Posts

யார் யாசிக்கலாம்

யார் யாசிக்கலாம் ?           கபீஸா பின் முகாரிக் (ரலி) அவர்கள் கூறியதாவது :  நான் (மற்றொருவர் செலுத்த வேண்டிய ) ஓர் இழப்பீட்டுத் தொகைக்குப்  பொறுறுப்பேற்றுக்கொண்டு, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஏதேனும் கேட்பதற்காகச் சென்றேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்,"தர்மப்படி பொருட்கள் நம்மிடம் வரும் வரை இங்கேயே இருங்கள். அதில் ஏதேனும் உங்களுக்குத் தரச் சொல்கிறோம்" என்று கூறினார்கள். பிறகு (பின்வருமாறு) கூறினார்கள் :      கபீஸா ! மூன்று பேருக்கு மட்டுமே யாசிக்கலாம் அனுமதி உண்டு. 1. ஒருவர் மற்றவரது ஈட்டுத் தொகைக்குப் பொறுப்பேற்றுக்கொண்டவர். அவர் அத்தொகையை (உரியவரிடம் ஒப்படைப்பதற்க்காக அதைப்) பெறுகின்ற வரை யாசிக்கலாம். பிறகு யாசிப்பதை நிறுத்திஇக்கொள்ளை வேண்டும். 2. இரண்டாமவர் (இயற்கைச்) சேதம் ஏற்பட்டு செல்வங்களை இழந்தவர். அவர் வாழ்க்கையின் அவசியத்தை தேவையை அடைந்து கொள்ளும் வரை யாசிக்கலாம். 3.மூன்றாமவர் 'வறுமைக்கு ஆட்பட்டவர். அவருடைய கூட்டத்தாரில் (அவரைப் பற்றி ) விவரம் தெரிந்த மூவர் முன் வந்து, "இன்ன மனிதர் வறுமைக்கு ...
அஸ்ஸலாமு அலைக்கும் நபி (ஸல்) அவர்கள் மீது ஸலவாத் சொல்வது மறுமையில் அவர்களின் ஷஃபாஅத் (பரிந்துரையை) பெற்றுத்தரும்.எனவே நாம் அதிகம் ஸலவாத் சொல்லுவோம்.

இஸ்லாத்தின் பார்வையில்... சர்வதேச அடிமை ஒழிப்பு தினம்

Image
மனிதன் தொடங்கி உலகில் நாம் காணும் சகல படைப்புகளும் இறைவனுக்கு மட்டுமான அடிமைகள் ஆவார்கள். அது தவிர்த்து மனிதனுக்கு மனிதன் அடிமை என்பதை உலகின் எல்லா மதங்களும் மிக வன்மையாகக் கண்டிக்கிறது. மனிதநேயமும், மனிதாபிமானமும் ஆன்மிகப் பாதையின் படிக்கட்டுகள். மனிதனின் தன்மானத்துக்கு எதிரான செயல்கள் அனைத்தும் மனிதநேயத்தை தகர்க்கும் செயல்களாகும் என்கிறது இஸ்லாம். நடைபாதையில் கிடக்கின்ற சிறிய கற்களை, முற்களை, எலும்புகளை, கண்ணாடி துண்டுகளை, மனிதனுக்கு நோவினை தரும் அனைத்தையும் அகற்றுவது மனிதநேயமிகு செயல்கள் என்பது மட்டுமல்ல, ஒரு முஸ்லீம் ஏற்றுள்ள இறை நம்பிக்கையின் பரிபூரணத்திற்கான சேவைகள் என நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னார்கள். அடிமையும், அடிமைத்தனமும் நம்மை படைத்து பாதுகாக்கிற  எஜமானன் ஒருவனாகிய இறைவனின் புனிதம் நிறைந்த தெய்வாதீனமான சன்னிதானத்திற்கு மட்டுமே உரித்தானதாகும். மாறாக சாதி, மதம், இனம், நிறம், மொழி, வயது, மற்றும் செல்வாக்கு போன்ற பாகுபாடுகளை மையப்படுத்திய அடிமைத்தனம் தண்டிக்கப்பட வேண்டிய ஒன்று என்பதை இஸ்லாம் தான் தோன்றிய காலம் தொட்டே உலகிற்கு உரக்கச் சொல்லி வருகிறது....

மார்க்க கல்வியை கற்க வேண்டியதன் அவசியம்!

Image
October 30, 2011   TamilMuslim   2 Comments ஒவ்வொரு முஃமினுக்கும் புனிதமான குர்ஆனையும், முஹம்மது நபி (ஸல்) அவர்களின் போதனையையும் படித்து மார்க்க அறிவை பெறுவது கடமையாக்கப்பட்டுள்ளது. அல்லாஹ் கூறுகிறான்: - “ரமளான் மாதம் எத்தகையதென்றால் அதில் தான் மனிதர்களுக்கு (முழுமையான வழிகாட்டியாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும்; (நன்மை – தீமைகளைப்) பிரித்தறிவிப்பதுமான அல்-குர்ஆன் இறக்கியருளப் பெற்றது …” (அல்-குர்ஆன் 2:185) அவர்கள் (அறிந்து) நல்லுபதேசம் பெறுவதற்காக, இதை நாம் உம்முடைய மொழியில் எளிதாக்கினோம். (அல்-குர்ஆன் 44:58) ஹா, மீம். விளக்கமான இவ்வேதத்தின் மீது சத்தியமாக. நீங்கள் அறிந்து கொள்வதற்காக இதனை நாம் அரபி மொழி குர்ஆனாக நிச்சயமாக ஆக்கியிருக்கிறோம். (அல்-குர்ஆன் 43:1-3) அலிஃப், லாம், றா. இவை தெளிவான இவ்வேதத்தின் வசனங்களாகும். நீங்கள் விளங்கிக் கொள்வதற்காக, இதனை அரபி மொழியி...

தொலைபேசியும் இஸ்லாமிய பெண்களும்

Image
முஸ்லிம் பெற்றோர்களே, சகோதரர்களே! உங்கள் பெண் குழந்தைகளயும், நம் சகோதரிகளை நாம் பாதுகாத்து சொர்க்கம் கொண்டு செல்வதும், கயவ ர் கூட்டத்தின் சதியை முறியடிப்பதும், நமது கடமையாக இருக்கின்றது. இதனை நாம் காலம் தாழ்த்தாமல் உடனே செய்ய வேண்டும் தற்சமயம் அதிக அளவில் முஸ்லிம் பெண்கள் முஸ்லிம் அல்லாத ஆடவருடன் ஓடிப்போவதும், மதம் மாறுவதும் நிகழ்ந்து வருகின்றது. இத‌ற்கான‌ முழுப்பொறுப்பையும் பெற்றோர் ஏற்க‌ வேண்டி இருக்கிற‌து. இது போன்ற சம்பவங்கள் நிகழ்வதற்கான காரணிகள்: 1. பெற்றோர்கள் தங்கள் பெண் குழந்தைகளை முறையாக கவணிக்க தவறுவது. 2. அளவிற்கு அதிகமாக பணம் கொடுப்பது. வசதி உள்ளது என்பதற்காக மொபைல் போன் போன்ற சாதனங்களை வாங்கி கொடுப்பது. 3. மொபைல் ஃபோனில் தங்கள் பெண் குழந்தைகள் யாருடன் பேசுகின்றார்கள், என்ன எஸ்.எம்.எஸ் வருகின்றது போன்றவற்றை கவணிக்காமல் இருப்பது. 4. பெண்கள் எங்கே செல்கின்றார்கள், எப்போது வருகின்றார்கள் என்பதை கவனிக்க அல்லது கண்டிக்க தவறுவது. 5. மார்க்கத்தை போதிக்காமல், காதல் படம், பாடல் போன்ற கேளிக்கைகளை சி.டி. வீடியோ என வீட்டிற்குள் அனுமதித்து வழிதவற வைப்பது. 6. பெண்...

உங்களுக்கு தொழுகை நடக்கும் முன்...

                                      உங்களுக்கு தொழுகை நடக்கும் முன்.. ஆக்கம்: உடன்குடி செய்யது அபூபக்கர் சித்தீக் மனித படைப்பின் நோக்கத்தை அறிந்திடுங்கள்.. படைத்த இறைவனுக்கு நன்றியை செலுத்திடுங்கள்.. குறித்த நேரத்தில் தொழுகையை நிறைவேற்றிடுங்கள்.. இறைவனை எப்போதும் நினைவு கூர்ந்திடுங்கள்.. எல்லாத் தொழுகைகளையும் பேணி தொழுதிடுங்கள்.. போர்க்களத்திலும் தொழுகையை நிலைநிறுத்திடுங்கள்.. தொழுகையினால் ஏற்படும் பயன்களை அறிந்திடுங்கள்.. உள்ளச்சத்துடன் உரியநேரத்தில் தொழுகையை நிறைவேற்றிடுங்கள்.. தொழுகையை பேணினால் மட்டுமே சுவர்க்கம் செல்ல முடியும்.. ஜன்னத்துல் ஃபிர்தௌஸில் நிரந்தரமாக தங்க முடியும்.. மறுமையில் முதல் விசாரணை தொழுகையை பற்றியதே.. தொழுகை நம் ஈமானை மேலும் உறுதியாக்குகிறதே.. தொழுகை பாவக் கறைகளை போக்கிடுமே.. மானக்கேடானவற்றிலிருந்து நமை காத்திடுமே.. தொழுகை தீய காரியங்களை களைந்திடுமே.. இ...

பொய் பேசுவதனால் ஏற்படும் தீங்குகள்

                                 அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...  அனைத்து புகழும் அகிலங்களின் இறைவனான அல்லாஹ்வுக்கே. வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை என்று நான் சட்சி கூறுகிரறேன். மேலும் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதரும் உண்மை அடியாரும் ஆவார்கள் எனவும் நான் சாட்சி கூறுகிறேன். பொய் பேசுவது என்பது மனித சமுதாயத்தை சீர்கேட்டிற்கு இட்டுச் செல்லும் ஒரு தீய செயலாகும். உலகில் உள்ள அனைத்து மதங்களும், கொள்கை கோட்பாடுகளும் இதனை குறித்து எச்சரிக்கின்றன. சத்திய இஸ்லாமிய மார்க்கத்திலோ பொய் பேசுவதை தடை செய்திருப்பதோடல்லாமல் இதன் விளைவுகளைப் பற்றி மிக கடுமையாக எச்சரிக்கப் விடப்பட்டுள்ளது. 1) பொய் பேசுவது ஹராமானது ஆகும்! அ) அல்லாஹ்வின் வேதத்தை நம்பாதவர்கள் தான் பொய் பேசுவார்கள்: – அல்லாஹ் கூறுகிறான்: - “நிச்சயமாக பொய்யை இட்டுக் கட்டுவதெல்லாம் அல்லாஹ்வின் வசனங்களை நம்பாதவர்கள் தாம்; இன்னும் அவர்கள் தாம் பொய்யர்கள்” (அல்-குர்ஆன் 16:105) ஆ...