பங்குச்சந்தையின் சட்டம் என்ன?

கேள்வி :

பங்கு சந்தையின் சட்டமென்ன?


الجواب بعون الله الملك الوهاب 👇

سوال یہ ہے کہ اگر شئیر مارکٹ میں پیسہ لگایا جائے تو اس کے لئے کیا شرائط ہیں؟

کیا شیئر مارکیٹ میں پیسے لگانا حلال ہے؟ 

اگر ہے تو کون سے کون طریقے سے حلال ہے ؟


ஷேர் மார்க்கெட்டில் பங்குதாரராக சேர்வதற்கென்று என்னென்ன நிபந்தனைகள் உள்ளன ?

எந்த முறைப்படி இருந்தால் பங்கு சந்தையில் பங்குதாரராக சேர்வது அனுமதிக்கப்படும்?


کسی کمپنی کے شیئرز میں پیسہ لگانا چند شرائط کے ساتھ جائز ہے۔


பொத்தாம் பொதுவாக பங்கு சந்தையில் பங்கு சேர்வது ஹராம் என்றும் 
ஒரேடியாக ஹலால் என்றும் கூறிவிட முடியாது


மாறாக பங்கு சந்தையில் வலம் வரும் நிறுவனங்களில் தமது பங்கை சேர்த்து இலாபம் அடைவதற்கு முக்கியமான சில நிபந்தனைகள் கவனிக்கப்படும் 

அந்த ஷரத்துகள் பெற்றுக்கொள்ளப்பட்டால் ஷேர் மார்க்கெட்டில் தமது பங்களிப்பை ஆற்றலாம்



(۱) وہ کمپنی جس میں پیسہ لگانا ہے کسی حرام کاروبار میں ملوث نہ ہو۔


*முதலாம் நிபந்தனை*


எந்த நிறுவனத்தில் தனது பங்கை சேர்க்கப்படுகிறதோ அந்த நிறுவனம் மார்க்கம் தடை செய்த எந்தவித ஹராமான தொழில் துறை களிலும் ஈடுபடக்கூடாது 

ஈடுபடாது ஈடுபடவில்லை என்பதற்கான உறுதிமொழி தரப்பட வேண்டும்



(۲) اس کمپنی کے تمام اثاثے اور املاک نقد رقم کی شکل میں نہ ہوں، 

بلکہ اس کمپنی کے کچھ منجمد اثاثے بھی ہوں مثلاً بلڈنگ ، زمین یا مشنری وغیرہ کمپنی کے پاس موجود ہو، 

ورنہ اگر اس کمپنی کا پورا سرمایہ نقد رقم کی شکل میں ہوگا تو کمپنی کے شیئرز کو فیس ویلو سے کم یا زیادہ میں فروخت کرنا جائز نہیں ہے، 

بلکہ برابر سرابر فروخت کرنا ضروری ہے۔


*இரண்டாம் நிபந்தனை*

அந்த நிறுவனத்தின் ஒட்டுமொத்த முதலீடும் பணப்பரிவர்த்தனையில் இருக்கக்கூடாது 

அதாவது அந்த நிறுவனத்திற்கு எந்தவித இடத்தையும் பிராப்பர்டியையும் ஏற்படுத்தாமல் 

கம்பெனிக்கென்று பெயரை மட்டும் வைத்துக்கொண்டு பணத்திற்கு பணமாக வர்த்தகம் செய்தல் கூடாது 

பணத்துக்கு பணம் கைமாற்றம் செய்யும்போது அதில் கூடுதல் குறைதல் என்பது கூடாத காரியமாகும்


(۳) کاروبار کے درمیان کمپنی نے جو کچھ سودی لین دین کیا ہو 

اس سے اپنی براء ت کا اظہار کرے خواہ اس کی سالانہ میٹنگ میں یا کسی اور طرح۔


*மூன்றாம் நிபந்தனை*


பங்குதாரராக சேர்ந்த பின்னர் அந்த நிறுவனம் இஸ்லாம் தடுத்த ஏதேனும் வழிகளில் முதலீடு செய்தால் 

உதாரணமாக பொய் பிரச்சாரங்களை கொண்டு கம்பெனிக்கு விளம்பரம் செய்வது, பாவிகளை கொண்டு கம்பெனிக்கு விளம்பரம் தேடுவது, மக்களை ஏமாறச் செய்து அந்த கம்பெனிக்கு விளம்பரத்தை உருவாக்குவது போன்ற காரியங்கள் நடந்தேறினால் 

அந்த நிறுவனத்திலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ள வேண்டும் 

அதேசமயம் அந்த நிறுவனம் ஹலாலான வழிகளில் வணிகம் செய்து நிறுவனத்தின் வருவாய்க்காக வட்டி வழிகளில் கொடுக்கல் வாங்கல் செய்தால் 

அப்போது மார்க்கம் தடை செய்த அந்த வட்டியிலிருந்து நான் விலகிக் கொள்கிறேன் என்ற பகிரங்க அறிவிப்பை அந்த நிறுவனத்திற்கு ஏதேனும் வழிகளில் தெரியப்படுத்தி விட வேண்டும் 

தெரிய படுத்துவதற்கான வழிகளும் இருக்க வேண்டும்



(۴) نفع کا جتنا حصہ سودی کاروبار سے حاصل ہوا ہے 

اس کو بلانیت ثواب فقراء پر صدقہ کرنا ضروری ہے۔


*நான்காம் நிபந்தனை* 

தமக்கு கிடைக்கும் இலாபம் எந்த வழிகளில் வந்தது என்ற செய்தியை அறிந்திருக்க வேண்டும் 

எனவே தமக்கு கிடைத்த இலாபத்தில் வட்டி வழிகளில் எவ்வளவு கிடைத்ததோ அதனை நன்மையை நாடாமல் ஏழைகளுக்கு உடனே தர்மம் செய்துவிட வேண்டும்


(۵) کمپنی کے شیئرز خریدنے کا مقصد کمپنی میں حصہ داری کرکے نفع حاصل کرنا ہو، 

سٹہ بازی کے طور پر صبح خرید کر شام کو فروخت کر دینا جس میں شیئرز پر قبضہ نہیں ہوتا درست نہیں ہے۔ 

یہ تو کسی کمپنی میں حصہ داری کے طور پر شیئر ز خریدنے کا حکم ہے، 


*ஐந்தாம் நிபந்தனை* 

ஷேர் மார்க்கெட்டில் பங்கு சேர்வதில்
வணிகத்தில் ஈடுபட்டு இலாபம் அடைய வேண்டும் என்ற நோக்கம் தான் இருக்க வேண்டும் 

ஆயினும் அதில் ஏற்படும் எதிர்பாராத நஷ்டத்தையும் பொருந்திக் கொள்ள வேண்டும் 

இலாபம் நஷ்டம் இரண்டையும் பொருந்திக் கொண்டே ஒப்பந்தம்  கையெழுத்தாக வேண்டும்


மற்றபடி சூதாட்டத்தை போல் காலையில் பங்குகளை வாங்கி உடனே மாலையில் கூடுதலாக விற்பனை செய்வது கூடாது

வியாபார பொருட்களை கைப்பற்றுவதற்கு முன்னரே அதனை மறு வியாபாரம் செய்வது மார்க்கத்தில் தடை செய்யப்பட்ட காரியமாகும்


باقی شیئرز مارکیٹ میں پیسہ لگانے کی مختلف شکلیں ہیں، 


اور شیئرز کے موضوع پر مفتی تقی عثمانی مدظلہ العالی کا ایک تفصیلی مقالہ موجود ہے۔



இது அல்லாது ஷேர் மார்க்கெட்டில் பங்கு சேர்வதில் பலதரப்பட்ட முறைகள் உண்டு 

ஷேர் மார்க்கெட் சம்பந்தமாக முழுமையான விளக்கம் மற்றும் சட்டங்களை அறிந்து கொள்ள மௌலானா தகீ உஸ்மானீ தாமத் பரக்காத்துஹூம் அவர்கள் எழுதிய ஃபிக்ஹீ மகாலாத்தை பார்வையிடவும்


பார்க்க 👇

”فقہی مقالات“ جلد نمبر (۱)، صفحہ: ۱۴۱۰ / 



தரவு செய்க 👇


ماخذ :دار الافتاء دار العلوم دیوبند

فتوی نمبر :33500

تاریخ اجراء :Jul 20, 2011



والله اعلم بالصواب


பதிவு 👇
فاسألوا اهل الذكر வாட்ஸ் அப் தளம்


عبد الرحیم انواري 
عفا اللہ عنہ 


Comments

Popular posts from this blog

ஸஜ்தா திலாவத் என்றால் என்ன?

தல்கீன் என்றால் என்ன ?

ரிஜ்க் எவ்வாறு கிடைக்கும்?