ஜும்ஆ தொழுகைக்கு குறிப்பிட்ட நபர்களின் எண்ணிக்கை கவனிக்கப்படுமா?

கேள்வி :

ஜும்ஆ தொழுகைக்கு குறிப்பிட்ட நபர்களின் எண்ணிக்கை கவனிக்கப்படுமா?

ஷாஃபிஈ மத்ஹபைப் பின்பற்றக்கூடிய مقتدى ஹனஃபி மத்ஹபின் إمام மை பின்பற்றி ஜும்ஆத் தொழுகை தொழுவதன் சட்டம் என்ன?



الجواب بعون الله الملك الوهاب 



اختَلَفَ أهلُ العِلمِ في العددِ الذي تنعقِدُ به صلاةُ الجُمُعةِ ولا تصحُّ بدونِه على أقوالٍ، 



ஜும்ஆ தொழுகை நிறைவேறுவதற்கு குறிப்பிட்ட நபர்களின் எண்ணிக்கை விஷயத்தில் அறிஞர் பெருமக்களிடத்தில் அபிப்பிராய பேதங்கள் உண்டு



*முதலாம் கூற்றின் படி*


أنَّ صلاةَ الجُمُعةِ تنعقِدُ باثنين سوى الإمامِ، 

وهو روايةٌ عن أحمدَ  ، وبه قال أبو يُوسُفَ  ، 

وطائفةٌ من السَّلَفِ ، 

واختارَه ابنُ تيميَّة ، وابنُ باز  ، وابنُ عثيمين  .


இமாமை தவிர்த்து இரண்டு நபர்கள் இருந்தாலே 


ஜும்ஆ தொழுகைக்கு சாத்தியமுண்டு 

என்பது இமாம் அபூ யூஸுஃப் ரஹிமஹ்

இமாம் இப்னு தைமியா ரஹிமஹ் போன்றோர்களின் நிலைபாடாகும்



பார்க்க 👇

(المغني)) لابن قدامة (2/243).

(المبسوط)) للسرخسي (2/43)، 

((مختصر اختلاف العلماء)) للطحاوي (1/330)

((المجموع)) (4/504)

((الاختيارات الفقهية)) (ص: 439))

((مجموع فتاوى ابن باز)) (30/332)

((الشرح الممتع)) (5/41).



قال الله تعالى:ِ 

يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا اِذَا نُوْدِىَ لِلصَّلٰوةِ مِنْ يَّوْمِ الْجُمُعَةِ فَاسْعَوْا اِلٰى ذِكْرِ اللّٰهِ 

وَذَرُوا الْبَيْعَ‌  ذٰ لِكُمْ خَيْرٌ لَّـكُمْ اِنْ كُنْتُمْ تَعْلَمُوْنَ‏


நம்பிக்கையாளர்களே! 

வெள்ளிக்கிழமையன்று ஜுமுஆ தொழுகைக்காக (பாங்கு சொல்லி) நீங்கள் அழைக்கப்பட்டால், 


வியாபாரத்தை விட்டுவிட்டு, அல்லாஹ்வை நினைவுகூர நீங்கள் விரைந்து செல்லுங்கள். 


அறிவுடையவர்களாக இருந்தால் இதுவே உங்களுக்கு மிக நன்று. 

(இதனை நீங்கள் அறிந்து கொள்வீர்களாக!


(அல்குர்ஆன் : 62:9)



وَجْهُ الدَّلالَةِ:


أنَّ قولَه: فَاسْعَوْا جاءَ بصيغةِ الجَمْعِ، فيَدخُلُ فيه الثلاثةُ  


மேற்கண்ட வசனத்தில் விரைந்து வாருங்கள் என்ற பன்மையான சொல்லெடுப்பிற்கு குறைந்தபட்சம் மூன்று நபர்களும் உள்ளடங்குவார்கள் என்பதே அவர்களின் வாதம் ஆகும்


பார்க்க 👇


((المغني)) لابن قدامة (2/244).


عن أبي الدَّرداءِ رَضِيَ اللهُ عنه، أنَّ النبيَّ صلَّى اللهُ عليه وسلَّم قال: 


((ما مِن ثلاثةٍ في قريةٍ لا تُقامُ فيهم الصَّلاةُ إلَّا استَحْوَذَ عليهم الشَّيطانُ))


ஒரு ஊரில் மூன்று நபர்கள் இருந்து அவர்களுக்குள் தொழுகை நிலைநாட்ட படாத போது 


அவர்களைத் ஷைத்தான் வழிநடத்திச் செல்வான், 



பார்க்க 👇


رواه أبو داود (547)، 

والنسائي (2/106)، 

وأحمد (5/196) (21758). 

صحَّح إسنادَه النوويُّ في ((المجموع)) (4/182)، 

وصحَّحه ابن الملقِّن في ((البدر المنير)) (4/386)، 

وحسَّنه الألباني في ((صحيح سنن أبي داود)) (547).


عن أبي سعيدٍ الخُدريِّ رَضِيَ اللهُ عنه، عن النبيِّ صلَّى اللهُ عليه وسلَّم قال: 


((إذا كانوا ثلاثةً فلْيَؤُمَّهم أحدُهم, وأحقُّهم بالإمامةِ أقرؤُهم)


அவர்களில் மூவர் இருந்தால் அவரில் ஒருவர் இமாமத் செய்யட்டும் 

இமாமத் செய்வதற்கு அதிக தகுதியுடையவர் குர்ஆனை நன்கு ஓதத் தெரிந்தவரே என நபி ஸல்  அவர்கள் கூறினார்கள்


பார்க்க 👇

رواه مسلم (672)



أنَّ أمْره صلَّى اللهُ عليه وسلَّم بالإمامةِ إذا كانوا ثلاثةً عامٌّ في إمامةِ الصَّلوات كلِّها؛ الجُمُعةِ والجماعةِ  .


أنَّ الثلاثةَ أقلُّ الجَمْع، فانعقدتْ به الجماعةُ


ஆக மூவர் இருந்தால் அவரில் ஒருவர் ஜமாஅத்தோடு தொழுகையை நிலை நாட்டலாம் என்ற நபியின் வழிகாட்டல் தெளிவாக இருப்பதினால் 

ஜுமுஆ தொழுகைக்கும்  இதுவே பொருந்தும்


பார்க்க 👇


((مجلة البحوث الإسلامية)) (35/317).

((المغني)) لابن قُدامة (2/244)، 

((الشرح الممتع)) لابن عثيمين (5/40)



*இரண்டாம் கூற்றின்படி*



تَنعقِدُ باثنين، 

وهو مذهبُ الظاهريَّة  ، 
وبه قالت طائفةٌ من السَّلَفِ ، 
واختارَه الطبريُّ ، والشوكانيُّ


இரண்டு நபர்கள் மட்டும் இருந்தாலும் ஜும்ஆ தொழுகைக்கான சாத்தியம் உண்டு 

என்பதே இமாம் இப்னு ஹஜ்ம் 
இமாம் திப்ரீ 
இமாம் ஷவ்கானி  ரஹிமஹும் போன்றோர்களின் நிலைப்பாடாகும்



பார்க்க 👇


((المحلى)) (3/249)، 

((المجموع)) (4/504).

((بداية المجتهد)) لابن رشد (1/158).

(نيل الأوطار)) (3/276)




يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا اِذَا نُوْدِىَ لِلصَّلٰوةِ مِنْ يَّوْمِ الْجُمُعَةِ 

فَاسْعَوْا اِلٰى ذِكْرِ اللّٰهِ وَذَرُوا الْبَيْعَ‌  ذٰ لِكُمْ خَيْرٌ لَّـكُمْ اِنْ كُنْتُمْ تَعْلَمُوْنَ‏


இறைநம்பிக்கை கொண்டவர்களே! வெள்ளிக்கிழமை யன்று தொழுகைக்காக அழைக்கப்படும்போது 


அல்லாஹ்வை நினைவுகூர்வதன் பக்கம் விரைந்து செல்லுங்கள். 

கொடுக்கல் வாங்கலை விட்டுவிடுங்கள். 


இது உங்களுக்கு மிகச் சிறந்ததாகும் 

நீங்கள் அறிந்தவர்களாக இருந்தால்!


(அல்குர்ஆன் : 62:9)



عن مالكِ بنِ الحُوَيرثِ رَضِيَ اللهُ عنه، قال: 


أتيتُ النبيَّ صلَّى اللهُ عليه وسلَّم أنا وصاحبٌ لي، 


فلمَّا أَرَدْنا الإقفالَ مِن عندِه، 

قال لنا: 

((إذا حضَرتِ الصَّلاةُ، فأذِّنا، ثم أَقيمَا، ولْيؤمَّكما أكبرُكما)) .


நானும் எனது நண்பரும் நபியிடத்தில் வந்து 

பின்னர் அவர்களிடமிருந்து விடை பெற்று செல்ல முற்பட்டபோது 

நபியவர்கள் எங்களிடத்தில் கூறினார்கள் 


தொழுகையின் நேரம் வந்து விட்டால் 

உங்கள் இருவரில் ஒருவர் பாங்கு சொல்லி இகாமத்  சொல்லட்டும்


உங்களில் பெரியவர் உங்களுக்கு இமாமத் செய்யட்டும் என பணித்தார்கள் 

என்று மாலிக் இப்னுல் ஹுவைரிஸ் ரலி அவர்கள் அறிவிக்கிறார்கள்


பார்க்க 👇


أخرجه البخاري (2848)، 

ومسلم (674)



أنَّه عليه الصَّلاةُ والسَّلامُ جعَلَ للاثنينِ حُكمَ الجَماعةِ في الصَّلاةِ  


أنَّ الاثنينِ جماعةٌ فيَحصُل الاجتماعُ، 

ومِن المعلومِ أنَّ صلاةَ الجماعةِ في غيرِ الجُمُعةِ تَنعقِدُ باثنينِ بالاتِّفاق، 

والجُمُعةُ كسائرِ الصلوات 

ஆக ஐந்து நேர தொழுகைக்கு நபியவர்கள் 


இருவர் இருந்தாலும் அவரில் ஒருவர் இமாமத் செய்யட்டும் என கட்டளையிட்டிருப்பதால் 

மற்ற தொழுகையைப் போலவே ஜும்ஆவுடைய தொழுகைக்கும் இருவர் மட்டும் இருந்தாலும் ஜமாஅத் நடத்தி தொழ வைக்க  முடியும் என்பதே இவர்களின் வாதமாகும்


பார்க்க 👇


((المحلى)) لابن حزم (3/251)


((الشرح الممتع)) لابن عثيمين (5/40)



*மூன்றாம் கூற்றின் படி*


ذهب الشافعية والحنابلة : إلى أن الجمعة لا تصح إذا كان الحضور لها أقل من أربعين رجلاً .


" وَاشْتَرَطَ الشَّافِعِيَّةُ وَالْحَنَابِلَةُ 
: أَنْ لَا يَقِلَّ الْمُجْمِعُونَ عَنْ أَرْبَعِينَ رَجُلًا تَجِبُ فِي حَقِّهِمْ الْجُمُعَةُ . 


قَالَ صَاحِبُ الْمُغْنِي : 

أَمَّا الْأَرْبَعُونَ ، فَالْمَشْهُورُ فِي الْمَذْهَبِ : أَنَّهُ شَرْطٌ لِوُجُوبِ الْجُمُعَةِ وَصِحَّتِهَا
 

فتقام الجمعة بحضور أربعين 
فأكثر بالإمام من أهل القرية المكلفين الأحرار الذكور المستوطنين، 


بحيث لا يظعن منه أحدهم شتاء ولاصيفاً إلا لحاجة، 

ولو كانوا مرضى أو خرساً أو صماً، لا مسافرين، 


لكن يجوز كون الإمام مسافراً إن زاد العدد عن الأربعين، 

ولا تنعقد الجمعة بأقل من أربعين، 


ஜும்ஆ தொழுகையை நிலைநாட்டுவதற்கு நாற்பது நபர்கள் இருப்பது அவசியமாகும் 

என்பது இமாம் ஷாஃபிஈ ரஹ் 

மற்றும் இமாம் அஹ்மது ரஹ் அவர்களின் ஆய்வாகும்

எனவே ஊரில் வசிக்கக்கூடிய சுதந்திரமான ஆண்கள் 40 நபர்கள் இருப்பது 

அவர்கள் வியாதியஸ்தர் களாக இருந்தாலும் பரவாயில்லை 


ஆனால் பிரயாணிகளாக யாரும் இருக்கக் கூடாது 


ஆம் 40-க்கும் மேற்பட்ட நபர்கள் இருக்கின்ற பொழுது 

அதில் இமாம் பிரயாணியாக இருந்தாலும் பரவாயில்லை 


ஆனால் 40 நபர்களுக்கு குறைவாக இருக்கின்ற பொழுது ஜும்ஆத் தொழுகை நடத்த இயலாது 

என்பதே ஷாஃபிஈ மற்றும் ஹம்பலி  மத்ஹபின் நிலைப்பாடாகும்



لحديث كعب المتضمن أن عدد المصلين في أول صلاة جمعة بالمدينة مع أسعد بن زرارة كانوا أربعين رجلاً


وروى البيهقي عن ابن مسعود أنه صلّى الله عليه وسلم جمع بالمدينة وكانوا أربعين رجلاً. 


ولم يثبت أنه صلّى الله عليه وسلم صلى بأقل من أربعين، 


فلا تجوز بأقل منه. 

فلو انفض الأربعون أو بعضهم في الخطبة، لم تصح الجمعة؛ 

لأن سماع الأربعين جميع أركان الخطبة مطلوب، 

والمقصود من الخطبة إسماع الناس، فإن نقصوا عن الأربعين قبل إتمام الجمعة 

استأنفوا ظهراً ولم يتموها جمعة؛ 


لأن العدد شرط، فاعتبر في جميعها كالطهارة


மதினாவில் முதன் முதலாக ஜும்ஆ தொழுகை நடந்த பொழுது 40 நபர்கள் ஒன்று கூடினார்கள் 


எனவே 40 நபர்களுக்கு குறைவாக நபர்களை கொண்டு ஜூம்ஆ தொழுகை நடந்ததாக நபியவர்களின் எவ்வித கூற்றும் இடம்பெறவில்லை 

ஆகவே 40 நபர்களும் ஜும்ஆ தொழுகையை முழுமையாக நிறைவு பெறும் வரை ஒன்று கூடி இருக்க வேண்டும் 


அந்த 40 நபர்களில் யாரேனும் சிலர் குத்பாவின் போது வெளியேறிவிட்டால்  ஜும்ஆ தொழுகை நிறைவேறாமல் போய்விடும் 

ஏனெனில் 40 நபர்களும் குத்பாவை செவிமடுப்பது குத்பாவின்  முக்கியமான ருக்னில் ஒன்றாகும் 

எனவே நாற்பது நபர்களில் சிலர் குறைந்துவிட்டால் 

அப்போது ஜும்ஆ தொழுகைக்குப் பகரமாக லுஹர் தொழுகையை நிறைவேற்ற வேண்டும்



பார்க்க 👇



(نيل الأوطار: 230/ 3).

الفقه الاسلامى وأدلته (2/1296)

الموسوعة الفقهية " (27/203)



*நான்காம்  கூற்றின்படி*



واشترط البعض اثني عشر غير الإمام، 

ويشرط فيهم أن لا يكونوا مسافرين وهو مذهب المالكية في المشهور عنهم. 



ஜும்ஆத் தொழுகை நடத்துவதற்கு இமாமை தவிர்த்து 12 நபர்கள் உள்ளூர்வாசிகளாக இருந்தால் 

தாராளமாக ஜும்ஆத் தொழுகையை நடத்தலாம் என்பதே மாலிகி மத்ஹபின் ஆய்வறிக்கை யாகும்

அதற்கான ஆதாரம் 👇


كُنَّا مع النبيِّ صَلَّى اللَّهُ عليه وَسَلَّمَ يَومَ الجُمُعَةِ، 

فَقَدِمَتْ سُوَيْقَةٌ، قالَ: 

فَخَرَجَ النَّاسُ إلَيْهَا، فَلَمْ يَبْقَ إلَّا اثْنَا عَشَرَ رَجُلًا أَنَا فيهم، 

ஜும்ஆவுடைய தினத்தில் நாங்கள் நபியவர்களோ டு இருந்தபோது குடிப்பதற்கு பானம் கொண்டு வந்து வைக்கப்பட்டது 

அப்பொழுது நாங்கள் 12 நபர்கள் இருந்தோம்

அச்சமயத்தில் நபியவர்கள் கீழ்கண்ட வசனத்தை ஓதிக்காட்டினார்கள்


قالَ فأنْزَلَ اللَّهُ: 


وَاِذَا رَاَوْا تِجَارَةً اَوْ لَهْوَا۟ اۨنْفَضُّوْۤا اِلَيْهَا وَتَرَكُوْكَ قَآٮِٕمًا‌  قُلْ مَا عِنْدَ اللّٰهِ خَيْرٌ مِّنَ اللَّهْوِ وَمِنَ التِّجَارَةِ‌  وَاللّٰهُ خَيْرُ الرّٰزِقِيْنَ‏


(நபியே! சிலர் இருக்கின்றனர்;) அவர்கள் யாதொரு வியாபாரத்தையோ, அல்லது வேடிக்கையையோ கண்டால், 


(குத்பா ஓதும்) உங்களை நின்ற வண்ணமாக விட்டுவிட்டு அதனளவில் சென்று விடுகின்றனர். 

(ஆகவே, நபியே! அவர்களை நோக்கி,) நீங்கள் கூறுங்கள்: 


அல்லாஹ்விடத்தில் உள்ளது, 

இந்த வியாபாரத்தையும் வேடிக்கையையும்விட மிக மேலானதாகும், 

அன்றி, உணவு அளிப்பவர்களிலும் அல்லாஹ் மிக மேலானவன்.


(அல்குர்ஆன் : 62:11)


الراوي : جابر بن عبدالله 

المحدث : مسلم  

المصدر : صحيح مسلم

الصفحة أو الرقم: 863 

خلاصة حكم المحدث : [صحيح]

 

بيْنَما نَحْنُ نُصَلِّي مع النبيِّ صَلَّى اللهُ عليه وسلَّمَ إذْ أقْبَلَتْ عِيرٌ تَحْمِلُ طَعَامًا، 

فَالْتَفَتُوا إلَيْهَا حتَّى ما بَقِيَ مع النبيِّ صَلَّى اللهُ عليه وسلَّمَ إلَّا اثْنَا عَشَرَ رَجُلًا، 

فَنَزَلَتْ هذِه الآيَةُ: 

{وَإِذَا رَأَوْا تِجَارَةً أوْ لَهْوًا انْفَضُّوا إلَيْهَا وتَرَكُوكَ قَائِمًا} [الجمعة: 11].


நாங்கள் நபியவர்களுடன்  இருந்தபோது 

உணவை சுமந்த வாகனம் வந்தது 

அப்போது எங்களுடன் இருந்தவர்கள் 


அந்த வாகனத்தின் பக்கம் சென்று விட்டார்கள் 


நாங்கள் பன்னிரண்டு நபர்களே எஞ்சி இருந்தோம் 

அச்சமயத்தில் மேற்கண்ட வசனம் இறங்கியது


الراوي : جابر بن عبدالله 

المحدث : البخاري  

المصدر : صحيح البخاري

الصفحة أو الرقم: 936 

خلاصة حكم المحدث : [صحيح]


التخريج : أخرجه البخاري (936) 

واللفظ له، ومسلم (863)



ஷாஃபிஈ மற்றும் ஹம்பலி மத்ஹப் பெருமக்கள் 

ஜூம்ஆ தொழுகைக்கு 40 நபர்களின் எண்ணிக்கையை குறிப்பிட 

மேற்கோளாக எடுத்துக் காட்டும் ஆதாரமானது 👇


وأقوى ما احتج به الجمهور على اشتراط العدد 

ما رواه أبو داود وابن ماجه وغيرهما عن كعب بن مالك، 

أنه كان إذا سمع النداء يوم الجمعة ترحم لأسعد بن زرارة، 

فقلت له: إذا سمعت النداء ترحمت لأسعد بن زرارة، 

قال: "لأنه أول من جمع بنا في هزم النبيت من حرة بني بياضة في نقيع، 

يقال له: نَقِيعِ الْخَضَمَاتِ، فِي هَزْمٍ مِنْ حَرَّةِ بَنِي بَيَاضَةَ، 

قلت: كم أنتم يومئذ، 

قال: أربعون"، 


அப்துர் ரஹ்மான் பின் கஅப் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள் :


(எனது தந்தை) கஅப் பின் மாலிக் (ரலி) அவர்கள் ஜும்ஆவுடைய பாங்கைச் செவியுறும் போது 

அஸ்அத் பின் ஸுராரா (ரலி) அவர்களுக்காக பிரார்த்தனை செய்வார்கள்.  


நான் அவர்களிடம், "நீங்கள் ஜும்ஆவுடைய பாங்கைச் செவியுறும் போது அஸ்அத் பின் ஸுராராவுக்காக பிரார்த்தனை செய்கின்றீர்களே? என்று கேட்டேன். 


அதற்கு அவர்கள், "ஹஸ்முன் நபீத்" என்ற இடத்தில் எங்களை ஜும்ஆவுக்காக திரட்டிய முதல் நபர் அவர்தான். 


அந்த இடம் பனூ பயாளா குலத்தாரின் கருங்கற்களைக் கொண்ட நிலத்தில் நகீவுல் கள்மாத் என்ற தண்ணீர் நிறைந்த பகுதியாகும்'' என்று பதில் கூறினார்கள். 


"அன்றைய தினம் எத்தனை பேர் இருந்தீர்கள்'' என்று கேட்டேன். அதற்கு "நாற்பது பேர்'' என்று பதில் சொன்னார்கள்.


ஜும்ஆத் தொழுகை நடத்துவதற்கு நாற்பது நபர்கள் இருப்பது அவசியம் என்று கூறும் அறிஞர்கள் மேற்கண்ட செய்தியைத் தான் ஆதாரமாகக் காட்டுகிறார்கள். 


இந்தச் செய்தி ஆதாரப்பூர்வமானது

மதீனாவில் முதன் முதலில் நடத்தப்பட்ட ஜும்ஆவில் நாற்பது நபித்தோழர்கள் கலந்து கொண்டதாக இச்செய்தி கூறுவதால் ஜும்ஆத் தொழுகைக்கு நாற்பது நபர்கள் இருப்பது அவசியம் என்று வாதிடுகின்றனர்.
 

*ஐந்தாம் கூற்றின் படி*



وذهب الإمام أبو حنيفة في الأصح عنه إلى اشتراط ثلاثة رجال غير الإمام ولو كانوا مسافرين أو مرضى، 

فقال أبو حنيفة ومحمد: ثلاثة سوى الإمام،


ஹனஃபி மத்ஹபில் இமாம் அபூஹனிஃபா ரஹ் மற்றும் இமாம் முஹம்மது ரஹ் அவர்களின் கருத்தின்படி 

இமாமை தவிர்த்து மூன்று நபர்கள் இருந்தாலே ஜும்ஆ தொழுகையை நடத்தலாம் 

அவர்கள் பிரயாணியாக நோயாளியாக இருந்தாலும் பரவாயில்லை



பார்க்க 👇


مختصر الطحاوى (ص 35)



قال ابن نجيم الحنفي رحمه الله : 

" شَرْطُ صِحَّتِهَا ( يعني صلاة الجمعة ) أَنْ يُصَلِّيَ مَعَ الْإِمَامِ ثَلَاثَةٌ فَأَكْثَرُ ؛ 

لِإِجْمَاعِ الْعُلَمَاءِ عَلَى أَنَّهُ لَا بُدَّ فِيهَا مِنْ الْجَمَاعَةِ ، 


وَإِنَّمَا اخْتَلَفُوا فِي مِقْدَارِهَا ، 

فَمَا سبق هو قَوْلُ أَبِي حَنِيفَةَ وَمُحَمَّدٍ . 


وَقَالَ أَبُو يُوسُفَ : اثْنَانِ سِوَى الْإِمَامِ ؛ 

لِأَنَّهُمَا مَعَ الْإِمَامِ ثَلَاثةٌ" 


ஆக ஹனஃபி மத்ஹபை பொறுத்தமட்டில் 

இமாமோடு சேர்ந்து மூன்று அல்லது இரு நபர்கள் இருக்கின்ற பொழுதும் ஜூம்ஆ தொழுகையை நிறைவேற்றிக் கொள்ளலாம்


பார்க்க 👇


" البحر الرائق شرح كنز الدقائق " (2/162) .



وقال المرداوي الحنبلي رحمه الله – عند ذكره لشروط صحة الجمعة - : 


" وَعَنْ الإمام أحمد : تَنْعَقِدُ بِثَلَاثَةٍ ( يعني : الجمعة ) . 

اخْتَارَهَا الشَّيْخُ تَقِيُّ الدِّينِ ( يعني شيخ الإسلام ابن تيمية رحمه الله )


ஹம்பலி மத்ஹபின் ஒரு கூற்றின்படி 

மூவர் இருக்கின்ற பொழுதும் ஜும்ஆத் தொழுகையை நிறைவேற்றிக் கொள்ளலாம்


பார்க்க 👇


" الإنصاف " (2/379) ، 



من ذهب إلى اشتراط حضور أربعين رجلا وكان مع الإمام أقل من هذا العدد فإنه لا يصلي معه الجمعة ، 


لأنه يعتقد بطلانها ، ويصليها ظهرا .



وكذلك الإمام إذا كان يعتقد اشتراط حضور أربعين رجلا 


وكان المأمومون لا يشترطون ذلك ، 


وكانوا أقل من أربعين رجلا ، فإنه لا يصلي بهم إماما ، لأنه يعتقد بطلان الصلاة .


அதேபோன்று ஷாஃபிஈ மத்ஹபைப் பின்பற்றக்கூடியவர் ஹனஃபி மத்ஹபின் இமாமிற்கு பின்னால் நின்றுகொண்டு ஜும்ஆ தொழுவதானால் 

அப்பொழுது அந்த  ஜமாஅத்தில் 40 நபர்களைக் கொண்ட  முக்ததிகள் உள்ளூர்வாசிகளாக இருத்தல் வேண்டும் 

அதற்கு குறைவாக இருந்தால் அப்பொழுது ஷாஃபிஈ மத்ஹபின் முக்ததி லுஹர் தொழுது கொள்வார் 


அதேபோன்று ஹனஃபி மத்ஹபை பின்பற்றக்கூடிய முக்ததிகளுக்கு ஷாஃபிஈ மத்ஹபைச் பின்பற்றக்கூடிய ஒருவர் இமாமத் செய்வதானால் 

முக்ததி களின் எண்ணிக்கை நாற்பது இருக்க வேண்டும் 

40க்கு குறைவாக இருக்கின்ற பொழுது 

அந்த இமாம் லுஹர் தொழுது கொள்ள வேண்டும்


قال الماوردي – من الشافعية – رحمه الله : 


" وَإِذَا كَانَ الْإِمَامُ فِي الْجُمُعَةِ يَرَى أَنَّهَا لَا تَنْعَقِدُ بِأَقَلَّ مِنْ أَرْبَعِينَ رَجُلًا ، 


وَكَانَ الْمَأْمُومُونَ وَهُمْ أَقَلُّ مِنْ أَرْبَعِينَ رَجُلًا يَرَوْنَ انْعِقَادَ الْجُمُعَةِ بِهِمْ ، 


لَمْ يَجُزْ أَنْ يَؤُمَّهُمْ وَوَجَبَ عَلَيْهِ أَنْ يَسْتَخْلِفَ عَلَيْهِمْ أَحَدَهُمْ .


وَلَوْ كَانَ الْإِمَامُ يَرَى أَنَّهَا تَنْعَقِدُ بِأَقَلَّ مِنْ أَرْبَعِينَ رَجُلًا 

وَالْمَأْمُومُونَ لَا يَرَوْنَهُ وَهُمْ أَقَلُّ ، 

لَمْ يَلْزَمْ الْإِمَامَ وَلَا الْمَأْمُومِينَ إقَامَتُهَا ؛ 

لِأَنَّ الْمَأْمُومِينَ لَا يَرَوْنَهُ ، 

وَالْإِمَامَ لَمْ يَجِدْ مَعَهُ مَنْ يُصَلِّيهَا " .


ஆக ஹனஃபி பள்ளியில் ஷாஃபிஈ மத்ஹபை பின்பற்றக்கூடிய ஒருவர் இமாமாக இருக்கின்ற பொழுது 


ஜும்ஆத் தொழுகையில் 40க்கும் குறைவான நபர்களை அவர் பெற்றுக் கொண்டால் 

அப்பொழுது அவர் இமாமத் செய்யக்கூடாது 

மாறாக முக்ததிகளில் யாரேனும் ஒருவரை இமாமாக ஏற்பாடு செய்துகொள்ள வேண்டும்


பார்க்க 👇


" الأحكام السلطانية " .(ص/167)



ஜும்ஆத் தொழுகை சம்பந்தமாக 
இமாம்களின் மாறுபட்ட கருத்து வேறுபாடுகளை 
முழுமையாக அறிந்துகொள்ள பார்வையிடவும்👇



كشاف القناع " (2/30)
 
"بدائع الصنائع" 2/ 268، 

"الهداية" للمرغيناني 1/ 83.

"الفروع" 2/ 99، 

"المبدع" 2/ 152.

"ذيل طبقات الحنابلة" لابن رجب 2/ 387، 

"المقصد الأرشد" 1/ 132).

"الاختيارات" ص (79).

"الأم" 1/ 190، 

"المجموع" 4/ 502، 

"روضة الطالبين" 2/ 7.

"المغني" 2/ 204، 

"المحرر" 1/ 142، 

"الإنصاف" 2/ 378.

"بداية المجتهد" 1/ 158، 

"الكافي" لابن عبدالبر 1/ 149، 

"القوانين الفقهية" ص (85).

 الشرح الممتع " (5/41)




والله اعلم بالصواب 



فاسألوا اهل الذكر வாட்ஸ் அப் தளம்

08-07-2020
16-11-1441  புதன் 

عبد الرحیم انواری 2008
عفا اللہ عنہ 

Comments

Popular posts from this blog

ஸஜ்தா திலாவத் என்றால் என்ன?

தல்கீன் என்றால் என்ன ?

ரிஜ்க் எவ்வாறு கிடைக்கும்?