கடல் மற்றும் நில வாழ் உயிரினங்களை சாப்பிடுவதில் அறிஞர்களின் கருத்துக்கள் என்ன?

கேள்வி :

கடல் மற்றும் நில வாழ் பிராணிகளை புசிப்பதில்  அறிஞர் பெருமக்களின் கூற்றுக்கள் என்ன?


الجواب بعون الله الملك الوهاب 👇


وقد اختلف العلماء فيما يحل من حيوان البحر على أقوال :



முதலில் கடல்வாழ் உயிரினங்களை புசிப்பதிலே அறிஞர் பெருமக்களின் கருத்து வேற்றுமையானது நான்காகும்...




القول الأول : 


*முதலாம் கூற்று*



حل جميع حيوان البحر *وهذا قول المالكية – والأصح من مذهب الشافعية* . 



கடல் வாழ்பிராணிகள் அனைத்துமே புசிப்பதற்கு அனுமதிக்கப்பட்டவை




القول الثاني : 


*இரண்டாம் கூற்று*



حل جميع ما في البحر إلا الضفدع والتمساح والحية *وهو قول الحنابلة* 



கடல் வாழ் பிராணிகள் அனைத்தும் புசிப்பதற்கு அனுமதிக்கப்பட்டு இருந்தாலும் தவளை முதலை பாம்பு முதலியவை ஹராமாகும்



القول الثالث : 

*மூன்றாம் கூற்று*



جميع ما في البحر من الحيوان محرم الأكل إلا السمك خاصة 



கடல்வாழ் பிராணிகளில் மீன் இனத்தை தவிர்த்து மற்ற அனைத்தும் ஹராமாகும் புசிப்பதற்கு தடை செய்யப்பட்டவையாகும்



فإنه يحل أكله إلا ما طفا منه *وهذا قول الحنفية . ووجه في مذهب الشافية* 


அந்த மீன் வகைகளிலும் தானாக செத்தவை கள்  புசிப்பதற்கு மக்ரூஹ் ஆகும்



القول الرابع : 

*நான்காம் கூற்று*



يؤكل السمك وأما غير السمك فيؤكل منه ما يؤكل نظيره في البر كالبقر والشاة وغيرها – 



எப்பொழுதும் மீன்வகை புசிப்பதற்கு அனுமதிக்கப்பட்டவை,


கடல்வாழ்பிராணியில்  மீன் அல்லாதவைகளில் எதுவெல்லாம் தரையில் புசிப்பதற்கு அனுமதிக்கப்பட்டவையோ
 உதாரணமாக மாடு ஆடு போன்றவைகள் அவ்வகை பிராணிகள் கடலிலும் புசிப்பதற்கு அனுமதிக்கப்பட்டவை,


وما لا يؤكل نظيره في البر كخنزير الماء وكلبه فحرام 


*هذا وجه آخر في مذهب الشافعية وقول في مذهب الحنابلة*


நிலம் வாழ் பிராணிகளில்  எவ்வகைப் பிராணிகள் உண்பதற்கு தடை செய்யப்பட்டதோ அவ்வகை கடல்வாழ் உயிரினங்களும் தடை செய்யப்பட்டவையாகும்,
 உதாரணமாக கடல் பன்றி கடல் நாய் போன்றவைகள்



*قال الامام المالك رحمه الله* 


جميع ما في البحر حلال واستثني بعضهم الخنزير والكلب والانسان 


ஆக மாலிக்கீ மத்ஹபின் ஆய்வறிக்கையின் படி கடலில் உள்ள சில உயிரினங்களைப் தவிர பன்றி, நாய், மனித இனம் போன்றவைத்தவிர்த்து மற்ற அனைத்து உயிரினங்களும் புசிப்பதற்கு ஹலாலாக ஆக்கப்பட்டுள்ளது



பார்க்க 👇


الهداية ( 2/426)




*قال الامام الشافعي رحمه الله* 

وفي ذالك ثلاثة اوجه 

اصحها يحل جميع ما في البحر ، 
والثاني لايحل ، 

والثالث يحل ما له نظير مأكول في البر دون ما لا يؤكل نظيره 



ஷாஃபிஈ மத்ஹபின் ஆய்வறிக்கையின்படி கடல்வாழ் உயிரினங்களை புசிப்பதில் மூன்று வியாக்கியானங்கள் (explanation)
 தரப்படுகிறது



*ஒன்று :*



கடலில் உள்ள அனைத்தும் புசிப்பதற்கு அனுமதிக்கப்பட்டது,



 *இரண்டு :*



அதில் எல்லாமே அனுமதிக்கப்பட்டவை அல்ல,



*மூன்று :*



தரை வாழ் உயிரினங்களில் எதுவெல்லாம் புசிப்பதற்கு  அனுமதிக்கப்பட்டுள்ளதோ அது போன்றவைகள் நீர்வாழ் பிராணிகளிலும் புசிப்பதற்கு அனுமதிக்கப்பட்டவையாம்.


இதில் ஒன்றாம் சொல்லே மிக ஏற்றமானது



பார்க்க 👇

النووي علي مسلم (2/148)



*قال الامام ابو حنيفة رحمه الله* 


لايؤكل من حيوان الماء الا السمك 



ஹனஃபி மத்ஹபின் ஆய்வறிக்கையின்படி மீன் இனங்களைத் தவிர மற்ற எதுவும் நீர்வாழ் உயிரினங்களில் ஹலால் அனுமதிக்கப்படாது



பார்க்க 👇

الهداية (4/426)



جاء في الموسوعة الفقهية الكوتية في حكم أكل هذه الحيوات عند الشافعية ما يلي :



ﻭﻳﺤﺮﻡ ﻋﻨﺪ ﺍﻟﺸﺎﻓﻌﻴﺔ ﺍﻟﺤﻴﻮﺍﻥ ‏(ﺍﻟﺒﺮﻣﺎﺋﻲ ‏) ﺃﻱ ﺍﻟﺬﻱ ﻳﻤﻜﻦ ﻋﻴﺸﻪ ﺩﺍﺋﻤﺎ ﻓﻲ ﻛﻞ ﻣﻦ ﺍﻟﺒﺮ ﻭﺍﻟﺒﺤﺮ ﺇﺫﺍ ﻟﻢ ﻳﻜﻦ ﻟﻪ ﻧﻈﻴﺮ ﻓﻲ ﺍﻟﺒﺮ ﻣﺄﻛﻮﻝ . 



கடல் திடல் இருமார்க்கத்திலும் வாழும் உயிர்ப் பிராணிகளில் எது  திடலில் உண்பதற்கு  அனுமதிக்க படவில்லையோ அவ்வகை பிராணிகள் கடலிலும் உண்பதற்கு அனுமதிக்கப்பட மாட்டாது



ﻭﻗﺪ ﻣﺜﻠﻮﺍ ﻟﻪ ﺑﺎﻟﻀﻔﺪﻉ، ﻭﺍﻟﺴﺮﻃﺎﻥ، ﻭﺍﻟﺤﻴﺔ، ﻭﺍﻟﻨﺴﻨﺎﺱ، ﻭﺍﻟﺘﻤﺴﺎﺡ، ﻭﺍﻟﺴﻠﺤﻔﺎﺓ 


அவ்வகை அனுமதிக்கப்படாத உயிரினங்களாவது
 தவளை நண்டு பாம்பு நத்தை முதலை ஆமை போன்றவைகள்



ﻭﺗﺤﺮﻳﻢ ﻫﺬﺍ ﺍﻟﻨﻮﻉ ﺍﻟﺒﺮﻣﺎﺋﻲ ﻫﻮ ﻣﺎ ﺟﺮﻯ ﻋﻠﻴﻪ ﺍﻟﺮﺍﻓﻌﻲ ﻭﺍﻟﻨﻮﻭﻱ *ﻓﻲ " ﺍﻟﺮﻭﺿﺔ "* 



மேற்கண்ட பிராணிகள் கடலில் கிடைத்தாலும் உண்பதற்கு ஹராமாக்கப்பட்ட வை என இமாம் ராஃபிஈ ரஹ்  மற்றும் இமாம் நவவி ரஹ் இவ்விருவர் அவதானிக்கிறார்கள்



ﻭﺃﺻﻠﻬﺎ ﻭﺍﻋﺘﻤﺪﻩ ﺍﻟﺮﻣﻠﻲ . ﻟﻜﻦ ﺻﺤﺢ ﺍﻟﻨﻮﻭﻱ ﻓﻲ " ﺍﻟﻤﺠﻤﻮﻉ " 


ஆயினும் இமாம் நவவி ரஹிமஹுல்லாஹ் வின் கூற்று மஜ்மூஃவில் இப்படி உள்ளது👇


ﺃﻥ ﺟﻤﻴﻊ ﻣﺎ ﻳﻜﻮﻥ ﺳﺎﻛﻨﺎ ﻓﻲ ﺍﻟﺒﺤﺮ ﻓﻌﻼ ﺗﺤﻞ ﻣﻴﺘﺘﻪ، 



கடலில் வாழுகின்ற அனைத்தும் புசிப்பதற்கு அனுமதிக்கப்பட்டவை


ﻭﻟﻮ ﻛﺎﻥ ﻣﻤﺎ ﻳﻤﻜﻦ ﻋﻴﺸﻪ ﻓﻲ ﺍﻟﺒﺮ، ﺇﻻ ﺍﻟﻀﻔﺪﻉ، 


அவை தரையில் வாழ்வதற்கான சாத்தியம் இருந்தபோதிலும் சரி,


தவளையை தவிர்த்து மற்ற அனைத்தும் அனுமதிக்கப்பட்டவை



ﻭﻫﺬﺍ ﻫﻮ ﺍﻟﻤﻌﺘﻤﺪ ﻋﻨﺪ ﺍﻟﺨﻄﻴﺐ ﻭﺍﺑﻦ ﺣﺠﺮ ﺍﻟﻬﻴﺘﻤﻲ، 

ﻭﺯﺍﺩﺍ ﻋﻠﻰ ﺍﻟﻀﻔﺪﻉ ﻛﻞ ﻣﺎ ﻓﻴﻪ ﺳﻢ .



மேற்கண்ட கூற்றே ஷாஃபிஈ மத்ஹபின் படி ஆதாரம் பிடிப்பதற்கு மிக நம்பகமான கூற்றாகும்



ﻭﻋﻠﻰ ﻫﺬﺍ ﻓﺎﻟﺴﺮﻃﺎﻥ ﻭﺍﻟﺤﻴﺔ ﻭﺍﻟﻨﺴﻨﺎﺱ ﻭﺍﻟﺘﻤﺴﺎﺡ ﻭﺍﻟﺴﻠﺤﻔﺎﺓ ﺇﻥ ﻛﺎﻧﺖ ﻫﺬﻩ ﺍﻟﺤﻴﻮﺍﻧﺎﺕ ﺳﺎﻛﻨﺔ ﺍﻟﺒﺤﺮ ﺑﺎﻟﻔﻌﻞ ﺗﺤﻞ، 


மேற்கண்ட ஆய்வறிக்கையின்படி கடலில் வாழும் நண்டு பாம்பு நத்தை முதலை ஆமை போன்றவைகள் உண்பதற்கு அனுமதிக்கப்பட்ட வையே



ﻭﻻ ﻋﺒﺮﺓ ﺑﺈﻣﻜﺎﻥ ﻋﻴﺸﻬﺎ ﻓﻲ ﺍﻟﺒﺮ، 


அவைகள் நீர் இல்லாமல் தரையில் வாழமுடியுமானாலும் சரி அது கவனிக்கப்படாது



ﻭﺇﻥ ﻛﺎﻧﺖ ﺳﺎﻛﻨﺔ ﺍﻟﺒﺮ ﺑﺎﻟﻔﻌﻞ ﺗﺤﺮﻡ


ஆனால் தரையில் மட்டுமே இருக்கக்கூடிய பிராணிகளாக இருந்தால் அவை உண்பதற்கு ஹராமாகும் உதாரணமாக வயல் நண்டு போன்றவை



ஆக சற்று விரிவாக அநேக அறிஞர்களின் ஆய்வின்படி சொல்வதானால் நாம் சாப்பிடக்கூடிய பிராணிகளில் நீரில் வாழும் பொருட்களில் மீன் இனம் அனைத்தும் ஹலாலாகும். 


சுறா, இறால், கணவாய், திருக்கை, ஈக்கி இறால், ஆவுலியா என்னும் கடற்பசு மற்றும்  தாலஞ்சுறா 
போன்றவை மீன் இனத்தில் சேருகிறது.



மீன் இனத்திலும் தானாகச் செத்து மிதக்கின்ற மீன்கள் புசிப்பதற்கு மக்ரூஹ் ஆகும்.



மட்டி, சங்கு, சிப்பி, ஐவிரலி இவைகள் ஹராமாகும். மற்றொரு சொற்படி மக்ரூஹ் ஆகும். 



ஆமை, முதலை, அட்டை, அஞ்சாலை, பேத்தை, சொறி, நீர்ப்பாம்பு இவைகள் ஹராமாகும்.



அதே போல் நிலவாழ் பிராணிகளில் ஆடு, மாடு, ஒட்டகம், மான், குழி மான், கலைமான், மறை, முயல், உடும்பு, மாநிறமுள்ள வெள்ளெலி, முள்ளங்கோழி, முள்ளெலி, மரநாய், குழிநரி, அணில், குதிரை இன்னும் காலினால் அடித்துத் திண்ணாத பிராணிகள் அனைத்தும் ஹலாலாகும்.



ففي البحر الرائق شرح كنز الدقائق في الفقه الحنفي لابن نجيم ما نصه:

لَا يَحِلُّ أَكْلُ ذِي نَابٍ مِنْ سِبَاعِ الْبَهَائِمِ وَذِي مِخْلَبٍ مِنْ سِبَاعِ الطَّيْرِ 

لِمَا رَوَى ابْنُ عَبَّاسٍ رضي الله تعالى عنهما أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم 

نَهَى عَنْ أَكْلِ ذِي نَابٍ وَمِخْلَبٍ مِنْ سَبُعٍ وَطَيْرٍ 

رَوَاهُ مُسْلِمٌ وَالْجَمَاعَةُ 

وَالسِّبَاعُ جَمْعُ سَبُعٍ وَهُوَ كُلُّ مُخْتَطِفٍ مُنْتَهِبٍ جَارِحٍ قَاتِلٍ عَادَةً. إلى أن قال: 


وَالسِّبَاعُ الْأَسَدُ وَالذِّئْبُ وَالنَّمِرُ وَالْفَهْدُ وَالثَّعْلَبُ وَالضَّبُعُ وَالْكَلْبُ وَالْفِيلُ وَالْقِرْدُ وَالْيَرْبُوعُ وَابْنُ عِرْسٍ وَالنُّسُورُ الْأَهْلِيُّ وَالْبَرِّيُّ 


وَمِنْ الطَّيْرِ الصَّقْرُ وَالْبَازُ وَالْعُقَابُ وَالنَّسْرُ وَالشَّاهِينُ


அதேபோல் பறப்பன ஜீவராசிகளில் கோழி, சேவல், வான்கோழி, கானாங்கோழி, கின்னிக்கோழி, நெருப்புக் கோழி, புறா, அன்னம், தாரா, குயில், காடை, கௌதாரி, சிட்டு, கொண்டைக்களாத்தி,  பயிர்க்காகம், பொன்னி, அடைக்கலத்தான்,



அரபுநாட்டிலுள்ள பயிரில் விழும் ஒருவகை வெட்டுக் கிளி, அன்றில், கொக்கு, குருகு,குருவி, நாரை, புல்புல் (பாடும் பறவை), சிறகி, உள்ளான், பூணி (ஒருவகை நீர்ப்பறவை), தூக்கணாங்குருவி,


 மற்றும் காலினால் இடுக்கித் திண்ணாத பறவைகள் அனைத்தும் ஹலாலாகும்.



மேலும் சாப்பிடுவது ஹராமாக்கப்பட்ட ஆமை, காகம், பருந்து போன்றவற்றின் முட்டைகள் தீங்கு செய்யாததாக இருப்பதால் அதைச் சாப்பிடுவது மக்ரூஹ் தஹ்ரீமாகும்.



அறுக்காமல் தானே செத்த கோழி போன்றவற்றின் வயிற்றிலுள்ள முட்டை முழுமையாக இருப்பின் ஹலாலாகும்.



செத்தவற்றில் மீனும், மீன் வயிற்றில் செத்து நாறிவிடாத மீனும், பயிரில் விழும் மேற்கூறப்பட்ட வெட்டுக்கிளியில் செத்ததும் தவிர அறுக்காமல் செத்தவை அனைத்தும் ஹராமாகும்.



பெரிய மீனின் வயிற்றிலிருக்கும் நஜீஸ் துப்புரவு செய்யாமல் கருவாடாக்கினால் பிறகு கழுவுவது கொண்டு துப்புரவாகிவிடும் எனில் அது ஹலால் ஆகும், 



அதைகழுவாமல் சாப்பிடுவது ஹலாலாகாது. 



எறும்பு போன்றது தேன் போன்ற சாப்பிடும் பொருட்களில் விழுந்து செத்து, அதனை நீக்குவது சிரமமாக இருப்பின் அது ஹலாலாகும்.



மேலும் சாப்பிடுவதற்கு ஹலாலான மிருகங்களில் உள்ள சூம்பிய உறுப்பு, முன்துவாரம், பின்துவாரம், ஆணுறுப்பு, கழலை, ஊத்தாம்பட்டி, தோல், சவ்வு, நரம்பு ஆகியவற்றை சாப்பிடுவது மக்ரூஹ் ஆகும்.



ஆனால் அதிலுள்ள ரோமம், கொம்பு, திணியான எலும்பு போன்றவற்றை சாப்பிடுவது ஹராமாகும்.



நஜீஸில் முளைத்த கீரை, காய்கனிகளைச் சாப்பிடுவது மக்ரூஹ் அல்ல 



எனினும், மனிதர்களின் மலத்தில் முளைத்தவற்றை சாப்பிடுவதால் விதை வீக்கம் போன்ற நோய்கள் ஏற்படலாம், 



فقد اختلف العلماء في حل أكل لحم الزرافة على قولين 

ذكرهما السيوطي في الأشباه والنظائر، 

قال رحمه الله "مسألة الزرافة" 

قال: السبكي : 

المختار أكلها لأن الأصل الإباحة 

وليس لها ناب كاسر فلا تشملها أدلة التحريم، 

وأكثر الأصحاب لم يتعرضوا لها أصلاً لا بحل ولا بحرمة، 

وصرح بحلها في فتاوى القاضي الحسيني و الغزالي وتتمة القول وفروع ابن القطان وهو المنقول عن نص الإمام أحمد، 

وجزم الشيخ في التنبيه بتحريمها، 

ونقل في شرح المهذب الاتفاق عليه وبه قال أبو الخطاب من الحنابلة، 

ولم يذكرها أحد من المالكية و الحنفية وقواعدهم تقتضي حلها



ஒட்டகச் சிவிங்கி போன்ற பிராணியை சாப்பிடுவது ஹலால் என்றும், ஹராம் என்றும் இரு கருத்துக்கள் உள்ளன.



*எனவே கருத்து வேற்றுமை சொல்லப்பட்ட பிராணிகளை சாப்பிடாமல் இருப்பதே பேணுதலாகும்.*



ஒட்டகை, மாடு, ஆடு, கோழி ஆகியவை நஜீஸை திண்பவையாக இருந்தால் அதில் நஜீஸின் வாடை வெளிப்பட்டால் அதனுடைய பாலும், முட்டையும், இறைச்சியும் மக்ரூஹ் ஆகும். 



அவ்வாறு நஜீஸைத் தின்ற ஒட்டகத்திற்கு நாற்பது நாட்களும், மாட்டுக்கு முப்பது நாட்களும், ஆட்டுக்கு ஏழு நாட்களும், கோழிக்கு மூன்று நாட்களும் சுத்தமான தீனியைக் கொடுத்தால் மக்ரூஹ் நீங்கிவிடும். கழுவுவதினால் நீங்காது.

ஹனஃபி மத்ஹபின்படி மயில், ஆந்தை, கிளி ஆகிய பறவையினங்கள் ஹலாலாகும்.

மரங்கொத்திப் பறவையும், சாக்குருவியும், செம்புகமும் ஹனஃபி மத்ஹபின்படி சாப்பிடுவது மக்ரூஹ் ஆகும்.


மாலிகி மத்ஹப் ஆய்வின்படி உடலுக்குத் தீங்கு விளைவிக்காத சுத்தமான உயிரினங்கள் அனைத்தும் சாப்பிடுவதற்கு ஹலாலானவையே.



وَلَا تَأْكُلُوا مِمَّا لَمْ يُذْكَرِ اسْمُ اللَّهِ عَلَيْهِ وَإِنَّهُ لَفِسْقٌ ۗ



'முஃமினானவர்களே! அல்லாஹ்வுடைய பெயர் சொல்லப்படாததில் நின்றும் நீங்கள் புசிக்காதீர்கள்.



நிச்சயமாக அது(அல்லாஹ் அல்லாதவைகளின் பெயர் சொல்லி அறுத்ததையும், செத்;ததையும் திண்பது) பெரும் பாவமாகும்.'-



அல்குர்ஆன் 6:121
 

அதே போல் விலங்கினங்களைப் பொறுத்த வரை பன்றி  பற்றி  குர்ஆனில் (2:173, 5:3, 6:145, 16:115) ஹராம் என்று கூறப்பட்டுள்ளது.

வீட்டுக் கழுதை ஹராம் என்றும் புஹாரியில் வரும் 4217, 4215, 4199, 3155, 4218, 4227, 5115, 5522, 5527, 5528 ஆகிய ஹதீஸ்கள் கூறுகின்றன.



فعن جابر بن عبد الله رضي الله عنهما قال : 

( نهى رسول الله صلى الله عليه وسلم يوم خيبر عن لحوم الحمر الأهلية ورخص في الخيل ) 

رواه البخاري (3982) 
ومسلم (1941)



புஹாரி மற்றும் முஸ்லிம் ஷரீஃபில் வீட்டுக் கழுதை ஹராம் எனவும் குதிரை ஹலால் எனவும் கூறப்பட்டுள்ளது. 



இவை தவிர மற்ற விலங்கினங்களைப் பற்றி எவ்வாறு  முடிவு செய்வது  என்பதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பொதுவான ஓர்அளவுகோலை நம் முன்னே வைத்துள்ளார்கள். 



فقد صح عن النبي صلى الله عليه وسلم 

أنه نهى عن أكل كل ذي ناب من السباع، وكل ذي مخلب من الطيور. 

رواه مسلم. 



والمراد بذي الناب ما يعدو بنابه على الناس وأموالهم كالأسد والنمر والفهد والذئب 


فهذه المسميات وما في معناها محرمة عند جمهور العلماء


விலங்கினங்களில் எவற்றுக்குக் கோரைப் பற்கள் உள்ளனவோ அவற்றை  உண்ணக் கூடாது என்று நபிகள் நாயகம்صلى الله عليه وسلم தடை செய்தார்கள். 


மேற்பகுதியில் உள்ள பல் வரிசையின் முன் பற்களில் நான்கு பற்களுக்குப் பின் உள்ள பல் கோரைப் பல் எனப்படும்.


கோரைப் பல் என்பது மற்ற பற்களை விட நீளமாக இருக்கும்.


மனிதனுக்குக் கூட மற்ற விலங்கினம் அளவு இல்லா விட்டாலும் கோரைப்  பல் இருக்கிறது. 


மேல் பகுதியில் அமைந்துள்ள பற்களில் வலப்பக்கம் ஒரு பல்லும் இடப்பக்கம் ஒரு பல்லும் மற்ற பற்களை விட நீளம் அதிகமாக இருக்கும். 



இப்படி கோரைப் பல் எவற்றுக்கு உள்ளதோ அதை நாம் உண்ணக் கூடாது. 

ஆடு, மாடு போன்றவற்றின் பற்கள் அனைத்தும் சமமான உயரம் கொண்டதாக அமைந்திருக்கும்.

பூனை, நாய், சிங்கம், புலி போன்ற விலங்குகளுக்கு இரண்டு பற்கள் மட்டும் மற்ற பற்களை விட மிகவும் நீளமாக இருக்கும். 

இந்த அளவுகோலை விளங்கிக் கொண்டால் எவற்றை உண்ணலாம் என்பது எளிதில் விளங்கி விடும்.

கழுதையைப் பொறுத்தவரை அதன் பற்கள்  வரிசையாக இருந்தாலும் இந்த அளவு கோலில் அவை  அடங்காவிட்டாலும் அதைக் குறிப்பிட்டு ஹராமாக்கி விட்டதால் கழுதைக்கு  இந்த அளவு கோலைப் பொருத்தக் கூடாது. 

பல துறைகளிலும் விற்பன்னராக இருந்த அபூ அலீ இப்னு ஸீனா அவர்கள் விலங்கினங்களை ஆய்வு செய்து ஒரு தகவலை இப்படி தருகிறார்கள். 

அதாவது கொம்பு உள்ள எந்த உயிரினத்துக்கும் கோரைப் பல் இருக்காது  என்பதாக, 

எனவே எந்த விலங்குக்காவது கொம்பு இருந்தால் அதை நாம் உண்ணலாம்.

எவற்றுக்கு கொம்பு இல்லையோ அவற்றுக்கு மட்டும் கோரைப்  பல் உள்ளதா என்று ஆய்வு செய்த பின் உண்ணலாம். 

அநேக அறிஞர்களின் கூற்றின்படி கடல் வாழ் உயிரினங்களில் விலக்கப்பட்ட ஒன்று கூட இல்லை. 

கடல் வாழ் உயிரினங்கள் அனைத்துமே ஹலால் தான். 

கடல்வாழ் உயிரினங்களில் கோரைப் பற்கள் உள்ளதா என்று பார்க்குமாறு நபி صلى الله عليه وسلمஅவர்கள் கூறவில்லை,


اُحِلَّ لَـكُمْ صَيْدُ الْبَحْرِ وَطَعَامُهٗ مَتَاعًا لَّـكُمْ وَلِلسَّيَّارَةِ‌  

وَحُرِّمَ عَلَيْكُمْ صَيْدُ الْبَـرِّ مَا دُمْتُمْ حُرُمًا‌  وَاتَّقُوا اللّٰهَ الَّذِىْۤ اِلَيْهِ تُحْشَرُوْنَ‏ 



உங்களுக்கும் (இதர) பிரயாணிகளுக்கும் பலன் கிடைக்கும் பொருட்டு (நீங்கள் இஹ்ராம் கட்டியிருந்தாலும்) கடலில் வேட்டையாடுவதும், அதைப் புசிப்பதும் உங்களுக்கு ஹலாலாக - ஆகுமானதாக ஆக்கப்பட்டுள்ளது;

ஆனால் நீங்கள் இஹ்ராம் கட்டியிருக்கும் காலமெல்லம் தரையில் வேட்டையாடுவது உங்கள் மீது ஹராமாக்கப்பட்டுள்ளது. 

எனவே நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்ளுங்கள்,

அவனிடத்திலேயே நீங்கள் ஒன்று சேர்க்கப்படுவீர்கள்.


(அல்குர்ஆன் : 5:96)


وَهُوَ الَّذِىْ سَخَّرَ الْبَحْرَ لِتَاْكُلُوْا مِنْهُ لَحْمًا طَرِيًّا وَّتَسْتَخْرِجُوْا مِنْهُ حِلْيَةً تَلْبَسُوْنَهَا‌ وَتَرَى الْـفُلْكَ مَوَاخِرَ فِيْهِ وَلِتَبْتَغُوْا مِنْ فَضْلِهٖ وَلَعَلَّكُمْ تَشْكُرُوْن

َ‏ 
அவனே (உங்களுக்காக) கடலை வசப்படுத்தித் தந்துள்ளான்.


*அதிலிருந்து நீங்கள் புத்தம் புதிய மாமிசத்தைப் புசிக்க வேண்டும் என்பதற்காகவும்,*


நீங்கள் அணிகின்ற அழகுப் பொருட்களை அதிலிருந்து வெளிக் கொணர்ந்திட வேண்டும் என்பதற்காகவும்!

மேலும், கப்பல் கடலைப் பிளந்து கொண்டு செல்வதையும் நீர் காண்கின்றீர். 


மேலும், உங்கள் இறைவனின் அருளை நீங்கள் தேடுவதற்காகவும், அவனுக்கு நன்றி செலுத்தக் கூடியவர்களாய் நீங்கள் திகழ்வதற்காகவுமே இவையெல்லாம் இருக்கின்றன.


(அல்குர்ஆன் : 16:14)


கடல் வாழ் உயிரினங்களில் ஏதேனும் உண்ணத் தடை  செய்யப்பட்டது இருந்திருந்தால் அதை அல்லாஹ்வும் அவனது தூதரும்  கண்டிப்பாக கூறி இருப்பார்கள் என்பது அநேக அறிஞர்களின் வாதம் ஆகும்



அல்லாஹ்வும் அவனது தூதரும் கடல் வாழ் உயிரினங்களில் எந்த ஒன்றையும் நேரடியாக ஹராம் என அறிவிக்கவில்லை. 



وَلَا تُلْقُوْا بِاَيْدِيْكُمْ اِلَى التَّهْلُكَةِ   


மேலும், உங்களுடைய கைகளால் உங்களுக்கு அழிவைத் தேடிக்கொள்ளாதீர்கள். 


(அல்குர்ஆன் : 2:195)




وَلَا تَقْتُلُوْۤا اَنْـفُسَكُمْ‌ اِنَّ اللّٰهَ كَانَ بِكُمْ رَحِيْمًا‏ 



உங்களை நீங்களே மாய்த்துக் கொள்ள வேண்டாம்.



திண்ணமாக அறிந்து கொள்ளுங்கள்; அல்லாஹ் உங்கள்மீது அளப்பரிய கருணை புரிபவனாக இருக்கின்றான்.

(அல்குர்ஆன் : 4:29)




இந்த வசனங்களின் அடிப்படையில் மனிதனுக்குக் கேடு விளைவிக்கும் என்பது நிரூபணமானால் அவற்றை உண்ணக் கூடாது. 



இது  உயிரினங்களுக்கு மட்டுமின்றி தாவரத்துக்கும் தானியத்துக்கும் ஏனைய உணவு வகைகளுக்கும் பொதுவானதாகும். 



ஒரு தாவரத்தைச் சாப்பிடுவது கேடு விளைவிக்கும் என்றால் அதை  உண்பது  ஹராம் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. 



பாம்பு, பல்லி, கடல் வாழ் விஷ ஜந்துக்கள் ஆகியவை இந்த அளவுகோலுக்குள் அடங்கி விடும். 




تكلم الفقهاء قديماً عن حكم " خنزير الماء " ، وذهب عامتهم إلى إباحته .


ولكن الذي يبدو أن خنزير الماء الذي ذكره العلماء سابقاً يختلف عن " خنزير الماء" المشهور اليوم 
والموجود في أمريكا الجنوبية ، والذي يسمى " Capybara " .


والسبب في الاختلاف :
أن الخنزير الذي ذكره الفقهاء وحكموا بإباحته هو حيوان بحري ، 


بينما هذا الحيوان برمائي ، بل ذكر بعض العلماء أن المقصود بخنزير الماء : " الدولفين " .Dolphin 

فجاء في " حياة الحيوان الكبرى" للدَّميري (1/ 429) : " الْخِنْزِيرُ الْبَحْرِيُّ : 

سُئِل مَالِكٌ عَنْهُ ، فَقَال : أَنْتُمْ تُسَمُّونَهُ خِنْزِيرًا ، يَعْنِي أَنَّ الْعَرَبَ لاَ تُسَمِّيهِ بِذَلِكَ ؛ لأِنَّهَا لاَ تَعْرِفُ فِي الْبَحْرِ خِنْزِيرًا ، 

وَالْمَشْهُورُ أَنَّهُ : الدُّلْفِينُ" 



அதே போல் டால்பின் என்பது பன்றி வகையைச் சேர்ந்தது அல்ல. 
 

எனவே அதனை புசிப்பதும் ஹலால் என்பதாகவே அறிஞர் பெருமக்கள் அவதானிக்கிறார்கள்



والله اعلم بالصواب ✍


பதிவு 👇
فاسألوا اهل الذكر வாட்ஸ் அப் தளம்

19-06-2020
27-10-1441  வெள்ளி

عبد الرحیم انواری 2008
عفا اللہ عنہ 

دعا کی درخواست ہے

Comments

Popular posts from this blog

ஸஜ்தா திலாவத் என்றால் என்ன?

தல்கீன் என்றால் என்ன ?

ரிஜ்க் எவ்வாறு கிடைக்கும்?