ஒரே இமாம், ஒரே நாளில் பல தடவைகள் ஜும்ஆ மற்றும் பெருநாள் போன்ற தொழுகைகளை தொழ வைக்கலாமா?

கேள்வி :

ஒரே இமாம் ஒரே நாளில் பல தடவைகள் ஜும்ஆ மற்றும் பெருநாள் போன்ற தொழுகைகளை தொழ வைக்கலாமா?


الجواب بعون الله الملك الوهاب 


பொதுவாக இவ்விவகாரத்தை மூன்று கோணங்களில் அணுகலாம் 


تجوزُ صلاةُ مَن يُصلِّي فرضًا خلفَ مَن يُصلِّي فرضًا آخرَ، 

كمأمومٍ يُصلِّي الظهرَ خلفَ إمامٍ يُصلِّي العصرَ، 

وهو مذهبُ الشافعيَّة  ، وروايةٌ عن أحمدَ  ، 

وهو مذهب الظاهرية  ، وبه قالتْ طائفةٌ من السَّلفِ   ، 

واختاره ابنُ المنذرِ   ، وابنُ تيميَّة   ، والصنعانيُّ  ، وابنُ باز  ، وابنُ عُثَيمين


முதலாவது :


ஒரு ஃபர்ளை இன்னொரு ஃபர்ள் தொழுபவருக்கு பின்னால் நின்றுகொண்டு தொழுவது 

உதாரணமாக அஸர் தொழுகை தொழ வைப்பவருக்குப் பின்னால் நின்றுகொண்டு 
லுஹர் தொழுகையை தொழுவது

இது ஷாஃபிஈ போன்ற மத்ஹப் ஆய்வின்படி கூடிக்கொள்ளும் 

ஹனஃபி மத்ஹபின் ஆய்வின்படி செல்லாது


பார்க்க :


(المجموع)) للنووي (4/271)، 

((مغني المحتاج)) للشربيني (1/253).

((الإنصاف)) (2/195)

المحلى)) (3/140)

((الإشراف)) (2/148).

((مجموع الفتاوى)) (23/386)

((سبل السلام)) (1/364).



இரண்டாவது :


இரண்டாம் தர நிலையில் உள்ள தொழுகையை 

முதலாம் தர நிலையில் உள்ள தொழுகையை தொழுபவருக்கு பின்னால் நின்றுகொண்டு தொழுவது


صلاةُ المتنفِّلِ خلفَ المفترضِ صحيحةٌ، 


உதாரணமாக ஃபர்ள் தொழுபவருக்கு பின்னால் நின்றுகொண்டு சுன்னத் தொழுவது

அவ்வாறு தொழுவது கூடுமானதே

அதில் எவ்வித கருத்து பிரச்சனையும் இல்லை


وهذا باتِّفاق المذاهبِ الفقهيَّة الأربعة: الحَنَفيَّة   والمالِكيَّة، والشافعيَّة  ، والحَنابِلَة ، 

وهو مذهبُ الظاهريَّة وحُكِيَ الإجماعُ على ذلِك


இதுவே நான்கு இமாம்கள் உட்பட அனைத்து அறிஞர் பெருமக்களின் நிலைப்பாடாகும்


பார்க்க :


((الهداية)) للمرغيناني (1/59)، 

((تبيين الحقائق)) للزيلعي، مع ((حاشية الشلبي)) (1/141)

((مواهب الجليل)) للحطاب (2/463)،  

((شرح مختصر خليل)) للخرشي (2/40)

((المجموع)) للنووي (4/271)، 

((مغني المحتاج)) للشربيني (1/253)

(الإنصاف)) للمرداوي (2/195) 

((كشاف القناع)) للبهوتي (1/484

(المحلى)) لابن حزم (3/140 )


قال ابنُ عبد البَرِّ: 

(صلاة المتنفل خلف من يصلي الفريضة جائزة بإجماع العلماء) 


ஃபர்ளு தொழுகைக்குப் பின்னால் நின்றுகொண்டு நஃபில் தொழுகை தொழுவது ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கூற்றாகும்


பார்க்க :


(الاستذكار)) (2/170). 


وقال ابن العربي: 

«أنه يَقطع به اتفاقُ الأمَّة على جواز صلاة المتنفِّل خلف المفترض» 


ஃபர்ளு தொழுபவருக்கு பின்னால் நின்றுகொண்டு 

நஃபில் தொழுவது கூடுமானதே என்பதில் 
அனைத்து இமாம்களும் ஒன்றுபட்டு விட்டார்கள்


பார்க்க :


((أحكام القرآن)) (4/223).



இதற்கான ஆதாரங்கள் :


عن أبي سعيدٍ رَضِيَ اللهُ عنه، 
أنَّ النبيَّ صلَّى اللهُ عليه وسلَّم رأى رجلًا يُصلِّي وَحْدَه 

فقال: ((ألا رجلٌ يَتصدَّق على هذا، فيُصلِّي معه


தனியாக ஃபர்ளு தொழுகையை தொழுத மனிதரை கண்ட நபியவர்கள்

இவருக்கு யாராவது கூட்டு சேர்ந்து உபரி நிய்யத்தில் தொழுது கொள்பவர் தொழுது கொள்ளலாம் என்றார்கள்


பார்க்க :


رواه أبو داود (574)، 

أحمد (3/45) (11426)، 

والدارمي (1/367) (1369). 

صححه النووي في ((المجموع)) (4/221)، 

وابن حجر في ((فتح الباري)) (2/166)، 

وجود إسناده 

وقواه ابن كثير في ((إرشاد الفقيه)) (1/166)، 

وابن باز في ((مجموع الفتاوى)) (12/170)، 

والألباني في ((صحيح سنن أبي داود)) (574)، 

والوادعي في ((الصحيح المسند)) (406)


عن أبي ذرٍّ، قال: 

قال لي رسولُ اللهِ: ((كيف أنتَ إذا كانتْ عليك أمراءُ يُؤخِّرون الصلاةَ عن وقتِها؟ أو يُميتون الصلاةَ عن وقتِها؟ 

قال: قلتُ: فما تأمُرني؟ 

قال: صلِّ الصلاةَ لوقتِها، فإنْ أدركْتَها معهم، فصلِّ؛ 

فإنَّها لك نافلةٌ


நபியவர்கள் அபூதர் ரலி அவர்களிடத்தில்
தொழுகையை பிற்படுத்தகூடிய அதிகாரிகளை நீர் கண்டால் என்ன செய்வீர் என்ற போது 

தாங்களே கூறுங்கள் நாயகமே என்று வினவியதற்கு நபியவர்கள் கூறினார்கள் 

தொழுகைக்குரிய நேரம் வந்துவிட்டால் நீர் தொழுது கொள்வீராக 

பின்னர் அந்த தொழுகையை அவர்களோடு மறுபடியும் பெற்றுக் கொண்டால் 

அப்பொழுது நீரும் அவர்களோடு சேர்த்து தொழுது கொள்வீராக 

இரண்டாம் முறை தொழுத தொழுகை உமக்கு உபரியாக ஆகிவிடும் என்றார்கள்


பார்க்க :


رواه مسلم (648)



*மூன்றாவது*


تصحُّ صلاةُ المفترضِ خلفَ المتنفِّل، 

وهو مذهبُ الشافعيَّة  ، 
وروايةٌ عن أحمدَ  ، 

وهو مذهب الظاهرية  ، 

وبه قالتْ طائفةٌ من السَّلف  ، 

واختارَه ابنُ المنذرِ  ، وابنُ تيميَّة ، والشوكانيُّ  ، والصنعانيُّ ، وابنُ باز  ، وابنُ عُثَيمين 


முதலாம் தரத்தில் உள்ள தொழுகையை

இரண்டாம் தரத்தில் உள்ள தொழுகை தொழுபவருக்கு பின்னால் நின்றுகொண்டு தொழுவது 

இது ஷாஃபிஈ போன்ற மத்ஹபின் ஆய்வின்படி தாராளமாக கூடிக் கொள்ளும்


உதாரணமாக தராவீஹ் தொழுகை தொழ வைப்பவருக்கு பின்னால் நின்றுகொண்டு 

இஷாவுடைய தொழுகையை தொழுவது


பார்க்க :


(المجموع)) للنووي (4/271)، 

((مغني المحتاج)) للشربيني (1/253).

(شرح مسلم ) ( 4 / 181 ) .
((الإنصاف)) (2/194).

(المحلى)) (3/140)

((الأوسط)) (4/249).

((الإقناع)) (1/116).

(السيل الجرار)) (1/154).

(سبل السلام)) (1/364).

مجموع فتاوى ابن باز)) (12/179).

مجموع فتاوى ورسائل العثيمين)) (15/171)


இதற்கான ஆதாரங்கள் :


عن جابرِ بنِ عبدِ الله: 

((أنَّ مُعاذَ بنَ جَبلٍ كان يصلِّي مع رسولِ الله صلَّى اللهُ عليه وسلَّم العِشاءَ الآخِرةَ، 

ثم يرجِعُ إلى قَومِه، فيُصلِّي بهم تلك الصَّلاةَ



முஆத் ரலி அவர்கள் நபியோடு இஷா தொழுகையை தொழுதுவிட்டு 

பின்னர் தனது சமுதாயத்திற்கு வந்து அதே தொழுகையை மறுபடியும் தொழ வைத்தார்கள்  

இதில் முதலாவதாக தொழுத தொழுகை ஃபர்ளாக நிறைவேறிவிட்டது 


இரண்டாம் தடவை தொழ வைத்த தொழுகை உபரியாகும் 

அந்த உபரி வணக்கத்திற்கு பின்னால் நின்று கொண்டு அவரின் சமுதாய மக்கள் ஃபர்ளான இஷா தொழுகையை நிலை நாட்டினார்கள்  


பார்க்க :


رواه البخاري (700)، 

ومسلم (465


(كان مُعاذٌ يُصلِّي مع النبيِّ صلَّى اللهُ عليه وسلَّم العِشاءَ، ثم يَطلُع إلى قومِه فيُصلِّيها لهم؛ 

هي له تطوُّعٌ ولهم مكتوبةُ العِشاءِ


முஆத் ரலி அவர்கள் ஒரு சந்தர்ப்பத்தில் நபியோடு இஷா தொழுது விட்டு 

தனது கூட்டத்திற்கு வந்து அதே தொழுகையை உபரியாக தொழ வைத்தார்கள் 

அந்த சமுதாயம் அவருக்கு பின்னால் நின்று கொண்டு பர்ளை நிறைவேற்றிக் கொண்டது


பார்க்க :


رواه الشافعيُّ في ((المسند)) (237)، 

والطحاوي في ((شرح معاني الآثار)) (2360)، 

والدارقطني في ((السنن)) (1075)، 

والبيهقي في ((معرفة السنن والآثار)) (4/153) (1539) 

قال الشافعي كما في ((التلخيص الحبير)) (2/539):

ثابت لا أعلم حديثا يروى من طريق واحد أثبت منه، 
وصحح إسناده الذهبي في ((المهذب)) (2/1017)، 

ومغلطاي في ((شرح ابن ماجه)) (3/613)، 

والعيني في ((نخب الأفكار)) (6/276)، 

وقال ابنُ الملقِّن في ((البدر المنير)) (4/476)

وصححه ابن حجر في ((فتح الباري)) (2/229).


فجمهور الفقهاء ‏(‏ الحنفية والمالكية وهو المختار عند الحنابلة ‏)‏ على عدم جواز اقتداء المفترض بالمتنفل ‏,‏ 



ஆனால் ஹனஃபி மற்றும் மாலிக்கி மற்றும் ஹம்பலி மத்ஹபின் ஆய்வின்படி 

இரண்டாம் தர நிலையில் உள்ள தொழுகையை தொழ வைப்பவருக்கு பின்னால் நின்றுகொண்டு 

முதலாம் தர தொழுகையை தொழுதால் அது நிறைவேறாது

அதாவது நஃபில் தொழ வைப்பவருக்கு பின்னால் நின்று கொண்டு வாஜிப் அல்லது ஃபர்ள் தொழுகையை தொழ முடியாது


இதற்கான ஆதாரங்கள் :


لقوله صلى الله عليه وسلم ‏:‏ 

‏{‏ إنما جعل الإمام ليؤتم به ‏,‏ فلا تختلفوا عليه ‏}‏ 


தொழுகையில் இமாமாக நியமிக்கப்படுவதெல்லாம் அவரை முழுமையாக பின்பற்றுவதற்கு தான் 

ஆகவே நிய்யத்தின் அளவிலும் கூட 

அவருக்கு மாறு செய்யலாகாது என நபியவர்கள் உத்தரவிட்டார்கள்


பார்க்க :


رواه البخاري (734)، 

ومسلم (414

ولقوله عليه السلام ‏:‏ 

‏{‏ الْإِمَامُ ضَامِنٌ ، وَالْمُؤَذِّنُ مُؤْتَمَنٌ ، اللَّهُمَّ أَرْشِدْ الْأَئِمَّةَ وَاغْفِرْ لِلْمُؤَذِّنِينَ )


இமாமானவர் முழுமையான பொறுப்புதாரியாகவும் 

முஅத்தினானவர் நம்பப்படுபவராகவும் இருக்கிறார்கள் 


இறைவா அப்படிப்பட்ட இமாம்களுக்கு நேர்வழி காட்டுவாயாக 

முஅத்தின்களுக்கு பாவ மன்னிப்பை வழங்கிடுவாயாக என்று நபியவர்கள் கூறினார்கள்


பார்க்க :


رواه أبو داود (رقم/517) 

وصححه الألباني في " صحيح أبي داود ‏}‏ 

ومقتضى الحديثين ألا يكون الإمام أضعف حالا من المقتدي

والاختلاف بين نية الإمام والمأموم يمنع الاقتداء عند الأحناف 


ஆக மேற்கண்ட ஹதீஸ்களின் படி இமாம் என்றுமே முக்ததியை விட ஒரு படி உயர்வில் இருக்கிறார் 

அவர் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் முக்ததியை விட பழகீன நிலைக்கு வந்திடக்கூடாது


ஆகவே ஹனஃபி மத்ஹபின் படி இமாமிற்கும் அவரை பின் தொடர்பவருக்கும் மத்தியில் நிய்யத்தின் அளவில் ஏற்ற தாழ்வோடு வேறுபாடு இருந்தால் 

அப்போது اقتداء செல்லாமல் போய்விடும்


البتہ اگر امام سنت یا نفل پڑھ رہا ہے، تو امام ابوحنیفہ رحمہ اللہ کے نزدیک اس کے پیچھے فرض یا واجب پڑھنے والے کی نماز نہیں ہوتی ہے



ஆகவே மேற்கண்ட இமாம்களின் ஆய்வின்படி 

ஜும்ஆ பெருநாள் போன்ற தொழுகையை ஒரே இமாம் பல தடவை தொழ வைத்தால் அப்போது ஷாஃபியீ மத்ஹபின் ஆய்வின்படி 

அவரைப் பின்பற்றி தொழுபவர்களின் பெருநாள் தொழுகை கூடிக் கொள்ளும் 


ஹனஃபி மத்ஹபின் ஆய்வின்படி 

அவரைப் பின்பற்றித் தொழுபவர் களின் தொழுகை செல்லாது போய்விடும்

ஏனெனில் மறுபடியும் ஜும்ஆ & பெருநாள் தொழுகைகளை தொழ வைப்பவரின் தொழுகையானது அவருக்கு உபரியாகவும் 

அவரைப் பின்பற்றி தொழுபவர்களுக்கு அது ஃபர்ளாகவும் வாஜிபாகவும் இருக்கிறது 


இது இவ்விருவர்களின் நிய்யத் அளவிலும் மாறுபடுகிறது 

அதோடு இரண்டாம் தர நிலையிலுள்ள தொழுகையை தொழ வைப்பவருக்கு பின்னால் நின்று கொண்டு 

முதலாம் தர தொழுகையை தொழுவதாகவும் இருக்கிறது

இது அறவே கூடாது, 


பார்க்க :


الدرالمختار : (باب الامامة، ج:1، ص:579، ط:دارالفکر، بیروت۔ )


غنیة المستملی شرح منیة المصلی المشتھر بشرح الکبیر: (ص:251)



اگر امام نے عیدگاہ یا مسجد میں عیدین کی نماز جماعت سے پڑھادی ہے تو دوسری جماعت کا اسی مسجد یا عیدگاہ میں قائم کرنا جائز نہیں ہے:



ஆகவே ஒரு இமாம் பள்ளியில் அல்லது ஈத்காஹ் மைதானத்தில் பெருநாள் தொழுகையை தொழ வைத்து விட்டால் 

மறுபடியும் அதே இடத்தில் அவர் தொழ வைப்பது ஜாயிஸ் ஆகாது


وتجوز إقامۃ صلاۃ العیدین فی موضعین 

وأما إقامتھا فی ثلاثۃ مواضع 

فعند محمد رحمہ اﷲ تعالیٰ تجوز 

وعند أبی یوسف لاتجوز۔ 


பெருநாள் தொழுகையை பல இடங்களில் தொழ வைப்பது கூடும் 

ஆனால் இமாம் மாற்றப்பட வேண்டும்


பார்க்க :


الفتاویٰ الہندیۃ، ج۱،ص:۱۵۰

ایسی صورت میں دوسری جماعت کی گنجائش ہے، 

لیکن اس جماعت کا امام بھی دوسرا ہونا چاہئے، پہلے امام کے پیچھے نماز نہ ہوگی۔ 

ஏற்கனவே பெருநாள் தொழுகையை தொழ வைத்த இமாமுக்குப் பின்னால் நின்று கொண்டு 

மற்றவர்கள் பெருநாள் தொழுகையை தொழக் கூடாது



பார்க்க :


(فتاوی رحیمیہ قدیم ۵؍۳۵، جدید زکریا )


(فتاوی قاسمیہ۶؍۱۵۳)



(لاينبغي أن يصلي غير الخطيب)؛ 

لأنهما كشيء واحد (فإن فعل بأن خطب صبي بإذن السلطان وصلى بالغ جاز) هو المختار".

و في الرد:


"(قوله: لأنهما) أي الخطبة والصلاة كشيء واحد؛ لكونهما شرطًا ومشروطًا، ولا تحقق للمشروط بدون شرطه، 

فالمناسب أن يكون فاعلهما واحدًا ط (قوله: وصلى بالغ) أي بإذن السلطان أيضًا، 

والظاهر أن إذن الصبي له كاف؛ لأنه مأذون بإقامة الجمعة لما في الفتح وغيره من أن الإذن بالخطبة إذن بالصلاة وعلى القلب اهـ 

فيكون مفوضًا إليه إقامتها ولأن تقريره فيها إذن له بإنابة غيره دلالة لعلم السلطان بأنه لاتصح إمامته نعم على القول باشتراط الأهلية وقت الاستنابة لايصح إذنه بها ولا بد له من إذن جديد بعد بلوغه، 



کسی شخص کے لیے ایک مرتبہ جمعہ کی نماز ادا کرلینے کے بعد دوسری جگہ میں خطبہ دینا جائز نہیں۔


அதேபோன்று ஹனஃபி மத்ஹபின் படி 

ஜும்ஆ தொழ வைத்து முடித்துவிட்ட இமாம் 

மறுபடியும் குத்பா கொடுக்க முடியாது

அதாவது ஒரே நேரத்தில் இரண்டு குத்பா செய்யலாகாது


பார்க்க :


الدر المختار وحاشية ابن عابدين (رد المحتار) - (2 / 162):


فتاوی محمویہ  (8 / 269)




ஆக நஃபில் நிய்யத்தில் ஜும்ஆ மற்றும் பெருநாள் தொழுகைகளை தொழுபவருக்குப் பின்னால் 
ஃபர்ழான ஜும்ஆ அல்லது வாஜிபான பெருநாள் தொழுகைகளை தொழுதால் 

ஹனஃபீ சட்டத்தின் படி தொழுகை நிறைவேறாது. 

மீண்டும் அவர் அத்தொழுகைகளை மீட்டித்தொழ வேண்டிய நிலை ஏற்படும், 

இங்கு ஒரு சந்தேகம் எழலாம்

அதாவது 

ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறினார்கள்

முஆத் பின் ஜபல் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களுடன் தொழுதுவிட்டுப் பிறகு (தம் கூட்டத்தாரிடம்) திரும்பிச் சென்று (நபி (ஸல்) அவர்களுக்குப் பின்னால் தொழுத தொழுகையை மீண்டும்) தம் கூட்டத்தாருக்குத் தொழ வைத்தார்கள்.

ஒரு நாள் இரவில் முஆத் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களுடன் இஷாத் தொழுது விட்டுத் தம் கூட்டத்தாரிடம் திரும்பிச் சென்று அவர்களுக்கு (அதே இஷாவை)த் தொழுவித்தார்கள்.

அதில் (பெரிய அத்தியாயமான) அல்-பகரா எனும் (2ஆவது) அத்தியாயத்தை ஓத ஆரம்பித்தார்கள். 

அப்போது ஒரு மனிதர் (தொழுகையிலிருந்து) விலகி ஸலாம் கொடுத்துவிட்டு

பின்னர் தனியாகத் தொழுது திரும்பிச் சென்றுவிட்டார். 

மக்கள் அவரிடம், இன்னாரே, 

நீர் நயவஞ்சகர் (முனாஃபிக்) ஆகிவிட்டீரா? என்று கேட்டார்கள். 

அதற்கு அந்த மனிதர், இல்லை. 

அல்லாஹ்வின் மீது சத்தியமாக! 

(நான் நயவஞ்சகன் அல்லன்). 

நிச்சயம் நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று (இது குறித்து) தெரிவிப்பேன் எனக் கூறினார்.

அவ்வாறே அவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று, 

அல்லாஹ்வின் தூதரே! 

நாங்கள் பகல் வேளைகளில் வேலைவெட்டிகளில் ஈடுபடுகின்றவர்கள். 

நாங்கள் ஒட்டகங்கள் மூலம் தண்ணீர் பாய்ச்சுவோம். 

இந்நிலையில் முஆத் பின் ஜபல் அவர்கள் (நேற்றிரவு) உங்களுடன் இஷாத் தொழுதுவிட்டு வந்து (எங்களுக்குத் தொழுவித்தார்கள் 

அதில் பெரிய அத்தியாயமான) அல்பகரா அத்தியாயத்தை ஓதலானார்கள் 

(எனவேதான் விலகிச் சென்று தனியாகத் தொழுதேன்) என்று கூறினார்.

உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முஆத் (ரலி) அவர்களை நோக்கித் திரும்பி, 

முஆதே! (நீரென்ன) குழப்பவாதியா? என்று கேட்டுவிட்டு, 

(நீர் மக்களுக்குத் தலைமை தாங்கித் தொழுவிக்கும் போது சற்று சிறிய அத்தியாயமான) இன்ன அத்தியாயத்தை ஓதுவீராக; இன்ன அத்தியாயத்தை ஓதுவீராக என்று சொன்னார்கள்.
 

(ஸஹீஹ் முஸ்லிம் : 795)


இந்த ஹதீஸில் முஆத் (ரழி) அவர்கள் முதலில் நபியவர்களுடன் இஷா தொழுதுவிட்டு, 
பிறகு தன் கூட்டத்தாருக்கு அதே இஷாவை தொழுக வைத்துள்ளார்களே. அது எப்படி கூடும்? 


இதற்கு அல்லாமா அய்னீ (ரஹ்), 
இமாம் குர்துபீ (ரஹ்), 
இமாம் இப்னு தைமிய்யா (ரஹ்) போன்றோர் கூறும் விளக்கமானது


முஸ்னது அஹ்மது போன்ற அறிவிப்புகளில் 

"முஆதே! ஒன்று என்னுடன் (ஃபர்ழை) தொழுகுங்கள். 

அல்லது உங்கள் கூட்டத்தாருக்கு சுருக்கமாக தொழ வையுங்கள்" என்று கூறியதாக வந்துள்ளது. 


நபியவர்கள் தன்னுடன் ஃபர்ழு நிய்யத்தில் இஷா தொழுதுவிட்டு, 

மீண்டும் தன் கூட்டத்தாருக்கு தொழ வைப்பதைதான் தடுக்கிறார்கள். 

நஃபில் நிய்யத்தில் தன்னுடன் தொழுவதை தடுக்கவில்லை. 

எனவே அதன் பின் முஆத் (ரழி) நஃபில் நிய்யத்தில் நபியவர்களுடன் இஷா தொழுதுவிட்டு, 
ஃபர்ழு நிய்யத்தில் தன் கூட்டத்தாருக்கு இஷா தொழ வைத்தார்கள். 
என்று விளக்கம் தரப்படுகிறது 

ஆயினும் ஷாஃபியீ மத்ஹபைச் சார்ந்த அறிஞர்கள் இதனை மறுக்கிறார்கள்



والله اعلم بالصواب 


பதிவு :
فاسألوا اهل الذكر வாட்ஸ் அப் தளம்

13-07-2020
22-12-1441 வியாழன் 


عبد الرحیم انواری 2008
عفا اللہ عنہ 

دعا کی درخواست ہے

Comments

Popular posts from this blog

ஸஜ்தா திலாவத் என்றால் என்ன?

தல்கீன் என்றால் என்ன ?

ரிஜ்க் எவ்வாறு கிடைக்கும்?