இறந்தவர்களுக்காக குர்ஆன் ஓதி ஈஸால் ஸவாப் செய்வதின் சட்டம் என்ன?
கேள்வி :
இறந்தவர்களுக்காக குர்ஆன் ஓதுவதன் சட்டமென்ன?
الجواب بعون الله الملك الوهاب
قال شيخ الإسلام ابن تيمية -رحمه الله- في عرضه للخلاف في كتابه الناس على قولين:
أحدهما:
أن ثواب العبادات البدنية: من الصلاة، والقراءة وغيرهما، يصل إلى الميت،
كما يصل إليه ثواب العبادات المالية بالإجماع. وهذا مذهب أبي حنيفة، وأحمد وغيرهما،
وقول طائفة من أصحاب الشافعي، ومالك. وهو الصواب؛
لأدلة كثيرة، ذكرناها في غير هذا الموضع.
والثاني:
أن ثواب البدنية لا يصل إليه بحال، وهو المشهور عند أصحاب الشافعي، ومالك
பொதுவாக மரணித்தவர்களுக்காக உயிருள்ளவர்களால் நன்மையை நாடி செய்யப்படும் வணக்க வழிபாடுகளில்
எது அவர்களுக்கு போய்ச்சேரும் எது சேராது என்பதில் அறிஞர் பெருமக்களுக்கு மத்தியில் அபிப்பிராய பேதங்கள் நிலவுகிறது
பொருள்வழியாய் செய்யப்படும் வணக்க வழிபாடுகளின் நன்மைகள் மரணித்தவர்களுக்கு போய் சேரும் என்பதில் எவ்வித கருத்து வேறுபாடும் இல்லை
ஆனால் உடல் வழியாய் செய்யப்படும் அமல்களின் நன்மைகளும் அவர்களுக்கு போய் சேரும் என்பதே சரியான கூற்றாகும்
இதுவே ஹனஃபி மற்றும் ஹம்பலி மத்ஹபின் பிரதானமான அறிக்கையாகும்
அதேபோன்று ஷாஃபிஈ மற்றும் மாலிக்கி மத்ஹபின் அறிஞர்களும் ஏகமனதாக இல்லாவிட்டாலும்
ஒருமனதாக இதனை வழி மொழிகிறார்கள்
ஆனால் ஷாஃபிஈ மற்றும் மாலிக்கி மத்ஹபின் பிரதானமான அறிக்கையின்படி
உடல் வழியாய் செய்யப்படும் அமல்களின் நன்மைகள் மரணித்தவர்களுக்கு போய் சேராது என்பதேயாம்
பார்க்க:
اقتضاء الصراط المستقيم (ص741)
(مجموع فتاوى ج24 ص315، ص366)
قال الإمام النووي:
“والمشهور في مذهبنا -أي مذهب الشافعي- أن قراءة القرآن للميت لا يصله ثوابها.
وقال جماعة من أصحابنا: يصله ثوابها. وبه قال أحمد بن حنبل.
இமாமுனா ஷாஃபிஈ ரஹ் அவர்களின் ஆய்வின்படி
குர்ஆன் ஓதி மரணித்தவர்களுக்கு அதன் நன்மையை சேர்க்க இயலாது என்றிருந்த போதிலும்
நமது اصحاب களில் பெரும் கூட்டம் குர்ஆன் ஓதியும் அதன் நன்மையை மரணித்தவர்களுக்கு எத்தி வைக்க முடியும் என உறுதிபூண்டு கிறது
என்று இமாம் நவவீ ரஹ் அவர்கள் கூறுகிறார்கள்
பார்க்க:
(صحيح مسلم بشرح النووي ج7ص90).
وفي “المغني” لابن قدامة الحنبلي في الاحتجاج لوصول ثواب قراءة القرآن للميت قوله:
“وهذه أحاديث صحاح، وفيها دلالة على انتفاع الميت بسائر القرب،
لأن الصوم والحج والدعاء والاستغفار عبادات بدنية قد أوصل الله نفعها إلى الميت،
فكذلك ما سواها مع ما ذكرنا من الحديث في ثواب من قرأ سورة (يس) وتخفيف الله -تعالى- عن أهل المقابر بقراءته،
ولأنه إجماع المسلمين، فإنهم في كل عصر ومصر يجتمعون ويقرأون القرآن ويهدون ثوابه إلى موتاهم من غير نكير”
குர்ஆனின் மூலம் இறந்தவர்களுக்கு அதன் நன்மையை எத்தி வைக்க முடியும் என்பதற்கு ஆதாரப்பூர்வமான பல நபிமொழிகள் சான்றாக இருக்கிறது
எவ்வாறு நோன்பு ஹஜ்ஜு தர்மம் இஸ்திஃfபார் துஆ இதுபோன்று உடல் வழியாய் செய்யப்படும் அமல்களின் நன்மைகளை மரணித்தவர்களுக்கு எத்தி வைக்க முடியுமோ
அதேபோன்றே குர்ஆன் ஓதியும் அதிலும் குறிப்பாக யாசீன் சூராவை ஓதியும் அதன் நன்மையை எத்தி வைக்க முடியும்
அதன் மூலம் அல்லாஹுத்தஆலா அவர்களுடைய வேதனையையும் கேள்வி கணக்கையும் இலேசாக்க முடியும் என்பதற்காக வேண்டிதான்
ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு காலத்திலும் மக்கள் ஒன்றுகூடி மரணித்தவர்களுக்காக குர்ஆன் ஓதி அதன் நன்மையை எத்தி வைக்கிறார்கள்
இது எக்காலத்திலும் எந்த அறிஞர்களாலும் மறுக்கப்படவில்லை என இமாம் இப்னு குதாமா ரஹ் அவர்கள் கூறுகிறார்கள்
பார்க்க:
(المغني ج2 568).
وقد صرح الحنفية بانتفاع الميت بإهداء ثواب قراءة القرآن له،
فقد جاء في “الدر المختار ورد المحتار”:
“ويقرأ سورة (يس) لما ورد:
من دخل المقابر فقرأ سورة (يس) خفف الله عنهم يومئذ، وكان له بعدد من فيها حسنات”
கப்ருஸ்தானிற்குள் நுழைந்து கப்ராளிகளுக்காக யாசீன் சூராவை ஓதுவதால்
அதன் எண்ணிலடங்கா நன்மையின் மூலமாக அல்லாஹுத்தஆலா அவர்களின் கப்ரின் வாழ்க்கையை இலேசாக்குகிறான்
என இமாம் இப்னு ஆபிதீன் ரஹ் அவர்கள் கூறுகிறார்கள்
பார்க்க:
(الدر المختار ورد المحتار ج2 ص243)
قال احمد المروزي سمعت احمد بن حنبل رحمة الله عليه
يقول اذا دخلتم المقابر فاقرؤا بفاتحة الكتاب والمعوذتين وقل هو الله احد
واجعلوا ثواب ذلك لاهل المقابر فانه يصل اليهم
கப்ருக்குச் சென்றால் ஃபாத்திஹா சூராவையும் முஅவ்வித்தைனியையும் குல் ஹூவல்லாஹூ அஹதையும் ஓதி அதன் நன்மையை கப்ராளிகளுக்குக் சேர்த்து வையுங்கள் .
கண்டிப்பாக அது அவர்களை சென்றடையும் என்று அஹமத் இப்னு ஹம்பலி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் கூற நான் கேட்டேன் .
அறிவிப்பவர் : அஹ்மதுல் மரூஸி ,
பார்க்க:
مرقات - ج - ٢ ، ص - ٣٨١ ،
اعانة - ج - ٢ - فصل في الصلات على الميت
ومن المعلوم أن المالكية والشافعية عندهما قولان في المسألة،
عدم وصول الثواب وهو قول المتقدمين منهم، ومنهم الشافعي -كما أشرت-
وقول المتأخرين بوصول الثواب...
ومن المعلوم أن المذهب لا يقتصر على أقوال الإمام وآرائه وحده،
وقد نقل الإمام النووي في الأذكار ورياض الصالحين عن الإمام الشافعي رحمه الله قوله:
ويستحب أن يقرأ عنده (الميت) شيء من القرآن وإن ختموا القرآن كله كان حسناً
மாலிக்கி மற்றும் ஷாஃபிஈ மத்ஹபின் முன்னவர்களின் கூற்றின் படி
மரணித்தவர்களுக்கு குர்ஆனின் நன்மைகள் சேராது என்றபோதிலும்
பின்னவர்களின் கூற்றின் படி மரணித்தவர்களுக்கு குர்ஆனின் நன்மைகள் நிச்சயம் சேரும் என்றே அறிய முடிகிறது
மைய்யித்திற்காக குர்ஆன் ஓதுவது முடிந்தால் முழு குர்ஆனையும் ஓதி ختم செய்வது விரும்பத்தக்க காரியமாகும் என்ற இமாம் ஷாஃபிஈ ரஹ் அவர்களின் கூற்றை இமாம் நவவீ ரஹ் அவர்கள் பதிவு செய்கிறார்கள்
பார்க்க:
رياض الصالحين، ص 386 .
“نيل الأوطار ج 4 ص 142”
قرآن پاک کی تلاوت چاہے انفرادی طور پر ہو یا کسی جگہ اکٹھے ہوکر دونوں طرح صحیح اور مستحسن ہے۔
تلاوتِ قرآن کی اصل غایت تو رضائے الٰہی ہے؛
لیکن دوسرے مقاصد خیر کے لیے بھی قرآن کریم کا پڑھنا احادیث وآثار سے ثابت ہے؛
چنانچہ ایصال ثواب کے لیے جو ایک شرعی مقصد ہے،
قرآن کریم کا پڑھنا خیرالقرون کے زمانہ سے جاری اور صحابہٴ کرام کی ایک جماعت سے ثابت ہے۔
மரணித்தவர்களுக்காக தனியாகவோ அல்லது ஒன்றுகூடியோ அமர்ந்து குர்ஆனை ஓதி அதன் நன்மையை எத்தி வைப்பது خير القرون சிறந்த காலத்து பெருமக்களிடமிருந்து தொன்றுதொட்டு வந்திருக்கும் சிறந்த நடைமுறையாகும்
حدیث شریف میں ہے:
ان لکل شیء قلب وقلب القرآن یسین
فاقروٴہا علی موتاکم
عَنْ مَعْقِلِ بْنِ يَسَارٍ رضي الله عنه قَالَ :
قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ :
( اقْرَءُوا يس عَلَى مَوْتَاكُمْ ) .
ہر چیز کا ایک دل ہوتا ہے، قرآن پاک کا دل سورئہ یٰسین ہے،
پس اسے مردوں پر پڑھا کرو؛
உங்களில் மரணித்தவர்களுக்காக சூரா யாசீன் ஓதி அதன் நன்மையை அடைய செய்யுங்கள் என்பது நபி மொழியாகும்
பார்க்க:
أحمد (19789)
وأبو داود (3121)
اس لیے میت کے لیے یٰسین شریف پڑھنا اور پڑھوانا دونوں درست ہے۔
ஆகவே மரணித்தவர்களுக்காக யாசினை ஓதுவதும் ஓத வைப்பதும் இரண்டும் சரியானதே,
பார்க்க:
(فتح القدیر)
محی السنہ امام نووی اپنی کتاب ”التبیان میں انصار مدینہ کا ایک معمول نقل کرتے ہیں
الأنصار اذا حضروا عند المیت قروٴا سورة البقرة․
انصار مدینہ جب میت کے پاس حاضر ہوتے تو سورئہ بقرہ پڑھا کرتے تھے۔
அன்ஸாரித்தோழர்கள் மரணித்தவர்களுக்காக சூரா பகராவை ஓதி அதன் நன்மையை எத்தி வைப்பவர்களாக இருந்தார்கள்
பார்க்க:
”التبیان فی آداب حملة القرآن“
مشہور شارحِ مشکوٰة ملا علی قاری جلیل القدر تابعی امام شعبی کا قول نقل کرتے ہیں
کانت الأنصار اذا مات لہم المیت اختلفوا الی قبرہ یقروٴن القرآن
அன்ஸாரித்தோழர்கள் மைய்யித்திற்கு குர்ஆனை ஓதி ஈஸால் ஸவாப் செய்பவர்களாக இருந்தார்கள்
பார்க்க :
(مرقات صفحہ ۱۹۸:۴)
علامہ ابن القیم نے بھی اپنی کتاب میں امام شعبی کا قول ذکر کیا ہے،
یعنی انصار میں جب کسی کا انتقال ہوتا تو اس کی قبر پر جاتے اور قرآن پڑھتے تھے۔
அன்சாரித் தோழர்களில் யாரும் மரணித்து விட்டால்
அவர்களின் கப்ருக்கு சென்று அவர்களுக்காக குர்ஆன் ஓதி நன்மையை எத்தி வைப்பவர்களாக இருந்தார்கள்
பார்க்க:
کتاب ”الروح/۹۳
اس سلسلہ میں مختلف احادیث وآثار ذکر کرکے ملا علی قاری لکھتے ہیں
الأحادیث المذکورة وہی ان کانت ضعیفة فمجموعہا یدل علی أن لذلک اصلاً
وان المسلمین ما زالوا فی کل عصر ومصر یجتمعون ویقروٴن لموتاہم مِن غیر نکیر فکان ذلک اجماعًا
یعنی میت کے ایصال ثواب کے لیے قرأتِ قرآن کی مذکورہ احادیث اگرچہ ضعیف ہیں؛
مگر مجموعہ دلالت کرتا ہے کہ اس کی اصل موجود ہے؛
چنانچہ مسلمان ہر زمانہ اور شہر میں جمع ہوتے ہیں اور اپنی میت کے لیے قرآن پڑھتے ہیں،
پس عملاً یہ اجماع ہوگیا۔
மரணித்தவர்களுக்காக குர்ஆன் ஓதி அதன் நன்மையை எத்தி வைப்பதற்காக மேற்கோள் காட்டப்படும் ஹதீஸ் பலவீனமாக இருந்தாலும்
இவ்விஷயத்தில் நபித்தோழர்களின் செயல்பாடுகள் அதற்கான அங்கீகாரத்தை தருகிறது
ஏனெனில் எல்லாக் காலத்து மக்களும் ஒவ்வொரு ஊரிலும்
மரணித்தவர்களுக்காக குர்ஆனை ஓதி அதன் நன்மையை எத்தி வைப்பவர்களாக இருந்திருக்கிறார்கள்
என முல்லா அலீ காரி ரஹ் அவர்கள் தெரிவிக்கிறார்கள்
பார்க்க:
(مرقات، ص:۱۹۹:۴)
اور جب خیرالقرون؛ بلکہ ایک جماعت صحابہ سے اس کا ثبوت موجود ہے،
تو پھر ایصال ثواب کے لیے اجتماعی قرأتِ قرآن کو بدعت نہیں کہا جائے گا
ஆகவே மரணித்தவர்களுக்காக ஒன்றுகூடி குர்ஆனை ஓதி அதன் நன்மையை அடைய செய்வது எவ்விதத்திலும் மார்க்கத்தில் இல்லாத புது அனுஷ்டானமாக ஆகாது
حضرت مفتی سید عبدالرحیم صاحب لاجپوری مفتی اعظم گجرات تحریر فرماتے ہیں:
رسم ورواج کی پابندی اور برادری کی مروت اور دباؤ کے بغیر
اور کوئی مخصوص تاریخ اور دین معین کیے بغیر
اور دعوت کا اہتمام اور اجتماعی التزام کے بغیر
میت کے متعلقین، خیرخواہ اور عزیز واقرباء ایصال ثواب کی غرض سے جمع ہوکر قرآن خوانی کریں تو یہ جائزہے ممنوع نہیں ہے۔
எந்தவித நாட்களையும் மாதங்களையும் குறிப்பாக்காமல்
சடங்கு சம்பிரதாயம் என்ற எண்ணமில்லாமல்
எல்லோரையும் ஒன்றுகூட்டி அழைத்து விருந்து அளிக்க வேண்டும் என்ற நிர்பந்தம் இல்லாமல்
மைய்யித்தின் உறவினர்களோ நெருக்கமானவர்களோ ஒன்றுகூடி குர்ஆன் ஓதி
அதனுடைய நன்மையை எத்தி வைப்பது எவ்விதத்திலும் குற்றமாகாது
பார்க்க:
(فتاویٰ رحیمیہ۳۸۹/۱)
الأدلة على أن القراءة يصل إهداء ثوابها إلى الموتى:
استدل من قال من العلماء بوصول إهداء ثواب قراءة القرآن للموتى،
وأن ذلك ينفعهم، بأدلة منها:
ஆக குர்ஆன் ஓதுவதை கொண்டும் மரணித்தவர்களுக்கு அதனின் நன்மையை சேர்க்க முடியும் என்பதற்கு அறிஞர் பெருமக்கள் استدلال ஆக மேற்கோள் காட்டக் கூடியவைகள் பின்வருமாறு
قوله تعالى:
اَلَّذِيْنَ يَحْمِلُوْنَ الْعَرْشَ وَمَنْ حَوْلَهٗ يُسَبِّحُوْنَ بِحَمْدِ رَبِّهِمْ
وَيُؤْمِنُوْنَ بِهٖ وَيَسْتَغْفِرُوْنَ لِلَّذِيْنَ اٰمَنُوْا
رَبَّنَا وَسِعْتَ كُلَّ شَىْءٍ رَّحْمَةً وَّعِلْمًا
فَاغْفِرْ لِلَّذِيْنَ تَابُوْا وَاتَّبَعُوْا سَبِيْلَكَ وَقِهِمْ عَذَابَ الْجَحِيْمِ
எவர்கள், "அர்ஷை" சுமந்து கொண்டும், அதனைச் சூழவும் இருக்கின்றார்களோ அவர்கள்,
தங்கள் இறைவனின் புகழைக் கொண்டு அவனைத் துதி செய்தும், அவனை நம்பிக்கை கொண்டும்,
நம்பிக்கை கொண்டவர்களின் குற்றங்களை மன்னிக்கும்படி கோரியும்
"எங்கள் இறைவனே!
நீ ஞானத்தாலும் கருணையாலும் அனைவரையும்விட மிக்க விசாலமானவன்.
ஆகவே, (பாவங்களை விட்டு) விலகி உன்னுடைய வழியைப் பின்பற்றுபவர்களுக்கு நீ மன்னிப்பளித்து,
அவர்களை நரக வேதனையில் இருந்து நீ பாதுகாத்துக் கொள்வாயாக!"
என்று பிரார்த்தித்துக் கொண்டும்,
(அல்குர்ஆன் : 40:7)
رَبَّنَا وَاَدْخِلْهُمْ جَنّٰتِ عَدْنِ اۨلَّتِىْ وَعَدْتَّهُمْ
وَمَنْ صَلَحَ مِنْ اٰبَآٮِٕهِمْ وَاَزْوَاجِهِمْ وَذُرِّيّٰتِهِمْ اِنَّكَ اَنْتَ الْعَزِيْزُ الْحَكِيْمُ ۙ
"எங்கள் இறைவனே!
நீ இவர்களுக்கு வாக்களித்திருக்கும் நிலையான சுவனபதிகளில் இவர்களையும்
இவர்களுடைய மூதாதைகள்,
இவர்களுடைய மனைவிகள்,
இவர்களுடைய சந்ததிகள் ஆகிய இவர்களில் உள்ள நல்லவர்களையும் புகுத்துவாயாக!
நிச்சயமாக நீ (அனைவரையும்) மிகைத்தவனும் (அனைத்தையும் அறிந்த) ஞானமுடையவனுமாக இருக்கின்றாய்" என்றும் கூறுவார்கள்
(அல்குர்ஆன் : 40:8)
ودعاء الميت لهم؟ ليس من عمل الأموات
بل ذلك من عمل الغير وقد نفعهم.
ஆக மரணித்தவர்களுக்காக மற்றவர்கள் அமல் செய்து பிரார்த்தனை செய்கின்ற போது அது அவர்களுக்கான முழு பலனையும் அளிக்கும் என்பதை மேற்கண்ட வசனத்தின் மூலம் அறியமுடிகிறது
பார்க்க :
تبيين الحقائق شرح كنـز الدقائق 5/ 132،
فتح القدير 6/ 135
وقول الله تعالى:
وَالَّذِيْنَ جَآءُوْ مِنْ بَعْدِهِمْ يَقُوْلُوْنَ رَبَّنَا اغْفِرْ لَـنَا وَلِاِخْوَانِنَا الَّذِيْنَ سَبَقُوْنَا بِالْاِيْمَانِ
وَلَا تَجْعَلْ فِىْ قُلُوْبِنَا غِلًّا لِّلَّذِيْنَ اٰمَنُوْا رَبَّنَاۤ اِنَّكَ رَءُوْفٌ رَّحِيْمٌ
எவர்கள் இவர்களுக்குப் பின் வந்தார்களோ, அவர்கள்
"எங்கள் இறைவனே!
எங்களையும் நீ மன்னித்தருள்!
எங்களுக்கு முன் நம்பிக்கைக் கொண்ட எங்களுடைய சகோதரர்களையும் மன்னித்தருள்!
நம்பிக்கைக் கொண்டவர்களைப் பற்றி எங்களுடைய உள்ளங்களில் குரோதங்களை உண்டு பண்ணாதே!
எங்கள் இறைவனே! நிச்சயமாக நீ மிகக் கிருபையுடையவனும், இரக்க முடையவனுமாக இருக்கின்றாய்!"
என்று பிரார்த்தனை செய்து கொண்டே இருக்கின்றனர்.
(அல்குர்ஆன் : 59:10)
ودلالته على المراد كسابقه
மேற்கண்ட வசனத்தை போன்று இந்த வசனமும் மரணித்தவர்களுக்காக மற்றவர்கள் புரியும் பிரார்த்தனை இலாபம் அளிக்கும் என்பதை வலுப்படுத்துகிறது
பார்க்க:
الشرح الكبير لابن قدامة 2/ 425،
المغني5/ 79.
وقال سبحانه:
فَاعْلَمْ اَنَّهٗ لَاۤ اِلٰهَ اِلَّا اللّٰهُ
وَاسْتَغْفِرْ لِذَنْبِكَ وَلِلْمُؤْمِنِيْنَ وَ الْمُؤْمِنٰتِ وَاللّٰهُ يَعْلَمُ مُتَقَلَّبَكُمْ وَمَثْوٰٮكُمْ
(நபியே!) நிச்சயமாக அல்லாஹ்வைத் தவிர வணக்கத் திற்குரிய வேறொரு இறைவன் இல்லை என்பதை நீங்கள் உறுதியாக அறிந்து கொண்டு,
நீங்கள் உங்களுடைய தவறுகளை மன்னிக்கக் கோருவதுடன், நம்பிக்கை கொண்ட ஆண்களுக்கும், பெண்க ளுக்கும் மன்னிப்பு கோருங்கள்!
(நம்பிக்கையாளர்களே!)
உங்களுடைய நடமாட்டத்தையும் நீங்கள் தங்கும் இடங்களையும் அல்லாஹ் நன்கறிவான்.
(அல்குர்ஆன் : 47:19)
فقد أمر الله نبيه أن يستغفر للمؤمنين،
فدل ذلك أن الاستغفار يصل إليهم وينفعهم.
முஸ்லிம்களுக்காக நபியவர்கள் استغفار செய்யும்படி அல்லாஹ் ஏவுகிறான்
அவ்வாறான استغفار ன் பலன் மரணித்தவர்களுக்கும் போய் சேருகிறது என்பதை மேற்கண்ட வசனத்தின் மூலம் அறிய முடிகிறது
قال في تبيين الحقائق:
"وروي عن أبي هريرة قال:
يموت الرجل، ويدع ولداً، فيرفع له درجة،
فيقول: ما هذا يا رب؟!
فيقول سبحانه وتعالى:
"استغفار ولدك".
ولهذا قال تعالى: ﴿وَاسْتَغْفِرْ لِذَنبِكَ وَلِلْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ﴾ [محمد: 19]،
وما أمر الله به من الدعاء للمؤمنين والاستغفار لهم"
ஒரு மனிதர் ஸாலிஹான பிள்ளையை விட்டுச் செல்கிறார்
அந்த பிள்ளையின் மூலமாக அல்லாஹ் அவரின் தரத்தை உயர்த்துகிறான்
இறைவனிடத்தில் இறைவா இது எதன் மூலம் எனக்கு கிடைத்தது என வினவுகிறார்
அப்பொழுது அல்லாஹ் கூறுகிறான்
உமது பிள்ளையின் இஸ்திஃபாரினுடைய பலன் தான் என்று
பார்க்க:
تبيين الحقائق شرح كنـز الدقائق 5/ 132.
واستدلوا أيضاً بقوله تعالى:
وَالَّذِيْنَ اٰمَنُوْا وَاتَّبَعَتْهُمْ ذُرِّيَّتُهُمْ بِاِيْمَانٍ اَلْحَـقْنَا بِهِمْ ذُرِّيَّتَهُمْ
وَمَاۤ اَلَـتْنٰهُمْ مِّنْ عَمَلِهِمْ مِّنْ شَىْءٍ كُلُّ امْرِیءٍ بِمَا كَسَبَ رَهِيْنٌ
எந்த நம்பிக்கையாளர்களின் சந்ததிகள், தங்கள் பெற்றோர்களைப் பின்பற்றி நம்பிக்கை கொள்கின்றார்களோ
(அந்தச் சந்ததிகளின் நன்மைகள் குறைவாக இருந்தும் அவர்களின் பெற்றோர்கள் திருப்தியடையும் பொருட்டு)
அவர்களுடைய சந்ததிகளையும் அவர்களுடன் (சுவனபதியில்) சேர்த்துவிடுவோம்.
இதனால் அவர்களுடைய பெற்றோர்களின் நன்மைகளில் ஒன்றையுமே நாம் குறைத்துவிட மாட்டோம்.
ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய செயலுக்குப் பிணையாக இருக்கின்றான்.
(அல்குர்ஆன் : 52:21)
فقد دلت الآية على أن الله سبحانه يُلحق الأبناء المؤمنين بآبائهم المؤمنين،
وهذا دليل على أن الإنسان قد ينتفع بسعي غيره.
மேற்கண்ட வசனத்தின் வாயிலாக முஃமினான தந்தையர்களின் நன்மைகளின் மூலம்
அவர்களின் பிள்ளைகளுக்கும் அதன் பலன் போய் சேருகிறது என்பதை விளங்க முடிகிறது
ஆக ஒருவரின் முயற்சியால் மற்றவர்களும் பலன் அடைய முடிகிறது
பார்க்க:
أضواء البيان 8/ 53
واستدلوا أيضاً بحديث «من مر بالمقابر، فقرأ إحدى عشرة مرة ﴿قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ﴾
[الإخلاص: 1]،
ثم وهب أجره الأموات، أعطى من الأجر بعدد الأموات»
மையவாடிக்கு சென்று ஒருவர் 11 விடுத்தம் குல் ஹுவல்லாஹு சூராவை ஓதி அதன் நன்மையை மரணித்தவர்களுக்கு எத்தி வைத்தால் அதனுடைய நன்மையும் அவர்களுக்கு கொடுக்கப்படுகிறது
பார்க்க:
كشف الخفاء 2/ 282،
وبحديث معقل بن يسار رضي الله عنه أنه قال:
قال رسول الله -صلى الله عليه وسلم-:
«اقرءوا يس على موتاكم»
உங்களின் மரணித்தவர்களுக்காக யாசீன் சூராவை ஓதி அதன் நன்மையை அடைய செய்யுங்கள்
பார்க்க :
سنن أبي داود 8/ 385، برقم: 2714،
سنن ابن ماجة 4/ 380، برقم: 1438
فقد أمر -صلى الله عليه وسلم- بقراءة سورة يس -وهي من القرآن- على الموتى،
وهذا دليل على أن القراءة تنفعهم،
وإلا لما كان في الأمر لهم بقراءة يس فائدة.
மேற்கண்ட ஹதீஸ் குர்ஆன் ஓதுவதால் அதன் நன்மை மரணித்தவர்களுக்கு போய் சேருகிறது என்பதை பட்டவர்த்தனமாக நிரூபிக்கிறது
وعن عائشة وأبي هريرة -رضي الله عنهما-
أن رسول الله -صلى الله عليه وسلم- ضحى بكبشين سمينين عظيمين أملحين أقرنين موجوئين،
فذبح أحدهما، فقال:
«اللهم عن محمد وأمته، من شهد لك بالتوحيد، وشهد لي بالبلاغ»
நபியவர்கள் கொழுத்த , பெரிய , கொம்புள்ள இரண்டு ஆட்டை குர்பானி கொடுத்த போது
அதில் ஒன்றை அறுக்கும் போது இவ்வாறு பிரார்த்தனை செய்தார்கள்
இறைவா இதனை முஹம்மதின் சார்பாகவும்
ஏகத்துவத்தை ஏற்று அதனை எத்தி வைக்கக்கூடிய முஹம்மதின் உம்மத்தினரின் சார்பாகவும் ஏற்றுக் கொள்வாயாக
பார்க்க:
المستدرك على الصحيحين للحاكم 17/ 406، برقم: 7654،
شعب الإيمان للبيهقي 3/ 485، برقم: 1429.
سنن النسائي 9/ 490، برقم: 4418.
أي جعل ثوابه لأمته، وهذا تعليم منه عليه الصلاة والسلام أن الإنسان ينفعه عمل غيره، والاقتداء به هو الاستمساك بالعروة الوثقى.
ஆக நபியவர்கள் குர்பானி கொடுத்து அதன் நன்மையை தனது உம்மத்தினர்களுக்கு எத்தி வைத்தார்கள் என்ற செய்தியின் மூலமாக
மற்றவர்களின் மூலம் மரணித்தவர்களுக்கும் நன்மையை பெற்று தரமுடியும் என்பது புலப்படுகிறது
பார்க்க:
تبيين الحقائق شرح كنـز الدقائق 5/ 132
واستدلوا أيضاً بحديث أبي موسى الأشعري -رضي الله عنه- قال:
لما أصيب عمر -رضي الله عنه- جعل صهيب يقول: وا أخاه!
فقال عمر -رضي الله عنه- أما علمت أن النبي -صلى الله عليه وسلم- قال:
«إن الميت ليعذب ببكاء الحي»
நிச்சயமாக மரணித்தவர்களுக்காக உயிருள்ளவர்கள் ஒப்பாரி வைத்து அழுவதின் மூலம் மரணித்தவருக்கு வேதனை செய்யப்படும் என நபியவர்கள் கூறினார்கள்
பார்க்க:
صحيح البخاري 5/ 35، برقم: 1208،
صحيح مسلم 4/ 496، برقم: 1539
فإذا كان البكاء يضره
فالقراءة تنفعه، والله أكرم من أن يوصل عقوبة المعصية إليه، ويحجب عنه المثوبة.
உயிருள்ளவரின் ஒப்பாரி மரணித்தவருக்கு நோவினை தரும் என்றால்
உயிர் உள்ளவர்களால் ஓதப்படும் குர்ஆனின் நன்மை ஏன் அவர்களுக்கு போய் சேராது ?
மரணித்தவர்களுக்கு
பாவத்தின் பிரதிபலனை கொண்டுபோய் சேர்ப்பதை விட
நன்மையின் பலாபலனை கொண்டு போய் சேர்ப்பதில் அல்லாஹ் தயாள குணமுள்ளவன் அல்லவா !!!
واستدلوا أيضاً بإجماع المسلمين على جواز ذلك؛
فإنهم في كل عصر ومصر يجتمعون، ويقرأون القرآن، ويهدون ثوابه إلى موتاهم من غير نكير
ஆக எல்லா ஊரிலும் எல்லா காலத்திலும் முஸ்லிம்கள் ஒன்றுகூடி மரணித்தவர்களுக்காக குர்ஆன் ஓதி ஈஸால் தவாப் செய்கிறார்கள்
இதில் எவ்வித தடங்களும் பிரச்சனையும் இல்லை என்றே நம்புகிறோம்
பார்க்க:
الشرح الكبير لابن قدامة 2/ 426
والله اعلم بالصواب
பதிவு :
فاسألوا اهل الذكر வாட்ஸ் அப் தளம்
20-09-2020
02-02-1442 ஞாயிறு
عبد الرحیم انواری 2008
عفا اللہ عنہ
Comments
Post a Comment