இஸ்லாத்தில் முடி மற்றும் நகங்களை புதைப்பதின் சட்டம் என்ன? இன்னும் இறந்தவர்களின் முடிகளின் சட்டம் என்ன?

கேள்வி :

இஸ்லாத்தில் நகம் மற்றும் முடிகளை புதைப்பதின் சட்டமென்ன ?

மேலும் இறந்தவர்களின் முடிகளின் சட்டமென்ன ?   


மேலும் பெண்களின் முடிகளின் சட்டமென்ன?



*الجواب بعون الله الملك الوهاب ✍*


استحب بعض الفقهاء دفن ما قلم من أظفاره أو أزال من شعره، 

وهو مذهب الحنفية، والشافعية، والحنابلة.


பொதுவாக உடலிலிருந்து வெளியேற்றப்படும் நகம் மற்றும் முடிகளை கண்ணியமான முறையில் புதைப்பது மிக விரும்பத்தக்க காரியமாகும் என அநேக அறிஞர் பெருமக்கள் அவதானிக்கிறார்கள்


قال في الفتاوى الهندية 

"ينبغي أن يدفن ذلك الظفر والشعر المجزوز، 

فإن رمى به فلا بأس، 

وإن ألقاه في الكنيف أو في المغتسل يكره ذلك؛ 

لأن ذلك يورث داء؛ 

كذا في فتاوى قاضي خان. 

يدفن أربعة: الظفر والشعر وخرقة الحيض والدم، 


كذا في الفتاوى العتابية.  


பொதுவாக நகம் மற்றும் முடி மற்றும் ஹைளுடைய துண்டு துணி மற்றும் இரத்தம் இந்த நான்கையும் புதைக்க வேண்டும்


அதிலும் 
வெட்டப்பட்ட நகம் மற்றும் முடிகளை புதைப்பது நல்லது 

புதைக்காமல் வேறு எங்கேனும் தூக்கி எறிந்தாலும் குற்றமாகாது 


ஆயினும் அதனை கழிவறை மற்றும் குளியலறையில் போடுவது மக்ரூஹ் ஆகும்

அதனால் நோவினை உண்டாகலாம்


பார்க்க👇


الفتاوى الهندية (5/358)


بريقة محمودية الغياثية (4/84).


مجمع الأنهر (2/556)، 


درر الحكام شرح غرر الأحكام (1/323).



بالوں کو دفن کرنا یا  دریا برد کردینا چاہیے، 
یا ایسی جگہ مٹی میں ڈال دیں جہاں بے توقیری نہ ہو۔  

بوجہ احترام ان کا جلانا درستنہیں ۔



வெட்டப்பட்ட முடிகளை புதைப்பது அல்லது கடல் மற்றும் ஆற்றில் தூக்கி போடுவது அல்லது வேறு ஏதேனும் மண்ணில் போட்டு விட வேண்டும்


ஆக அதனை அவமரியாதை செய்யாத வண்ணம் அப்புறப்படுத்திவிட வேண்டும்



فتاوی محمودیہ میں ہے:


’’بال اورناخن کو جلانا جائز نہیں، 

ایسی عورتیں جو دفن نہیں کرسکتیں وہ کسی کپڑے یا کاغذ میں لپیٹ کر کہیں ڈال دیں، 


لیکن بالوں کے ٹکڑے ٹکڑے کردیں۔‘‘ 



அதேபோன்று நகம் மற்றும் முடிகளை எரிக்கக் கூடாது 

பெண்களுடைய முடிகளை புதைக்க சௌகரியமில்லையானால் துணி அல்லது ஏதேனும் பேப்பரில் முடிகளை துண்டு துண்டாக நறுக்கி வேறு எங்கேனும் போட்டுவிடவேண்டும்



பார்க்க👇


(فتاوی محمودیہ ج:٩ص:٤٠١)



"وفي الخانیة: 

ینبغي أن یدفن قلامة ظفره ومحلوق شعره، وإن رماه فلابأس به". 


புதைக்காமல் வேறு எங்கேனும் தூக்கி எறிவதும் குற்றமாகாது


பார்க்க👇


(حاشیة الطحطاوي علی مراقي الفلاح، ۱/۵۲۷)



قال النووي في المجموع 

"يستحب دفن ما أخذ من هذه الشعور والأظفار، ومواراته في الأرض، 


نقل ذلك عن ابن عمر رضي الله عنهما، 

واتفق عليه أصحابنا"،  


ஆக முடி மற்றும் நகங்களை பூமியில் புதைப்பது முஸ்தஹப் ஆகும்,


இவ்விஷயத்தில் ஷாஃபிஈ மத்ஹபின் அறிஞர்கள் ஒன்றுபட்ட கருத்தில் இருக்கிறார்கள்


பார்க்க👇

المجموع (1/342)


حاشية البجيرمي على الخطيب (2/208).



قال ابن قدامة من الحنابلة 

"ويستحب دفن ما قلم من أظفاره أو أزال من شعره...  



ஹம்பலி மத்ஹபின் படியும் 

முடி மற்றும் நகங்களை புதைப்பதே விரும்பத்தக்க காரியமாகும்


பார்க்க👇


المغني (1/64)


كشاف القناع (1/76)،


مطالب أولي النهى (1/87)



دليلهم على هذا الاستحباب:


ما رواه الطبراني في الكبير، 

قال: حدثنا محمد بن محمد التمار البصري، 

حدثنا يونس بن موسى الشامي وسليمان بن داود الشاذكوني، قالا: 

حدثنا محمد بن سليمان بن مسمول، 

حدثني عبيدالله بن سلمة بن وهرام، عن ميل بنت مشرح

قالت: رأيت أبي قلم أظفاره، ثم دفنها، 

وقال: أي بنية، هكذا رأيت رسول الله - صلَّى الله عليه وسلَّم - يفعل



மயில் என்ற பெண்மணி தனது தந்தை நகங்களை வெட்டி அதனை புதைப்பார்கள் என்றும் 

நபியவர்கள் இவ்வாறு செய்ததை அவர் கண்டதாகவும் கூறுகிறார்,


பார்க்க👇


شعب الإيمان للبيهقي (5/232) رقم 6487: 


الإصابة، (6/122): 


المعجم الكبير (20/322) 


الأوسط (6/150) رقم 5938

 
روى البيهقي في شعب الإيمان، قال: 

أخبرنا أبو بكر أحمد بن محمد بن الحارث الفقيه، 

أخبرنا أبو محمد بن حيان الأصبهاني، 

حدثنا علي بن سعيد العسكري، 

حدثنا عمر بن محمد بن الحسن، 

حدثنا أبي، 

حدثنا قيس بن الربيع، عن عبدالجبار بن وائل، عن أبيه، 

عن النبي - صلَّى الله عليه وسلَّم - 

كان يأمر بدفن الشعر والأظفار.


நபியவர்கள் முடிகளையும் நகங்களையும் புதைக்கும் படி உத்தரவு விடுபவர்களாக இருந்தார்கள்


பார்க்க👇


 شعب الإيمان (5/232).



روى ابن عدي، قال: ثنا محمد بن الحسن السكوني النابلسي بالرملة، 

قال: حدث أحمد بن سعيد البغدادي وأنا حاضر، 

حدثنا عبدالله بن عبدالعزيز بن أبي رواد، 

حدثني أبي، عن نافع، عن ابن عمر، 

قال رسول الله - صلَّى الله عليه وسلَّم -: 


((ادفنوا الأظفار والشعر والدم؛ فإنها ميتة))


நகங்கள் மற்றும் முடிகள் மற்றும் இரத்தத்தை புதைத்து விடுங்கள் 

நிச்சயமாக அவையும் மைய்யித்தாகும் என நபியவர்கள் கூறினார்கள்



பார்க்க👇


الكامل (4/201)، 


البيهقي في السنن الكبرى (1/23)، 


وأخرجه العقيلي في الضعفاء الكبير (2/279)



عن رجل من بني هاشم:

" أن رسول الله صلى الله عليه وسلم أمر بدفن الشعر، والظفر، والدم ".


நிச்சயமாக நபியவர்கள் முடிகள் மற்றும் நகம் மற்றும் இரத்தத்தை புதைக்கும் படி கட்டளையிடுபவர்களாக இருந்தார்கள்


பார்க்க👇


[ أخرجه ابن أبي شيبة في المصنف (25661) ].



قال مهنا: سألت أحمد عن الرجل يأخذ من شعره وظفره، أيدفنه أم يلقيه؟

قال: يدفنه.

قلت: بلغك فيه شيء؟

قال: كان ابن عمر يدفنه


இமாம் அஹ்மத் ரஹ் அவர்களிடத்தில் முடிகளை புதைக்க வேண்டுமா அல்லது தூக்கி எறிய வேண்டுமா என்று வினவப்பட்டபோது 

புதைக்க வேண்டும் என்றார்கள் 

இவ்விஷயத்தில் ஏதேனும் செய்தி தங்களுக்கு கிடைத்துள்ளதா என்று வினவப்பட்டபோது 

ஆம் இப்னு உமர் ரலி அவர்கள் புதைப்பவர்களாக இருந்தார்கள் என்று கூறினார்கள்


பார்க்க👇


المغني (1/64، 65)



امام احمد بن حنبل رحمہ اللہ کہتے ہیں:


"بالوں اور ناخنوں کو دفن کیا جائے، اور اگر دفن نہ کرے تو اس میں کوئی حرج والی بات نہیں ہے" 


امام احمد سے یہ بات خلال رحمہ اللہ نے اپنی کتاب: "الترجل میں نقل کی ہے


அதேபோன்றே முடிகளையும் நகங்களையும் புதைக்காமல் விட்டுவிட்டாலும் குற்றமாகாது என்றும் இமாம் அஹ்மத் ரஹ் அவர்கள் கூறினார்கள்


பார்க்க👇


"الترجل": (صفحہ: 19)



وذهب بعض العلماء إلى أن ذلك حرام، 

قال صاحب كنز الدقائق وهو حنفي: 

ولايسرح شعره ولحيته، ولايقص ظفره وشعره)؛ 

لأنها للزينة، 

وقد استغنى عنها، 

والظاهر أن هذا الصنيع لايجوز. 


قال في القنية: 

أما التزين بعد موتها والامتشاط وقطع الشعر لايجوز، والطيب يجوز". 



அதேசமயம் மரணித்துவிட்டவர்களின் முடிகளையும் நகங்களையும் வெட்டுவது ஹராம் என அனேக அறிஞர் பெருமக்கள் தீர்ப்பு அளிக்கிறார்கள்


எனவே மரணித்த விட்டவர்களை அலங்கரிப்பதற்காக தலை வாருதல் கூடாது 

அதே சமயம் நறுமனம் போன்றவை பயன்படுத்திக் கொள்ளலாம்


பார்க்க👇


البحرالرائق (5/278)


قال شارحه ابن نجيم: 

والظاهر أن هذا الصنيع لا يجوز.  

وعلى كل فإن ما سقط من الميت يدفن معه إن كان لا يزال موجوداً 
وإلا دفن لوحده، 

قال صاحب مجمع الأنهر: 

وفي ؟؟؟ لو قطع ظفره أو شعره أدرج معه في الكفن


 மரணித்த விட்டவர்களின் முடிகளோ நகங்களோ உதிர்ந்து விட்டால் 

அதனை கஃபன் துணியிலேயே வைத்து புதைத்துவிட வேண்டும்



فإن شعر المرأة عورة بالإجماع، 

فلا يجوز لها أن تظهر شيئًا منه أمام الأجانب ولو كان يسيرًا.


بل لا يجوز لها أن تكشف عن شيء من وجهها على الراجح من أقوال العلماء



பெண்களின் உரோமங்களை பொருத்தமட்டில் அது عورة மறைக்கப்பட வேண்டிய ஒன்றாகும் 

எனவே எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் அதனை வெளிப்படுத்துவது ஹராமாகும்



பார்க்க 👇


(الاختيار لتعليل المختار (4/156) 
تأليف عبد الله بن محمود بن مودود الموصلي الحنفي 


(المجموع 3/167، 168)



میّت کی داڑھی یا سر کے بال میں   کنگھا کرنا یا ناخن تراشنا یا کسی جگہ کے بال مونڈنا یا کترنا یا اُکھاڑنا، ناجائز و مکروہ و تحریمی ہے 


بلکہ حکم یہ ہے کہ 

جس حالت پر ہے اُسی حالت میں   دفن کر دیں   ، 

ہاں   اگر ناخن ٹوٹا ہو تو لے سکتے ہیں   

اور اگر ناخن یا بال تراش لیے تو کفن میں   رکھ دیں   ۔ 


ஆக இறந்து விட்டவர்களினுடைய முடிகளை சீவுவது வாருவது அலங்கரிப்பது கூடாத காரியமாகும் 

அவ்வாறு சீவி முடி உதிர்ந்து விட்டால் அதனை கஃபன் துணியிலேயே வைத்து விட வேண்டும்


பார்க்க👇


( ردالمحتار، کتاب الصلاۃ، باب صلاۃ الجنازۃ، مطلب: فی القراء ۃ عند المیت، ۳ / ۱۰۴)


میت کے جسم کا جو عضو بیماری وغیرہ کی وجہ سے نکالا گیا ہو اُن سب کو دفنانا ہوگا۔  


மையத்தினுடைய உடம்பிலிருந்து ஏதேனும் காரணமாக ஏதேனும் ஒரு عضو வெளியேறி விட்டால் அதனைப் புதைத்து விட வேண்டும்


(دارالافتاء اہلسنّت)



குறிப்பு :

உங்களுடைய கேள்வியின் பிரகாரம் 
இறந்து அடக்கம் செய்யப்பட்டு விட்ட அந்தப் பெண்மணியின் முடிகளை ஏதேனும் துணியில் சுருட்டி வாய்ப்பு இருக்கும் பட்சத்தில் கபருஸ்தானில் 

அல்லது நடமாட்டமில்லாத ஏதேனும் ஒரு பகுதியில் புதைத்து விட வேண்டும்



والله اعلم بالصواب ✍


பதிவு 👇
فاسألوا اهل الذكر வாட்ஸ் அப் தளம்


عبد الرحیم انواري
عفا اللہ عنہ 


Comments

Popular posts from this blog

ஸஜ்தா திலாவத் என்றால் என்ன?

தல்கீன் என்றால் என்ன ?

ரிஜ்க் எவ்வாறு கிடைக்கும்?