கண் அல்லாஹ் வழங்கிய அருட்கொடை
நாம் காண்பதை ரசிப்பதற்கு நமக்கு அளிக்கப்பட்டிருக்கும் அதிசய உறுப்பு கண் ஆகும். நமது கண் ஒரு நிழற்படக் கருவியைப் போன்று இயங்குகிறது. ஒளியின் உதவியுடன் ஒரு நிழற்படக் கருவி பொருட்களைப் படம் பிடிப்பதைப் போல, நமது கண்ணும், ஒளியின் உதவியுடன் பொருட்களின் உருவத்தை கணப்பொழுதில் படம் பிடித்து, மனதில் பதிவு செய்து, பின்பு அதை மூளையில் விருத்திச் செய்கிறது.
கண்ணின் அனைத்து பாகங்களும் ஒருங்கிணைந்து, ஒரு குழுவைப் போன்று இயங்கி, நமக்குப் பார்வை அளிக்கிறது. இதில் பிம்பத்தை தேக்கும் வல்லமையுள்ள விழிப்படலம் என்ற பாகம் முக்கிய பங்கு வகிக்கிறது. கருமையான ‘கண்மணி’க்குள் நுழையும் ஒளிக்கதிர்களை, விழிப்படலம் (cornea) திசை திருப்புகிறது.
திசை திரும்பிய ஒளிக்கதிர், ‘கண்மணி’க்குப் பின்னால் உள்ள குவிஆடியைச் சென்றடைகிறது. இந்த ஆடி, தனது உருவத்தை மாற்றிக் கொண்டு, தொலைவில் மற்றும் அருகில் உள்ள பொருட்களின் மீது ஒளிக்கதிர்களை ஒருமுனைப்படுத்துகிறது. இச்செயல் ‘அக்காமடேஷன்’எனப்படுகிறது.
நிழற்படக்கருவியிலுள்ள பிம்பத்தேக்கியைப் (film) போன்று இயங்கும், விழித்திரை (ஒளிமின் மாற்றி-retina), ஆடி ஒரு தலைகீழ் உருவத்தைப் பதிக்கிறது. பதிக்கப்பட்ட உருவம், மின் விசைகளாக மூளைக்குள் செலுத்தப்பட்டு, அங்கு அவை விருத்திச் செய்யப்படுகின்றன.
மனிதர்களின் பார்வை கூர்மையையும் செல்களே தீர்மானிக்கின்றன. ஒவ்வொரு மனிதனுக்கும் கண்ணின் கருவிழி நிறத்தை உறுதி செய்வது அவனின் ஜீன்களாகும். நீலம், பச்சை, கருப்பு, பழுப்பு நிறம் ஆகியன மனித கருவிழியின் வண்ணங்களாகும். ஒவ்வொரு மனிதனுக்கும் அவன் விழித்திரை மாறுபடும். உலகில் உள்ள எந்த இரு மனிதருக்கும் விழித்திரை ஒன்றாக இருப்பதில்லை (இரட்டைப்பிறவிகளுக்கு கூட அவை மாறும்).
(விக்கி)
(விக்கி)
குர்ஆனில் அல்லாஹ் கூறுகின்றான்: அவனே உங்களுக்குச் செவியையும் பார்வைகளையும் உள்ளங்களையும் ஏற்படுத்தினான். குறைவாகவே நீங்கள் நன்றி செலுத்துகிறீர்கள். (23 :78)
Comments
Post a Comment