Posts

சுப்ஹு தொழுகையின் அவசியம்! பஜ்ர் (சுபூஹ்) தொழுகையின் சிறப்புக்கள். ஆண்கள் அதிகாலையில் எழும்புவது கடினமாக உள்ளதா? அதிகாலை என்பது மாற்றத்தின் நேரம். உலகில் பல மாற்றங்களை அல்லாஹ் அதிகாலை நேரத்திலேயே செய்கின்றான். எனவேதான் அதிகாலைத் தொழுகையை நிறைவேற்றுபவர்களை இஸ்லாம் வாழ்த்துகின்றது. வெறுமனே மீசையும் தாடியும் வைத்திருப்பவர்கள் அல்லர் ஆண்கள்; மாறாக அதிகாலைத் தொழுகையை செவ்வனே பள்ளிவாசலில் நிறைவேற்றுபவர்களே உண்மையான ஆண்கள் என்று இஸ்லாம் பட்டப் பெயர் சூட்டுகின்றது. நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்விடம் இவ்வாறு துஆ கேட்டார்கள்: “யா அல்லாஹ்! எனது சமூகத்திற்கு அதிகாலை நேரத்தில் அருள்வளத்தை நல்குவாயாக!”                           நூல் : அபூதாவூத் அண்ணலார் (ஸல்) அவர்களின் இந்தப் பிரார்த்தனைக்கு எந்தவிதத் தகுதியும் இல்லாமல் அதிகாலை நேரத்தில் தூங்கிக் கொண்டிருக்கும் சமூகமாகவே நம் சமூகம் இருக்கின்றது. ஃபாத்திமா (ரலி) அறிவிக்கின்றார்: அதிகாலை நேரத்தில் நான் படுக்கையில் புரண்டு பட...

இதுதான் زهد என்கிற தன்மை

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)  فقد بعث إليه مروان بن الحكم مائة دينار ذهباً ، فلما كان الغد أرسل إليه يقول: إن خادمي غلط فأعطاك الدنانير،وأنا لم أردك بها،وإنما أردت غيرك،فسقط في يد أبي هريرة وقال: أخرجتها في سبيل ولم يبت عندي منها دينار ،فإذا خرج عطائي فخذها منه . وإنما فعل ذلك مروان ليختبره، فلما تحرى الأمر وجده صحيحاً . (الكتاب: صور من حياة الصحابة) மர்வான் இப்னுல் ஹிகம் (அன்றைய ஆட்சியாளர்)அபூ ஹுரைரா(ரலியல்லாஹு அன்ஹு ) அவர்களுக்கு நூறு தீனார் தங்க காசுகளை அனுப்பி வைத்தார். (மறுநாள்) காலையில் இவ்வாறு  ஒரு நபரிடம் கூறி அனுப்பிவைத்தார் " என்னுடைய பணியாளர் தவறுதலாக உங்களிடம் தங்கக் காசுகளை கொடுத்துவிட்டார்.உங்களுக்கு அவற்றை (தருவதற்கு) நான் நாடவில்லை.வேறொருவருக்குத்தான் (தருவதற்கு) நாடினேன்.அது அபூ ஹுரைரா(ரலி) வாகிய தங்களின் கையிலே வந்துவிட்டது". அபூ ஹுரைரா (ரலி) கூறினார்கள் " அவைகளை(தங்க காசுகளை) அல்லாஹ்வின் பாதையிலே செலவழித்துவிட்டேன். அந்த தங்க காசுகளில் ஒரு காசுகூட (நேற்றைய) இரவில் என்னிடம் இருக்கவில்லை. என்னுடைய ஊதியம் வரும்போது அதிலிருந்து அவைகளை (தங்க கா...
Image
கண் அல்லாஹ் வழங்கிய அருட்கொடை நாம் காண்பதை ரசிப்பதற்கு நமக்கு அளிக்கப்பட்டிருக்கும் அதிசய உறுப்பு கண் ஆகும். நமது கண் ஒரு நிழற்படக் கருவியைப் போன்று இயங்குகிறது . ஒளியின் உதவியுடன் ஒரு நிழற்படக் கருவி பொருட்களைப் படம் பிடிப்பதைப் போல, நமது கண்ணும், ஒளியின் உதவியுடன் பொருட்களின் உருவத்தை கணப்பொழுதில் படம் பிடித்து, மனதில் பதிவு செய்து, பின்பு அதை மூளையில் விருத்திச் செய்கிறது. கண்ணின் அனைத்து பாகங்களும் ஒருங்கிணைந்து, ஒரு குழுவைப் போன்று இயங்கி, நமக்குப் பார்வை அளிக்கிறது. இதில் பிம்பத்தை தேக்கும் வல்லமையுள்ள விழிப்படலம் என்ற பாகம் முக்கிய பங்கு வகிக்கிறது. கருமையான ‘கண்மணி’க்குள் நுழையும் ஒளிக்கதிர்களை, விழிப்படலம் (cornea) திசை திருப்புகிறது. திசை திரும்பிய ஒளிக்கதிர், ‘கண்மணி’க்குப் பின்னால் உள்ள குவிஆடியைச் சென்றடைகிறது. இந்த ஆடி, தனது உருவத்தை மாற்றிக் கொண்டு, தொலைவில் மற்றும் அருகில் உள்ள பொருட்களின் மீது ஒளிக்கதிர்களை ஒருமுனைப்படுத்துகிறது. இச்செயல் ‘அக்காமடேஷன்’எனப்படுகிறது. நிழற்படக்கருவியிலுள்ள பிம்பத்தேக்கியைப் (film) போன்று இயங்கும், விழித்திரை (ஒளி...
"உண்பதற்க்கு காத்திருப்போர் சாப்பாட்டுப் பாத்திரத்தை (நோக்கி) பாய்வதைப் போன்று மற்ற சமூகத்தினர் என்னுடைய சமுதாயத்தவர்கள் மீது பாய்ந்து விடும் காலம் வரும்" என்று ஒரு முறை நபி (ஸல்) அவர்கள் கூறியபோது ஒருவர் கேட்டார் : " இறைத்தூதர் அவர்களே ! அந்த காலகட்டதில் மற்ற சமுகத்தினர் ஒன்றுபட்டு நம்மைத்தாக்கி, நம்மை விழுங்கிவிடுவார்களோ, என்று அச்சப்படும் வகையில் நம்முடைய சமுதாயம் எண்ணிகையில் மிகவும் குறைவாக ஆகிவிடுமோ ?" "இல்லை ! அப்போது நீங்கள் எண்ணிக்கையில் குறைந்தவர்களாக இருக்கமாட்டீர் கள். மாறாக வெள்ளத்தில் அடித்து வரும் நுரையைப் போன்று நீங்கள் அப்போது மதிப்பற்றவர்களாக ஆகிவிடுவிர்கள் ! உங்களைக் குறித்து மதிப்பச்சம் (மற்றவர்களிடம் ) இல்லாது போகும். கோழைத்தனமும், தைரியமின்மையும் உங்கள் உள்ளத்தில் குடி கொண்டுவிடும்." அப்போது ஒருவர் கேட்டார் : " இறைத்தூதர் அவர்களே ! இந்த பலகீனம் எங்களிடம் ஏற்படுவதற்க்கு காரணம் என்ன ? " இதற்க்கு காரணம் இதுவே ! நீங்கள் உலகமோகத்தில் முழ்கி விடுவீர்கள். மேலும், மரனத்தை விட்டு ஓடுவீர்கள்.மேலும் அதனை வெறுக்கத் தொடங்குவீர்கள் !...
மூட்டு வலிகளுக்கு நபிமொழி மருத்துவம்... www.abu_mahira@yahoo.com இன்று ஆண்களிலும், பெண்களிலும் அதிகமானவர்கள் இந்த மூட்டு வலியினால் அவதிப்படுகின்றனர். எனவே இந்த நபிமொழியைப் பின்பற்றலாமே ! "அத்திப்பழம் சாப்பிடுங்கள். 'சொர்கத்திலிருந்து இறங்கிய பழம்' ஒன்று உண்டென்றால், அது அத்திப்பழமேயாகும். சொர்கத்துப் பழங்களில் விதை கிடையாது. (அத்திப்பழமும் அப்படியே) எனவே, அதைச் சாப்பிடுங்கள். அது மூலத்தைப் போக்குகிறது; மூட்டு வலிகளை நீக்குகிறது" என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பாளர் : அபூதர் (ரழி) ஆதாரம் : கன்ஜுல் உம்மால் : 28276
நபிவழி மருத்துவம் ஜலதோஷத்திற்கு உடனடி மருத்துவம் செய்யாதீர்கள். எல்லா மனிதரின் தலையிலும், தொழு நோயைத் தோற்றுவிக்கும் ஒரு நரம்பு இருக்கிறது. அது புடைக்கும் போது, அதன் மீது அல்லாஹூ த ஆலா ஜலதோஷத்தைச் சாட்டுகிறான். எனவே ஜலதோஷத்திற்கு உடனடி நிவாரணம் தேடாதீர்கள். அறிவிப்பாளர் : ஆயிஷா (ரழி) : முஸ்தத்ரக் ஹாகிம் : 8262
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்தஹு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வார்த்தை உண்மையானது : சர்வதேச விஞ்ஞானம் அதிர்ச்சி....!! இறைவனின் இறுதி தூதரான நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 1400 ஆண்டுகளுக்கு முன்பு கூறிய வார்த்தை இன்று கண் முன்னால் நடப்பதை கண்ட விஞ்ஞான உலகம் அதிர்ச்சியில் திகைத்து உள்ளது. மேற்கு ஆசியாவிலுள்ள யூப்ரடீஸ் நதி வற்றி, அதில் தங்க புதையல் உண்டாவது மறுமை நாளுக்குறிய அடையாளமாக உலக மக்களுக்கு பிரகடனம் செய்தார்கள். மேலும் தங்க புதையலை காண்பவர்கள் அதிலிருந்து எதையும் எடுக்க கூடாது என்றார்கள். ஆனால் யூப்ரடீஸ் நதியை ஆரம்பத்தில் ஆய்வு செய்து சமர்ப்பித்த விஞ்ஞானிகள் நதி வற்றுவதற்கு வாய்ப்பே இல்லை என்று கூறினார்கள். காலங்கள் கடந்து செல்ல செல்ல இன்றைய விஞ்ஞான உலகம் ஆய்வு மேற்கொண்டு யூப்ரடீஸ் நதி 70 சதவீதம் வற்றி விட்டதாக அறிவித்துள்ளது. நாசாவின் Gravity Recovery and Climate Experiment (GRACE) என்ற அமைப்பு யூப்ரடீஸ் நதி 70 சதவீதம் வற்றி விட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. (அல்லாஹு அக்பர்) நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உலக மக்களுக்கு கொடுத்த எச்சரிக்கை.... (மேற்காசியாவில் ப...