Posts

Image
கண் அல்லாஹ் வழங்கிய அருட்கொடை நாம் காண்பதை ரசிப்பதற்கு நமக்கு அளிக்கப்பட்டிருக்கும் அதிசய உறுப்பு கண் ஆகும். நமது கண் ஒரு நிழற்படக் கருவியைப் போன்று இயங்குகிறது . ஒளியின் உதவியுடன் ஒரு நிழற்படக் கருவி பொருட்களைப் படம் பிடிப்பதைப் போல, நமது கண்ணும், ஒளியின் உதவியுடன் பொருட்களின் உருவத்தை கணப்பொழுதில் படம் பிடித்து, மனதில் பதிவு செய்து, பின்பு அதை மூளையில் விருத்திச் செய்கிறது. கண்ணின் அனைத்து பாகங்களும் ஒருங்கிணைந்து, ஒரு குழுவைப் போன்று இயங்கி, நமக்குப் பார்வை அளிக்கிறது. இதில் பிம்பத்தை தேக்கும் வல்லமையுள்ள விழிப்படலம் என்ற பாகம் முக்கிய பங்கு வகிக்கிறது. கருமையான ‘கண்மணி’க்குள் நுழையும் ஒளிக்கதிர்களை, விழிப்படலம் (cornea) திசை திருப்புகிறது. திசை திரும்பிய ஒளிக்கதிர், ‘கண்மணி’க்குப் பின்னால் உள்ள குவிஆடியைச் சென்றடைகிறது. இந்த ஆடி, தனது உருவத்தை மாற்றிக் கொண்டு, தொலைவில் மற்றும் அருகில் உள்ள பொருட்களின் மீது ஒளிக்கதிர்களை ஒருமுனைப்படுத்துகிறது. இச்செயல் ‘அக்காமடேஷன்’எனப்படுகிறது. நிழற்படக்கருவியிலுள்ள பிம்பத்தேக்கியைப் (film) போன்று இயங்கும், விழித்திரை (ஒளி...
"உண்பதற்க்கு காத்திருப்போர் சாப்பாட்டுப் பாத்திரத்தை (நோக்கி) பாய்வதைப் போன்று மற்ற சமூகத்தினர் என்னுடைய சமுதாயத்தவர்கள் மீது பாய்ந்து விடும் காலம் வரும்" என்று ஒரு முறை நபி (ஸல்) அவர்கள் கூறியபோது ஒருவர் கேட்டார் : " இறைத்தூதர் அவர்களே ! அந்த காலகட்டதில் மற்ற சமுகத்தினர் ஒன்றுபட்டு நம்மைத்தாக்கி, நம்மை விழுங்கிவிடுவார்களோ, என்று அச்சப்படும் வகையில் நம்முடைய சமுதாயம் எண்ணிகையில் மிகவும் குறைவாக ஆகிவிடுமோ ?" "இல்லை ! அப்போது நீங்கள் எண்ணிக்கையில் குறைந்தவர்களாக இருக்கமாட்டீர் கள். மாறாக வெள்ளத்தில் அடித்து வரும் நுரையைப் போன்று நீங்கள் அப்போது மதிப்பற்றவர்களாக ஆகிவிடுவிர்கள் ! உங்களைக் குறித்து மதிப்பச்சம் (மற்றவர்களிடம் ) இல்லாது போகும். கோழைத்தனமும், தைரியமின்மையும் உங்கள் உள்ளத்தில் குடி கொண்டுவிடும்." அப்போது ஒருவர் கேட்டார் : " இறைத்தூதர் அவர்களே ! இந்த பலகீனம் எங்களிடம் ஏற்படுவதற்க்கு காரணம் என்ன ? " இதற்க்கு காரணம் இதுவே ! நீங்கள் உலகமோகத்தில் முழ்கி விடுவீர்கள். மேலும், மரனத்தை விட்டு ஓடுவீர்கள்.மேலும் அதனை வெறுக்கத் தொடங்குவீர்கள் !...
மூட்டு வலிகளுக்கு நபிமொழி மருத்துவம்... www.abu_mahira@yahoo.com இன்று ஆண்களிலும், பெண்களிலும் அதிகமானவர்கள் இந்த மூட்டு வலியினால் அவதிப்படுகின்றனர். எனவே இந்த நபிமொழியைப் பின்பற்றலாமே ! "அத்திப்பழம் சாப்பிடுங்கள். 'சொர்கத்திலிருந்து இறங்கிய பழம்' ஒன்று உண்டென்றால், அது அத்திப்பழமேயாகும். சொர்கத்துப் பழங்களில் விதை கிடையாது. (அத்திப்பழமும் அப்படியே) எனவே, அதைச் சாப்பிடுங்கள். அது மூலத்தைப் போக்குகிறது; மூட்டு வலிகளை நீக்குகிறது" என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பாளர் : அபூதர் (ரழி) ஆதாரம் : கன்ஜுல் உம்மால் : 28276
நபிவழி மருத்துவம் ஜலதோஷத்திற்கு உடனடி மருத்துவம் செய்யாதீர்கள். எல்லா மனிதரின் தலையிலும், தொழு நோயைத் தோற்றுவிக்கும் ஒரு நரம்பு இருக்கிறது. அது புடைக்கும் போது, அதன் மீது அல்லாஹூ த ஆலா ஜலதோஷத்தைச் சாட்டுகிறான். எனவே ஜலதோஷத்திற்கு உடனடி நிவாரணம் தேடாதீர்கள். அறிவிப்பாளர் : ஆயிஷா (ரழி) : முஸ்தத்ரக் ஹாகிம் : 8262
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்தஹு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வார்த்தை உண்மையானது : சர்வதேச விஞ்ஞானம் அதிர்ச்சி....!! இறைவனின் இறுதி தூதரான நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 1400 ஆண்டுகளுக்கு முன்பு கூறிய வார்த்தை இன்று கண் முன்னால் நடப்பதை கண்ட விஞ்ஞான உலகம் அதிர்ச்சியில் திகைத்து உள்ளது. மேற்கு ஆசியாவிலுள்ள யூப்ரடீஸ் நதி வற்றி, அதில் தங்க புதையல் உண்டாவது மறுமை நாளுக்குறிய அடையாளமாக உலக மக்களுக்கு பிரகடனம் செய்தார்கள். மேலும் தங்க புதையலை காண்பவர்கள் அதிலிருந்து எதையும் எடுக்க கூடாது என்றார்கள். ஆனால் யூப்ரடீஸ் நதியை ஆரம்பத்தில் ஆய்வு செய்து சமர்ப்பித்த விஞ்ஞானிகள் நதி வற்றுவதற்கு வாய்ப்பே இல்லை என்று கூறினார்கள். காலங்கள் கடந்து செல்ல செல்ல இன்றைய விஞ்ஞான உலகம் ஆய்வு மேற்கொண்டு யூப்ரடீஸ் நதி 70 சதவீதம் வற்றி விட்டதாக அறிவித்துள்ளது. நாசாவின் Gravity Recovery and Climate Experiment (GRACE) என்ற அமைப்பு யூப்ரடீஸ் நதி 70 சதவீதம் வற்றி விட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. (அல்லாஹு அக்பர்) நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உலக மக்களுக்கு கொடுத்த எச்சரிக்கை.... (மேற்காசியாவில் ப...
Image
அன்று சொன்னவை என்றும் அர்த்தமுள்ளவை... ﻋﻦ ﺣﻔﺼﺔ، ﺯﻭﺝ اﻟﻨﺒﻲ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ، ﺃﻥ ﺭﺳﻮﻝ اﻟﻠﻪ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻛﺎﻥ ﺇﺫا ﺃﺭاﺩ ﺃﻥ ﻳﺮﻗﺪ ﻭﺿﻊ ﻳﺪﻩ اﻟﻴﻤﻨﻰ ﺗﺤﺖ ﺧﺪﻩ ﺛﻢ ﻳﻘﻮﻝ: «اﻟﻠﻬﻢ ﻗﻨﻲ ﻋﺬاﺑﻚ ﻳﻮﻡ ﺗﺒﻌﺚ، ﻋﺒﺎﺩﻙ ﺛﻼﺙ ﻣﺮاﺭ» ﺻﺤﻴﺢ நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், தமது வலது கையை, வலதுபுறக் கன்னத்தின் கீழ் வைத்துப் படுத்தவர்களாக, இந்த துஆவை மூன்று முறை ஓதுவார்கள். அறிவிப்பாளர் : ஹஃப்ஸா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள். நூல் : அபூதாவூது 5045 இன்று மருத்துவர்கள் வலதுபுறமாக படுத்து தூங்கினால் இதயம் சீராக செயல்படும் என்கிறார்கள். எனவே இனி நம்முடைய உலகவாழ்வில் நம்முடைய மார்க்கம் சொல்கிற முறைப்படி வாழ முயற்சி செய்வோம். அன்று சொன்னவை என்றும் அர்த்தமுள்ளவை தான்! நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தூங்குவதற்கு முன் பல துஆகளை ஓதி இருக்கிறார்கள். அதில் ஒன்று... தூங்கும் முன் اَللّهُمَّ أَسْلَمْتُ وَجْهِيْ إِلَيْكَ وَفَوَّضْتُ أَمْرِيْ إِلَيْكَ وَأَلْجَأْتُ ظَهْرِيْ إِلَيْكَ رَغْبَةً وَرَهْبَةً إِلَيْكَ لاَ مَلْجَأَ وَلاَ مَنْجَا مِنْكَ إِلاَّ إِلَيْكَ اَللّهُمَّ آمَنْتُ بِكِتَابِكَ الَّذِي أَنْزَلْتَ وَبِنَبِي...
அண்ணலாரின் அழகிய அறிவுரை... ﻋﻦ ﺃﺑﻲ ﻫﺮﻳﺮﺓ، ﻗﺎﻝ: ﻗﺎﻝ ﺭﺳﻮﻝ اﻟﻠﻪ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ: «ﺇﺫا ﻣﺮﺭﺗﻢ ﺑﺮﻳﺎﺽ اﻟﺠﻨﺔ ﻓﺎﺭﺗﻌﻮا». ﻗﻠﺖ: ﻳﺎ ﺭﺳﻮﻝ اﻟﻠﻪ ﻭﻣﺎ ﺭﻳﺎﺽ اﻟﺠﻨﺔ؟ ﻗﺎﻝ: «اﻟﻤﺴﺎﺟﺪ»، ﻗﻠﺖ: ﻭﻣﺎ اﻟﺮﺗﻊ ﻳﺎ ﺭﺳﻮﻝ اﻟﻠﻪ؟ ﻗﺎﻝ: «ﺳﺒﺤﺎﻥ اﻟﻠﻪ ﻭاﻟﺤﻤﺪ ﻟﻠﻪ ﻭﻻ ﺇﻟﻪ ﺇﻻ اﻟﻠﻪ ﻭاﻟﻠﻪ ﺃﻛﺒﺮ "நீங்கள் சுவனச் சோலையின் பக்கம் செல்லும் போது நன்கு மேய்ந்து கொள்ளுங்கள்" என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், நபித்தோழர்களிடம் கூறிய போது, 'சுவனச் சோலை என்றால் என்ன?' என்று நபித்தோழர்கள் கேட்டதற்கு, 'பள்ளிவாசல்கள்' எனப் பதில் கூறினார்கள். 'மேய்ந்து கொள்ளுதல் என்றால் என்ன?' என்று மீண்டும் ஸஹாபாக்கள் கேட்க, அதுதான்... ( ஸுப்ஹானல்லாஹி வல்ஹம்துலில்லாஹி வலா இலாஹ இல்லல்லாஹு வல்லாஹு அக்பர்) என்ற திக்ராகும் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் விளக்கமளித்தார்கள். அறிவிப்பாளர் : அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள். நூல் : திர்மிதீ 3509 அன்பானவர்களே! இன்று உலக அளவில் அதிகமானவர்கள் மனநிம்மதி, மனநிறைவு இல்லாமல் இருப்பதாக ஒரு ஆய்வு தகவல் சொல்கிறது. ஆனால் இஸ்லாமிய மார்க்கத்தில் இதற்கு வழி அன்றே சொல்ல...