தவுல் அர்ஹாம் என்றால் யாருக்கு சொல்லப்படும்? இன்னும் அவர்கள் சொத்தில் பங்கு பெறுவதற்கான வழிமுறைகள் என்ன?
கேள்வி :
தவுல் அர்ஹாம் என்றால் யாருக்கு சொல்லப்படும்? மேலும் அவர்கள் சொத்தில் பங்கு பெறுவதற்கான வழிகள் என்ன?
الجواب بعون الله الملك الوهاب
ذوی الارحام کا بیان:
لغت میں ذو رحم کے معنی رشتہ دار اور قرابت والے کے آتے ہیں
مگر اصطلاح شریعت میں ذو رحم اس شخص کو کہتے ہیں جو قرابت دار ہو
مگر صاحب فرض اور عصبہ نہ ہو یعنی وہ رشتہ دار جس کا حصہ نہ تو کتاب اللہ میں مقرر ہو اور نہ سنت میں اور نہ اجما ع امت سے اس کا ثبوت ہو اور نہ وہ عصبہ ہو۔
ایسے شخص کو ذو رحم کہتے ہیں اس کی جمع ذوی الارحام ہے۔
اللہ تعالیٰ قرآن مجید میں فرماتا ہے:
”قرابت داروں میں بعض اولیٰ بمیراث ہیں بعض سے اللہ کی کتاب میں۔“
(الانفال)
مگر ذو رحم صاحب فرض اور عصبہ کے ہوتے ہوئے وارث نہیں ہوگا۔
ہاں شوہر اورزوجہ کے ہوتے ہوئے وارث ہوگا۔
پس اگر ذوی الارحام اکیلا ہو تو قرابت کی وجہ سے وہ تمام مال کا مال ہوگا۔
ذوی الارحام کی توریث عصبات کے مانند ہے۔
اس میں اقرب فالاقرب کا اعتبار ہے اور قرب کبھی تو درجہ کے اعتبار سے ہوتا ہے
اور کبھی قرابت کی وجہ سے،
پس جس طرح تعصیب میں بیٹا باپ پر مقدم ہے اسی طرح ذوی الارحام میں میث کا جز مقدم ہوگا اس کی اصل پر اور ذوی الارحام میں سے جو قریب تر ہو وہ بعید تر کا حاجب ہو جاتا ہے،
یعنی بعید کو وارث نہیں ہونے دیتا جیسا کہ عصبات میں اقبر ابعد کا حاجب ہو جاتا ہے۔
اسی طرح نزدیک رشتہ والا دور کے رشتہ دار کو وارث نہیں ہونے دیتا۔
ذوی الارحام کی چار قسمیں ہیں:
(۱) جز میت یعنی میت کی دختری اولاد جیسے نواسے اور نواسی۔
(۲) اصل میت یعنی نانا اور نانی۔
(۳) میت کے والدین کا جز یعنی بھانجا ، بھانجی۔
(۴) جزء جدین یا جدتین
یعنی دادا اورنانا۔ یادادی اورنانی کی اولاد۔
یہ چارقسمیں ذوی الارحام کی ہیں
مگر یہ اپنے سے بعید ترکے حاجب ہو جاتے ہیں پس میت کا جزءمقدم ہوگا۔
میراث میں اور جزءمیت سے مراد بیٹوں کی اولاد اور پوتو ں کی اولاد ہے خواہ ہو یا عورت۔
پھر اولاد میت کے بعد اصل مقدم ہوگی اور اصل سے غرض میت کا جد فاسد اور جدہ فاسد ہے،
اس کے بعد والدین میت کاجز ءمقدم ہوگا
یعنی حقیقی بہنوں یا سوتیلی بہنوں کی اولاد اور حقیقی بھائیوں کی اولاد خواہ مرد ہوں یا عورت ہوں،
پھر نواسہ اور نواسی نانا پر مقدم ہے۔ بھانجے اور بھانجیوں اور بھتیجوں پر، اسی قول پر فتویٰ ہے۔
தவுல் அர்ஹாம்
தூரத்து உறவினர்கள்
தூரத்து உறவினர்கள் என்றால் உண்மையில் அவர்கள் இறந்தவர்களுடைய தூரத்து உறவினர்கள் அல்லர்,
மாறாக பங்குதாரர்களாக பங்கு பெறாது தூரத்தில் நிற்பதால் தூரத்து உறவினர்கள் என்று கூறப்படுகிறது
தவுல் அர்ஹாம் என்பது குர்ஆனில் நிர்ணயிக்கப்பட்டுள்ள (அஸ்ஹாபே ஃபராயிள்) குறிப்பிட்ட பாகத்தையோ ,
(அஸபா ) என்ற முறையில் மீதியுள்ள பாகத்தையோ பெறாத உறவினர்களை குறிக்கும்
இவர்கள் பெண் வழி உறவினர்களாவர்,
தாயின் சகோதரன்,
தாயின் சகோதரி,
தாய்வழி பாட்டனார்,
மகளின் பிள்ளைகள்,
சகோதரியின் பிள்ளைகள்,
சகோதரனின் மகள்,
தந்தையுடைய சகோதரரின் மகள்,
தந்தையின் சகோதரி, தாயின் தந்தையினுடைய சகோதரர் ,
தாய்வழி சகோதரனின் மகன் ஆகிய பத்து வகை உறவினர்கள் தவுல் அர்ஹாம் என்னும் இரத்த பந்துகளில் அடங்குவர்
இவர்களுக்கு சொத்தில் பங்கு உண்டா இல்லையா என்பதில் அறிஞர்களுக்கிடையே கருத்து வேறுபாடுகள் உண்டு
குர்ஆனில் கூறப்பட்டுள்ள பாகங்களை பெரும் உறவினர்களோ اصحاب الفرائض மற்றும் மீதியை அடையும் عصبة தந்தை வழி உறவினர்களோ இல்லாத போது இவர்களுக்கு சொத்துரிமை உண்டு என்பது சில அறிஞர்களின் வாதமாகும் ,
பங்குதாரர்களில் கணவனோ மனைவியோ மட்டும் இருந்து மற்ற ஒன்பது ஆண் வாரிசுகளும் ஏழு பெண் வாரிசுகளும் இல்லாது போனால் இவர்கள் பங்கு பெறுவார்கள்
கணவன் மனைவியை தவிர மேற்கண்ட வாரிசுகள் இருந்தால் இந்த ذوي الارحام பிரிவினரை சொத்து பெறாமல் தள்ளி விடுவர்
وَالَّذِيْنَ اٰمَنُوْا مِنْ بَعْدُ وَهَاجَرُوْا وَجَاهَدُوْا مَعَكُمْ
فَاُولٰۤٮِٕكَ مِنْكُمْ وَاُولُوا الْاَرْحَامِ بَعْضُهُمْ اَوْلٰى بِبَعْضٍ فِىْ كِتٰبِ اللّٰهِ اِنَّ اللّٰهَ بِكُلِّ شَىْءٍ عَلِيْمٌ
(இதன் பின்னரும் மக்காவாசிகளில்) எவர்கள் நம்பிக்கை கொண்டு (தங்கள்) ஊரை விட்டுப் புறப்பட்டு உங்களுடன் சேர்ந்து (எதிரியை எதிர்த்து) போர்புரிகின்றார்களோ அவர்களும் உங்களைச் சேர்ந்தவர்களே!
இனி அல்லாஹ்வுடைய வேதக் கட்டளைப்படி உங்கள் உறவினர்களில் உள்ளவர்களே,
ஒருவர் மற்றவருக்கு பொறுப்பு வகிப்பார்கள்.
நிச்சயமாக அல்லாஹ் அனைத்தையும் நன்கறிந்தவனாக இருக்கின்றான்.
(அல்குர்ஆன் : 8:75)
اَلنَّبِىُّ اَوْلٰى بِالْمُؤْمِنِيْنَ مِنْ اَنْفُسِهِمْ وَاَزْوَاجُهٗۤ اُمَّهٰتُهُمْ
وَاُولُوا الْاَرْحَامِ بَعْضُهُمْ اَوْلٰى بِبَعْضٍ فِىْ كِتٰبِ اللّٰهِ مِنَ الْمُؤْمِنِيْنَ وَالْمُهٰجِرِيْنَ اِلَّاۤ اَنْ تَفْعَلُوْۤا اِلٰٓى اَوْلِيٰٓٮِٕكُمْ مَّعْرُوْفًا كَانَ ذٰ لِكَ فِى الْكِتٰبِ مَسْطُوْرًا
நம்பிக்கையாளர்களுக்கு அவர்களுடைய உயிர்களைவிட (நமது தூதரான) நபிதான் மிக்க பிரதானமானவர்.
அவருடைய மனைவிகளோ அந்நம்பிக்கையாளர்களுக்குத் தாய்மார்கள் ஆவார்கள்.
(நம்பிக்கை கொண்ட ஒருவருடைய சொத்தை அடைய) மற்ற நம்பிக்கையாளர்களை விடவும், ஹிஜ்ரத்துச் செய்தவர்களை விடவும், (நம்பிக்கையாளர்களான) அவருடைய சொந்த உறவினர்கள்தாம் அல்லாஹ்வுடைய இவ்வேதத்திலுள்ளபடி உரிமையுடையவர்களாக ஆவார்கள்.
(ஆகவே, அவர்களுக்கே அவர்களுடைய பங்கிற்கேற்ப பொருளைப் பங்கிட்டுக் கொடுக்க வேண்டும்.)
எனினும், உங்கள் சிநேகிதர்களில் எவருக்கும் நீங்கள் (ஏதும் கொடுத்து) நன்றி செய்யக் கருதினால் (நீங்கள் ஏதும் கொடுக்கலாம்.) இவ்வாறே வேதத்தில் எழுதப்பட்டுள்ளது.
(அல்குர்ஆன் : 33:6)
மேற்கண்ட வசனங்களையும் சில நபிமொழிகளையும் ஆதாரமாக காட்டி இவர்களுக்கும் சொத்துரிமை உண்டு என சில அறிஞர்கள் வாதிடுகிறார்கள்,
தவுல் அர்ஹாம் என்னும் இரத்தப்பந்துகளான தூரத்து உறவினர்களை நான்கு வகையாக பிரிக்கலாம்
முதல் வகையினர் வழித்தோன்றல்கள்:
அதாவது மகளின் குழந்தைகளும் அவர்களின் வழித்தோன்றல்களும்
மேலும் மகனின் மகளின் குழந்தைகளும் அவர்களின் வழித்தோன்றல்களும்
இரண்டாவது வகையினர் மூதாதையர்கள்:
அதாவது பாகம் பெறாத அஸபாவுமில்லாத தாயின் தந்தை, தந்தை வழி மூதாதையர்களில் ஜத்த ஃபாஸித், ஜத்தத ஃபாஸிதா வாகும்
மூன்றாவது வகையினர் கிளை வழியினர்கள்:
அதாவது மரணமானவரின் சகோதரனின் மகள், அவளின் சந்ததிகள்,
மற்றும் சகோதரிகளின் மக்கள் ,அவர்களின் சந்ததிகள்
அதுபோன்று தந்தைவழி or தாய்வழி சகோதரனின் or சகோதரியின் குழந்தைகள்..
நாலாவது வகையினர் தந்தையின் கிளை வழியினர்கள்:
அதாவது மரணமானவரின் தாய் ,தந்தை வழிப் பாட்டனாரின் சந்ததியும் ,தாய் தந்தை வழி பாட்டியின் சந்ததிகளிலும் உள்ள பாகம் பெறாதவர்களும் அஸபாவுமில்லாதவர்களும்
உதாரணமாக மாமா, மாமி ,தாயின் சகோதர சகோதரிகள் அவர்களின் சந்ததிகள்
இவர்களில் முந்திய வகுப்பினர் பிந்திய வகுப்பினரை சொத்து பெறாமல் தள்ளி விடுவர்
அதாவது முதல் வகுப்பினர் இருக்கும் போது இரண்டாவது வகுப்பினருக்கோ,
இரண்டாவது வகுப்பினர் இருக்கும்போது மூன்றாவது வகுப்பினருக்கோ,
மூன்றாவது வகுப்பினர் இருக்கும்போது நான்காவது வகுப்பினருக்கோ பாகம் கிடைக்காது..
பார்க்க :
(الفتاوی الھندیۃ،کتاب الفرائض،الباب العاشر فی ذوی الارحام)
(فتاویٰ عالمگیری ج 6 ص 448↑)
(الدرالمختار،کتاب الفرائض، فصل فی العصبات، ج 10، ص 551)
(بہار شریعت جلد20 صفحہ 1115 امجد علی اعظمی بریلوی)
(طحاوی)
والله اعلم بالصواب
பதிவு :
فاسألوا اهل الذكر வாட்ஸ் அப் தளம்
عبد الرحیم انواری 2008
عفا اللہ عنہ
Comments
Post a Comment