்றனர்


وذهب الشافعية في الصحيح الى جواز، 

ذلك لعدم ورود دليل على التحريم، ولأن الأصل في الأشياء الاباحة


ஷாஃபிஈ மத்ஹபைச் சார்ந்த சில அறிஞர்கள் பகிரங்கமான தடை ஏதும் இல்லாததினால் பள்ளிக்குள் மரம் நடலாம் என வாதிடுகின்றனர்


في زراعة الأشجار في باحات وساحات المساجد:

يجوز زراعة الأشجار المختلفة (الحرجية والمثمرة) 

ولم ينقل عن أحد من أهل العلم خالف في ذلك لعدم وجود نص في التحريم 

بل قد يستحب ذلك، اذا لم يكن فيه ضرر على المسجد أو المصلين 


அதேசமயம் பள்ளிக்கு வெளியில் பள்ளியின் வளாகத்தில் பள்ளியினுடைய இடத்தில் மரம் நட்டிக்கொள்ளலாம் 

அதுவும் பள்ளிக்கு வரும் தொழுகையாளிகளுக்கு இடர்ப்பாடு ஏற்படாத வண்ணமாக அமைந்திருத்தல் வேண்டும்


பார்க்க 

المغني (5/370).


وفي الفتاوى الهندية (1/110) : " 

ويكره غرس الشجر في المسجد ; 
لأنه تشبه بالبيعة وتشغل مكان الصلاة ، إلا أن يكون فيه منفعة للمسجد بأن كانت الأرض نزة لا تستقر أساطينها فيغرس فيه الشجر ليقل النز . 

كذا في فتاوى قاضي خان "


அதேபோன்று பள்ளிவாசல் ஊற்று பெருக்கெடுக்கும் இடமாக இருந்து அந்த ஊற்றின் காரணமாக மரம் வளர்ந்து அதைக்கொண்டு பள்ளிவாசலுக்கு பிரயோஜனம் இருக்குமேயானால் அப்பொழுது அவ்வகையான மரங்கள் பள்ளிக்குள் இருப்பதில் ஆட்சேபனை இல்லை என்றும் அறிஞர்கள் அவதானிக்கிறார்கள்


ولعل من يذكر الكراهة أراد كراهة التحريم " .


فتبين بهذا أن الفقهاء بين قائل بالتحريم وقائل بالكراهة ، وهذا فيما إذا غرس في المسجد بعد بنائه ، 


وأما إن كانت الأرض بها شيء من الشجر ، وبني المسجد عليها فلا حرج .


قال ابن قدامة في الموضع السابق : " فأما إن كانت النخلة في أرض , فجعلها صاحبها مسجدا والنخلة فيها فلا بأس "


ஆக அறிஞர் பெருமக்கள் பள்ளிக்குள் மரம் இருப்பதை மக்ரூஹ் என்றும் ஹராம் என்றும் சட்டம் வகுப்பது பள்ளிவாசல் கட்டப்பட்டு பின்னர் மரம் நடும் விஷயத்தில்தான் 

அதேசமயம் மரங்கள் நிறைந்த பகுதியில் பள்ளிவாசல் கட்டப்படுமையானால் அப்பொழுது அங்கு மரம் இருப்பதில் எவ்வித கருத்து வேறுபாடும் இல்லை 

அவ்வகையான பள்ளிகளில் மரங்கள் தாராளமாக காட்சியளிக்கலாம்


أما الأكل من ثمار هذه الأشجار ففيه تفصيل :


பள்ளிவாசலுக்கு சொந்தமான மரங்களின் பழங்கள் மற்றும் கீரைகளை பொதுமக்கள் சாப்பிடலாமா?


1- إن كان الواقف قد وقف الشجر مع المسجد ، 

وحدد مصرف الوقف ، بأن جعله للمساكين ، أو للأئمة أو الطلبة أو للمسجد ، مثلا ، 

عُمل بتحديده . وما وقف للمسجد ، يباع ويصرف في مصالحه.

ஒன்று 

அம்மரங்களை பள்ளிவாசலோடு ஒருவர் வக்ஃப் செய்து

அம்மரத்தின் மூலம் கிடைக்கும் பயன்களை இமாம்கள் மற்றும் மாணவர்கள் மற்றும் பள்ளியினுடைய பொது காரியங்களுக்காக அவர் பயன்படுத்திக் கொள்வதற்கு ஒப்புதல் அளித்திருந்தால் 

அப்பொழுது அவருடைய ஒப்புதலின் பிரகாரமே மரத்தின் பயன்பாடுகள் பயன் அளிக்கப்படும்


2- وإن لم يكن حدد الجهة التي يصرف فيها الوقف ، 

ففي ذلك خلاف ، فقيل حكمه حكم الوقف منقطع الجهة ، فيكون لورثة الواقف ، موقوفا عليهم ، 

وقيل يجوز لمساكين المسجد ، 

وقيل يصرف في مصلحة المسجد .

இரண்டு 

பள்ளியை வக்ஃபு செய்தவர் பள்ளியினுடைய மரங்களுக்கு குறிப்பிட்ட எவ்வித ஒப்புதலும் அளிக்காத நிலையில் 

அவ்வகையான மரத்தின் பயன்களை வக்ஃபு செய்தவருடைய வாரிசுகளுக்கு தரப்படும் என்றும் 

ஏழைகளுக்கு அதன் மூலம் பயன் அளிக்கப்படும் என்றும் 

பள்ளியினுடைய பொது நல காரியங்களுக்காக பயன்படுத்தப்படும் என்றும் கூறப்படுகிறது


3- ما غرس في المسجد ، ولم يوقف معه ، وحكمنا بكراهته أو تحريمه : إن كان غرس للمسجد ، 

فلا يؤخذ منه إلا بعوض يصرف في مصالح المسجد ، وإن غرس مسبّلا ، 

மூன்று 


பள்ளிக்குள் மரத்தை நட்டியவர் அம்மரத்தை பள்ளியோடு வக்ஃப் செய்யாமல் விட்டிருந்தால் 

அப்பொழுது அம்மரத்தின் பயன்களுக்கு தக்க பகரத்தை கொடுத்து அம்மரத்தின் பயன்பாடுகளை அடைந்து கொள்ளலாம்


أو لم يعلم قصد غارسه ، جاز الأكل منه بلا عوض ، 


والأولى عدم الأكل منه ، ومن أكل ودفع العوض ليصرف في عمارة المسجد ، 


فلا حرج عليه .
وهذا بعض ما قاله الفقهاء في هذه المسألة


அதேசமயம் மரத்தை நட்டியவர் யார் என்று தெரியவில்லை 

அல்லது மரத்தை நட்டியவருடைய நோக்கம் என்ன என்பதையும் அறிய முடியவில்லையெனில் எவ்வித பகரமுமின்றி மரத்தின் பயன்களை அடைந்துகொள்ள முடியும் 

ஆயினும் பகரத்தைக் கொடுத்து அதனை பயன்படுத்திக் கொள்வதே மிகச் சிறந்ததாகும் 

ஏனெனில் அது பள்ளியினுடைய தேவைகளுக்கு உறுதுணையாக அமையும்


مسجد کے لیے وقف اشیاء‘ جو مسجد کے استعمال میں نہ ہوں ان کو فروخت کر کے رقم مسجد پر صرف کرنا جائز ہے۔ 

جس شخص نے یہ اشیاء خریدی ہوں وہ ان کو استعمال کرسکتا ہے۔

فقہاء کرام فرماتے ہیں:

لأهل المحلة تحويل باب المسجد... لهم تحويل المسجد إلی مکان آخر إن ترکوه بحيث لايصلی فيه ولهم بيع مسجد عتيق لم يعرف بانيه وصرف ثمنه في مسجد آخر.

’’محلے داروں کیلئے مسجد کا دروازہ بدلنا جائز ہے۔۔۔ 

اگر کسی مسجد کو اس حال میں چھوڑ دیا گیا ہو کہ اس میں نماز نہ پڑھی جاتی ہو تو اہل محلہ اس مسجد کو ایک جگہ سے دوسری جگہ منتقل کر سکتے ہیں۔ 

انہیں یہ اختیار بھی حاصل ہے 

کہ وہ ایسی پرانی مسجد جس کے بانی کا پتہ نہ ہو اسے بیچ دیں اور اس کی قیمت دوسری مسجد پر خرچ کر لیں۔‘‘


அதேபோன்று பொதுவாக பள்ளிக்கு வக்ஃபு செய்யப்பட்ட பொருட்களில் மரம் உட்பட எது நேரடியாக பள்ளிக்கு பலனளிக்கவில்லை யோ 

அவ்வகையான பொருட்களை விற்று அதன் மூலம் கிடைக்கும் பணத்தை கொண்டு பள்ளியினுடைய தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளலாம்


பார்க்க :

ابن عابدين شامي، رد المحتار، 4: 357، 


مسجد کے درخت سے جو منافع حاصل ہوتے ہیں، اسے مسجد اور مسجد سے متعلق کاموں میں لگانا چاہیے،

کہیں اور خرچ کرنا درست نہیں: 
غرس الاشجار في لا بأس بہ إذا کان فیہ نفع للمسجد، 

وإذا غرس شجراً في المسجد فالشجر للمسجد 

பள்ளிவாசலுக்கு சொந்தமான காய்கனிகளை பள்ளி மற்றும் பள்ளியைச் சார்ந்த விஷயங்களுக்காக மட்டுமே செலவு செய்யப்பட வேண்டும்..

எனவே அதனை பள்ளி அல்லாத இதர விஷயங்களுக்காக பயன்படுத்துவது கூடாத காரியம் ஆகும் 

எனவே பள்ளிக்கு சொந்தமான தோட்டத்திலிருந்து ஏதேனும் காய்கறிகள் எடுத்துக் கொண்டால் அதற்கான கிரயத்தை பள்ளியில் சேர்த்து விட வேண்டும்.

பார்க்க :

 (فتاوی عالمگیری، ۲:۴۷۷)


والله اعلم بالصواب 


பதிவு 
فاسألوا اهل الذكر வாட்ஸ் அப் தளம்



عبد الرحیم انواری 2008
عفا اللہ عنہ 

Comments

Popular posts from this blog

ஸஜ்தா திலாவத் என்றால் என்ன?

தல்கீன் என்றால் என்ன ?

ரிஜ்க் எவ்வாறு கிடைக்கும்?