நல்ல மனைவி!!!



*(ஹலாலான ரிஜ்க் கிடைக்க நல்ல மனைவி மிகவும் அவசியம் )*

قال الحسن البصري : وقفت على بزاز بمكة أشتري منه ثوبا، فجعل يمدح ويحلف ، فتركته وقلت : لا ينبغي  الشراء من مثله ، واشتريت من غيره ، ثم حججت بعد ذلك بسنتين ، فوقفت عليه ، فلم أسمعه يمدح ولا يحلف .. فقلت له : ألست الرجل الذي وقفت عليه منذ سنوات ؟
قال : نعم..
قلت له : وأي شيء أخرجك إلى ما أرى ؟ ما أراك تمدح ولا تحلف.. ! 

فقال : كانت لي امرأة إن جئتها بقليل نزرته ، وإن جئتها بكثير قللته ، فنظر الله إلي فأماتها ، فتزوجت امرأة بعدها ، فإذا أردت الغدو إلى السوق أخذت بمجامع ثيابي ثم قالت : يا فلان.. ! اتق الله ولا تطعمنا إلا طيبا ، وإن جئتنا بقليل كثرناه ، وإن لم تأتنا بشيء أعناك بمغزلنا..

(الكتاب : المجالسة وجواهر العلم صفحة: 251)

 _*ஹஸன் பஸரி (ரஹிமஹுல்லாஹ்) கூறுகிறார்கள் :*_

_*நான் மக்காவிலே ஆடை வாங்குவதற்காக ஒரு பட்டு வியாபாரியிடம் சென்றேன். அவர் தான் விற்பனை செய்யும் ஆடைகளை புகழ்ந்து கூறியும் சத்தியம்  செய்தும் விற்றுக் கொண்டிருந்தார். நான் அவரிடம் வாங்காமல் விட்டு விட்டேன். இது போன்ற நபர்களிடத்தில் வாங்கக்கூடாது என்று மனதிலே கூறி கொண்டு வேறு ஒரு இடத்திலே ஆடையை வாங்கிக் கொண்டேன்.*_

 _*இரண்டு ஆண்டுகளுக்கு பின்பு ஹஜ்ஜுக்கு வந்தேன். அதே மனிதனிடம் சென்றேன் ஆனால் அவர் தான் விற்பனை செய்யும் ஆடைகளை புகந்தோ சத்தியம் செய்தோ விற்பனை செய்யவில்லை. நான் அவரிடம் சென்று  சில ஆண்டுகளுக்கு முன்பு உங்களிடத்திலே நான் துணி வாங்க வந்தேனே அந்த வியாபாரி தானே  நீங்கள்? என்றேன்.*_

 _*அதற்கு அவர் ஆம் என்றார்.*_

 _*நான் இப்போது காணுகின்ற இந்த நல்ல நிலைக்கு நீங்கள் வர காரணமென்ன? 
 நீங்கள் ஆடைகளை புகழ்ந்தும், சத்தியம் செய்து விற்பனை செய்வதாக காண முடியவில்லையே என்றேன்.*_

 _*அதற்கு அவர் எனக்கு ஒரு மனைவி இருந்தாள். அவளிடம் குறைவான வாழ்த்துடன் நான் சென்றால் அதை அற்பமாக பேசுவாள்.*_

 _*அதிகமான லாபத்தோடு நான் சென்றால் அதை குறைவாக காண்பாள். அல்லாஹ் எனக்கு உதவி புரியும் விதமாக அவளை மவ்த் ஆக்கி விட்டான்.*_

 _*அடுத்த ஒரு பெண்ணை நான் திருமணம் செய்தேன்.  நான் கடைவீதிக்கு செல்லும் போது  அவள் என்னுடைய ஆடையை பிடித்து “அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளுங்கள்! ஹலாலானதை  தவிர நீங்கள் வேறு எதையும் எங்களுக்கு கொடுக்க வேண்டாம். நீங்கள் குறைவான லாபத்தோடு வந்தாலும் நாங்கள் அதை  அதிக லாபமாக காணுவோம் நீங்கள் எதுவும் கொடுக்காவிட்டாலும் நாங்கள் நூலை நூற்று விற்பனை செய்து உங்களுக்கு உதவிபுரிவோம்” என்று கூறியதாக கூறினார்.


நன்றி :
மௌலவி
மு.அபூ அமீன் ஃபாஜில் பாகவி.

Comments

Popular posts from this blog

ஸஜ்தா திலாவத் என்றால் என்ன?

தல்கீன் என்றால் என்ன ?

ரிஜ்க் எவ்வாறு கிடைக்கும்?