வாட்ஸ் அப் போன்ற தளத்தின் வழியாக ஸலாம் சொல்வதின் சட்டம் என்ன ?
கேள்வி :
வாட்ஸ்அப் போன்ற இணையத்தின் வழியாக ஸலாம் சொல்வதின் சட்டம் என்ன?
الجواب بعون الله الملك الوهاب
اگر کوئی آدمی واٹس اَیپ وغیرہ میں
کسی کو مخاطب کرکے سلام کرتا ہے،
تحریری شکل میں ہو یا Voice SMSکے ذریعہ ہو،
تو اس سلام کا جواب زبان سے فی الفور دینا واجب ہے،
வாட்ஸ்அப் போன்ற இணையத்தளம் வழியாக குறிப்பிட்டு ஒருவரை பார்த்து எழுத்து வடிவத்திலோ அல்லது வாய்ஸ் மூலமாகவோ ஸலாம் கூறினால்
அதற்கு உடனே பதில் ஸலாம் தனக்குள் சொல்லிக் கொள்வது வாஜிபாகும்
اور تحریری طور پر یا Voice SMSکے ذریعہ جواب دینا مستحب ہے۔
அந்த ஸலாமுக்கு பதிலாக பதில் ஸலாம் எழுத்து வடிவத்திலோ அல்லது வாய்ஸ் மூலமாகவோ வெளிப்படுத்துவது விரும்பத்தக்கதாகும்
اس کے علاوہ واٹس اَیپ کی عام تقریروں اور تحریروں میں جو سلام کیا جاتا ہے
اس سلام کا جواب دینا واجب نہیں؛
இது அல்லாமல் பொத்தாம் பொதுவாக புலனம் (வாட்ஸ்அப் ) போன்ற வலை தளங்களில் வருகின்ற கட்டுரை போன்ற ஆக்கங்களில் எழுதப்பட்டிருக்கும் ஸலாமுக்கு பதில் ஸலாம் சொல்வது வாஜிப் அல்ல
البتہ اگر کوئی پروگرام براہ راست Liveکیا جائے
اور اس میں کوئی سلام کرے تو احتیاطاً سلام کا جواب دیا جائے۔
அதேபோன்று இணையத்தின் வழியாக நேரடியாக காட்சி தருகின்றவர்
பொத்தாம் பொதுவாக எல்லோருக்கும் ஸலாம் சொல்கின்ற பொழுது
அதற்கு பதில் ஸலாம் சொல்வது பேணுதல் ஆகும்
قال في ردالمحتار:
إذا کتب لک رجل بالسلام فی کتاب و وصل إلیک
وجب علیک الرد باللفظ أو بالمراسلة ،
لأن الکتاب من الغائب بمنزلة الخطاب من الحاضر والناس عنہ غافلون
ஒருவர் தபால் மூலமாக குறிப்பிட்டு ஒருவருக்கு ஸலாம் சொல்கின்ற பொழுது
அந்தக் கடிதம் கிடைத்தவுடன் அதற்கு பதில் ஸலாம் எழுதுவதும் பதில் கடிதம் எழுதுவதும் வாஜிபாகும்
பார்க்க
ردالمحتار(۹/۵۹۴) ۔
والله اعلم بالصواب
பதிவு
فاسألوا اهل الذكر வாட்ஸ் அப் தளம்
عبد الرحیم انواری 2008
عفا اللہ عنہ
Comments
Post a Comment